Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
கழுத்தில் இந்த மாதிரியான பிரச்சனையை சந்திக்குறீங்களா? அப்ப அது தைராய்டு புற்றுநோயா இருக்கலாம்...
தைராய்டு புற்றுநோய் என்பது தைராய்டில் உள்ள செல்களின் அபரிமிதமான வளர்ச்சியாகும். தைராய்டு புற்றுநோய் முதலில் எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாது.
உலகில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக தைராய்டு புற்றுநோயின் விகிதம் அதிகரித்து வருகிறது. ஆனால் பலருக்கும் தைராய்டு புற்றுநோய் குறித்து தெரியவில்லை. தைராய்டு புற்றுநோய் என்பது தைராய்டில் உள்ள செல்களின் அபரிமிதமான வளர்ச்சியாகும். தைராய்டு புற்றுநோய் முதலில் எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாது. ஆனால் அந்த புற்றுநோய் செல்கள் வளரும் போது அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.

தைராய்டு என்பது கழுத்துப் பகுதியில் உள்ள பட்டாம்பூச்சி வடிவிலான சுரப்பியாகும். இந்த சுரப்பி இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை மற்றும் உடல் எடை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. இந்த தைராய்டில் பல வகையான புற்றுநோய்கள் உள்ளன. அதில் பெரும்பாலான வகைகள் மெதுவாக வளரும், சில மிகவும் கடுமையாக இருக்கும். ஆனால் பெரும்பாலான தைராய்டு புற்றுநோயை சிகிச்சைகள் மூலம் குணப்படுத்திட முடியும். இப்போது தைராய்டு புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் அதற்கான காரணங்களைக் காண்போம்.

தைராய்டு புற்றுநோய்க்கான காரணங்கள்
தைராய்டில் உள்ள செல்களின் டிஎன்ஏவில் மாற்றங்கள் ஏற்படும் போது தைராய்டு புற்றுநோய் ஏற்படுகிறது. செல்களின் டிஎன்ஏ தான் ஒரு செல் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லும். இதில் மாற்றங்கள் ஏற்படும் போது, செல்கள் வேகமாக வளர ஆரம்பிக்கும். மேலும் ஆரோக்கியமான செல்கள் இறந்து குவிய ஆரம்பித்து கட்டிகளை உருவாக்கும். இந்த கட்டிகளான அகில் உள்ள திசுக்களை ஆக்கிரமித்து, அப்படியே பரவலாம். சில நேரங்களில் புற்றுநோய் செல்கள் கழுத்தைத் தாண்டி, நுரையீரல், எலும்புகள் மற்றும் உடலின் பிற பகுதிகளுக்கும் பரவலாம். பெரும்பாலான தைராய்டு புற்றுநோய்களுக்கு, புற்றுநோயை ஏற்படுத்தும் டிஎன்ஏ மாற்றங்கள் எதனால் ஏற்படுகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

யாருக்கெல்லாம் தைராய்டு புற்றுநோய் வர வாய்ப்புள்ளது?
* தைராய்டு புற்றுநோய் ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகம் வரும். இந்த புற்றுநோய் ஈஸ்ட்ரோஜென் என்னும் ஹார்மோனுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகமாக இருக்கும்.
* அளவுக்கு அதிகமான கதிர்வீச்சு வெளிப்பாடு. குறிப்பாக தலை மற்றும் கழுத்துப் பகுதியில் எடுக்கும் கதிர்வீச்சு சிகிச்சைகள் தைராய்டு புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்.
* 25 முதல் 65 வயது வரையிலானவருக்கு வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது.

தைராய்டு புற்றுநோயின் அறிகுறிகள்:
பெரும்பாலான தைராய்டு புற்றுநோய்கள் ஆரம்பத்தில் எந்த ஒரு அறிகுறிகளையும் வெளிக்காட்டாது. தைராய்டு புற்றுநோய் செல்கள் வளர ஆரம்பிக்கும் போது தான் அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். அந்த அறிகுறிகள் பின்வருமாறு:
* கழுத்துப் பகுதிகள் கட்டிகள் தென்படும்
* சட்டை காலர்கள் மிகவும் இறுக்கமாக மாறுவது போன்ற உணர்வு
* குரலில் ஏற்படும் மாற்றங்கள்
* விழுங்குவதில் சிரமம்
* கழுத்தில் வீங்கிய நிணநீர் முனைகள்
* கழுத்து மற்றும் தொண்டையில் வலி

எப்போது மருத்துவரை காண வேண்டும்?
மேலே கொடுக்கப்பட்டுள்ள தைராய்டு புற்றுநோயின் அறிகுறிகளை ஒருவர் அனுபவித்தால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். பெரும்பாலும் தைராய்டு புற்றுநோய் பரவாது. ஆனால் அந்த புற்றுநோயை கவனிக்காமல் விடும் போது, அது கழுத்தில் உள்ள நிணநீர் முனைகள், நுரையீரல், எலும்புகள், மூளை, கல்லீரல் மற்றும் சருமத்தில் பரவ வாய்ப்புள்ளது. எனவே கவனமாக இருங்கள்.



Click it and Unblock the Notifications