Tooth Pain Causes: ஒருவருக்கு எந்த காரணங்களுக்காக பல் வலி வருகிறது தெரியுமா?

இது தவிர ஒருவருக்கு பல் வலி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. பல் வலிக்கான காரணத்தை தெரிந்து, அதற்கேற்ப சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தால், பல தீவிர பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

Tooth Pain Causes: நிறைய பேர் பல் வலியால் அடிக்கடி அவதிப்படுவதுண்டு. பல் வலி வந்தால், அதை சாதாரணமாக நினைத்து புறக்கணிக்கக்கூடாது. ஏனெனில் பல் வலியானது சில தீவிரமான பிரச்சனையின் முக்கிய அறிகுறியாகவும் இருக்கலாம். உதாரணமாக, ஒருவருக்கு இடது பக்க தாடையில் வலி ஏற்பட்டால், அது மாரடைப்புடன் தொடர்புடையது என்பது தெரியுமா? எனவே இடது பக்கத்தில் பல் வலியை அடிக்கடி சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

Tooth Pain Causes: Possible Causes Of Toothache And Solution In Tamil

இது தவிர ஒருவருக்கு பல் வலி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. பல் வலிக்கான காரணத்தை தெரிந்து, அதற்கேற்ப சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தால், பல தீவிர பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். நீங்கள் பல் வலியை இதுவரை புறக்கணித்து வந்தால், இனிமேல் அந்த தவறை செய்யாதீர்கள். இப்போது ஒருவருக்கு எந்த காரணங்களுக்கு எல்லாம் பல் வலி வரும் என்பதையும், அதற்கான சில தீர்வுகளையும் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பல் சொத்தை

பல் சொத்தை

பல் வலிக்கான முதன்மையான காரணமாக இருப்பது சொத்தை பல். மோசமான வாய் சுகாதாரம் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளும் போது ஒருவரது பற்கள் சொத்தையாகின்றன. பற்கள் சொத்தையாகும் போது பற்களின் எனாமல் உடைந்து, பற்களில் குழிகளை உண்டாக்குகிறது. இந்த குழிகளில் உண்ணும் உணவுகள் அடிக்கடி சிக்கும் போது, அது கடுமையான பல் வலியை ஏற்படுத்தும்.

தீர்வு: சொத்தையான பற்களை சரிசெய்ய முடியாது. வேண்டுமானால் மருத்துவரிடம் சென்றால், பற்களில் உள்ள சொத்தையை நீக்கிவிட்டு, ஃபில்லிங் கொண்டு நிரப்புவார். ஆனால் இந்த சொத்தை பல்லை சரிசெய்ய முயற்சிக்காவிட்டால், அந்த சொத்தை நரம்புகளையும் பாதித்து, ரூட் கேனல் செயல்முறை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளிவிடும்.

உடைந்த பல்

உடைந்த பல்

சில சமயங்களில் உடைந்த பற்களும் பல் வலியை உண்டாக்கும். பற்கள் உடைவதற்கு சொத்தை மட்டுமின்றி, பற்களை கொறிப்பது (Bruxism) போன்றவையும் காரணமாக இருக்கலாம். உடைந்த பற்களை ஆரம்பத்திலேயே கண்டுகொள்ளாமல் விடும் போது, அந்த பற்கள் சொத்தையாக ஆரம்பிப்பதோடு, உடைந்த பற்களின் இடுக்குகளில் உண்ணும் உணவுகள் சிக்கிக் கொண்டு, அது அடிக்கடி கடுமையான வலியை உண்டாக்கும்.

தீர்வு: உங்களுக்கு பற்கள் உடைந்திருந்தால் உடனே மருத்துவரை அணுகி, அந்த பற்களை சரிசெய்ய பற்களின் நிலையைப் பொறுத்து டென்டல் ஃபில்லிங், ரூட் கேனல், க்ரௌன், பிரிட்ஜ் போன்ற ஒருசில செயல்முறைகளை மருத்துவர் பரிந்துரைப்பார். அவற்றில் உங்களுக்கு எது சிறந்ததென்று தோன்றுகிறதோ, அதை மேற்கொண்டு பற்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

ஈறு பிரச்சனைகள்

ஈறு பிரச்சனைகள்

ஈறுகளில் நோய் ஏதேனும் இருப்பின், அது பற்களின் கீழ் எலும்பு, தசைநார்கள் உட்பட வாயின் அனைத்து பகுதிகளிலும் கடுமையான வலியை உண்டாக்கும். உங்களுக்கு ஈறுகளில் வலி ஏற்படுவது போன்று இருந்து, இரத்தக்கசிவு ஏற்படுவதற்கு முன் அதை சரிசெய்ய முயற்சிக்க வேண்டும். இரத்தக்கசிவு ஏற்பட்டால், அது முற்றிய நிலையின் அறிகுறியாகும். இம்மாதிரியான நிலையில் இதற்கு தீர்வு காண உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

வாய்வழி தொற்று

வாய்வழி தொற்று

மோசமான வாய் சுகாதாரம் காரணமாக சிலரது வாயில் தொற்றுக்கள் மோசமாக ஏற்பட்டிருக்கும். சில சமயங்களில் இந்த தொற்றுகளானது உடலின் பிற பகுதிகளுக்கும் பரவும். வாயில் கடுமையான தொற்றுகள் ஏற்பட்டுள்ளதை வெளிக்காட்டும் ஒரு அறிகுறி தான் ஈறுகளில் சீழ் உருவாவது மற்றும் கடுமையான வலியை சந்திப்பது. இந்நிலையில் அதற்கான ஒரே தீர்வு உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொண்டு, வாய்வழி மருந்துகளை எடுப்பது தான்.

ஞானப் பற்கள்

ஞானப் பற்கள்

ஞான பற்களால் சந்திக்கும் வலி மிகவும் வேதனைமிக்கதாக இருக்கும். ஏனெனில் ஞானப் பற்களானது கடைவாய் பற்களின் கடைசியில் மிகவும் குறுகிய பகுதியில் ஈறுகளை கிழித்துக் கொண்டு முளைக்கும். இப்படி முளைகும் போது அது தீவிரமான தாடை வலி, வீக்கம் மற்றும் தொற்றுக்களையும் உண்டாக்கும். இந்த ஞானப்பல்லால் ஏற்படும் வலிக்கான ஒரே தீர்வு, அதை அகற்றுவது தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, February 10, 2023, 13:47 [IST]
Desktop Bottom Promotion