அசைவ உணவு அதிக சாப்பிடறவரா நீங்க? அப்ப உங்க கிட்னிய பத்திரமா பாத்துக்கோங்க...!

அசைவ உணவுகள் நமது ஆரோக்கியத்திற்கு அவசியமான பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. ஆனால் சைவமோ, அசைவமோ எதுவாக இருந்தாலும் அளவிற்கு அதிகமாக சாப்பிடக்கூடாது.

இந்த உலகத்தில் சைவ உணவு சாப்பிடுபவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்களோ அதைவிட அதிகமாக அசைவ உணவை விரும்பி சாப்பிடுபவர்கள் இருக்கிறார்கள். சைவம் மற்றும் அசைவம் இரண்டு உணவுகளிம் நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும் சுவையை காரணம் காட்டி அசைவ உணவை அதிகம் சாப்பிடிடுபவர்களே இங்கு அதிகம்.

அசைவ உணவுகள் நமது ஆரோக்கியத்திற்கு அவசியமான பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. ஆனால் சைவமோ, அசைவமோ எதுவாக இருந்தாலும் அளவிற்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. இரண்டுமே அளவைத் தாண்டும்போது பக்க விளைவுகளை உண்டாக்கும். இந்த பதிவில் அசைவ உணவு அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எப்போதும் தூக்கம்

எப்போதும் தூக்கம்

புரோட்டின் உங்களுக்கு அதிக ஆற்றலை வழங்கும் என்பது நிரூபிக்கப்பட்டது. ஆனால் அதிகளவு இறைச்சி சாப்பிடுவது அதன் பலனை உங்களுக்கு அளிக்காது. ஏனெனில் இறைச்சி ஜீரணிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வதால் இதிலிருக்கும் புரோட்டின் உடனடி ஊக்கத்தை அளிக்காது. இது கரோஹைட்ரேட்டுகளுக்கு செல்கிறது, அவை உடலின் மிக எளிதாக கிடைக்கக்கூடிய எரிசக்தி மூலமான குளுக்கோஸாக உடைக்கின்றன. உங்கள் மூளை ஆற்றலுக்காக குளுக்கோஸை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால், உங்கள் உணவில் மெதுவாக ஜீரணிக்கக்கூடிய புரதத்தைக் கொண்டிருக்கும்போது அதன் ஆற்றல் வழங்கல் பின்தங்கியிருக்கும். இந்த புரதம் உங்கள் மூளைக்குச் செல்ல அதிக நேரம் எடுக்கும், எனவே உங்களின் கவனம் சிதறும். தசைகளும் குளுகோஸில்தான் இயங்குகிறது. இதனால் சோர்வு மற்றும் தூக்கம் ஏற்படும்.

உங்கள் தலைமுடியும், சருமம் அழகாக இருக்காது

உங்கள் தலைமுடியும், சருமம் அழகாக இருக்காது

நீங்கள் இறைச்சியை அதிகம் எடுத்துக் கொள்ளும்போது மற்ற உணவுகளை தவிர்ப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. வைட்டமின் சி இறைச்சியில் மிகவும் குறைவாகவே உள்ளது, எனவே மற்ற பொருட்களை தவிர்த்து இறைச்சியை சாப்பிடும் போது உங்கள் உடலில் வைட்டமின் பற்றாக்குறை ஏற்படும். தோல், முடி, நகங்கள், எலும்புகள் மற்றும் பலவற்றிற்கு கட்டமைப்பைக் கொடுக்கும் கொலாஜன் என்ற புரதத்தை உருவாக்குவதில் வைட்டமின் சி முக்கியப்பங்கு வகிக்கிறது. வைட்டமின் சி பற்றாக்குறை ஏற்படும்போது உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை நீங்கள் காணலாம். உங்கள் சருமம் கடினமாகவும், சமமாற்றாதவவும் மாறலாம், உங்கள் சருமத்தில் வளரும் முடியிலும் மாற்றத்தை கவனிக்கலாம். எனவே அசைவ உணவு சாப்பிட்டாலும் சைவ உணவை ஒருபோதும் தவிர்த்து விடாதீர்கள்.

அடிக்கடி உடல்நிலை மோசமாகலாம்

அடிக்கடி உடல்நிலை மோசமாகலாம்

வைட்டமின் சி குறைபாடு உங்கள் சருமத்தில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை, உங்களின் ஆரோக்கியத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். நீங்கள் கீட்டோ டயட்டை பின்பற்றும்போது அதிக பழங்களை சாப்பிடமாட்டீர்கள். பழங்கள் வைட்டமின் சி-யின் முக்கியமான ஆதாரங்களில் ஒன்றாகும். எனவே இறைச்சி மட்டும் சாப்பிடும்போது நீங்கள் அடிக்கடி நோயில் விழ வாய்ப்புள்ளது. இறைச்சி சாப்பிட்டாலும் ப்ரோக்கோலி, மிளகுத்தூள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.

மலச்சிக்கல்

மலச்சிக்கல்

காய்கறிகள், முழுதானியங்கள், பழங்கள் போன்றவற்றில் இருக்கும் அளவிற்கு நார்ச்சத்துக்கள் இல்லை. மலச்சிக்கல் மற்றும் வலி நிறைந்த குடல் இயக்கங்கள் போன்றவை குறைவான நார்ச்சத்துக்களால் ஏற்படும் ஆபத்துகளாகும். முழுதானியங்கள் மற்றும் பழங்கள் சாப்பிடுவதன் மூலம் இழந்த நார்சத்துக்களை நீங்கள் மீண்டும் பெறலாம்.

இதயக் கோளாறுகள்

இதயக் கோளாறுகள்

நார்சத்துக்கள் மூலம் கிடைக்கும் மற்றொரு பலன் என்னவெனில் இது உங்கள் உடல் கொழுப்பை உறிஞ்சாமல் தடுக்கும், இது உங்கள் இதயத்தை பாதுகாக்கும். குறிப்பாக பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை சாப்பிடும்போது அதிலிருந்து உங்களுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் மிகவும் குறைவுதான். இதில் அதிகளவு நிறைவுற்ற கொழுப்புகள் இருக்கும். இதனால் உங்கள் உடலில் கெட்ட கொழுப்புகள் என்று அழைக்கப்படும் LDL கொழுப்புகளின் அளவு அதிகரிக்கும். இது உங்கள் இதயத்திற்கு நல்லதல்ல.

 வீக்கம்

வீக்கம்

இறைச்சியில் இருக்கும் நிறைவுற்ற கொழுப்புகள் உங்கள் உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும். மேலும் இறைச்சியில் வீக்கத்திற்கு எதிராக போராடும் ஆக்சிஜனேற்றிகள் மிகவும் குறைவாக உள்ளது. ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துப்படி இறைச்சி சாப்பிட்டாலும் தினமும் ஒரு காய்கறி அல்லது பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

சிறுநீரகக் கற்கள்

சிறுநீரகக் கற்கள்

அதிகப்படியான புரதம் உங்களுக்கு சிறுநீரகக் கற்களை ஏற்படுத்தும். குறிப்பாக இறைச்சியில் இருந்து கிடைக்கும் புரோட்டினில் ப்யூரின்ஸ் எனப்படும் சேர்மங்களால் நிரம்பியுள்ளன, அவை யூரிக் அமிலமாக உடைகின்றன; அதிகப்படியான யூரிக் அமிலம் சிறுநீரக கற்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது சிறுநீரக பிரச்சினை இருந்தால் நீங்கள் எடுத்துக்கொள்ளும் அசைவ உணவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

எடை அதிகரிப்பு

எடை அதிகரிப்பு

உங்கள் உடலை நீங்கள் நினைத்த வடிவத்திற்கு மாற்ற புரோட்டின் மிகவும் அவசியம் என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது உண்மைதான் என்றாலும், நீங்கள் விரும்பத்தகாத பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். உங்கள் உடலுக்குத் தேவையானதை விட அதிக புரதத்தை நீங்கள் சாப்பிட்டால் அது உங்கள் உடலில் கொழுப்பாக மாறும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion