Latest Updates
-
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது!
ஆண்கள் உடலுறவுக்கு பின் இந்த விஷயங்களில் ஒன்றை செய்வது அவர்களுக்கு இழந்த ஆற்றலை மீட்டுத்தருமாம்...!
உடலுறவு என்பது ஆண்-பெண் இருவருக்குமே மகிழ்ச்சிகரமான அனுபவத்தைக் கொடுப்பதாகும். உடலுறவு என்பது வெறும் உடல்ரீதியான இன்பம் மட்டுமல்ல, அதற்குப் பின்னால் பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன.
உடலுறவு என்பது ஆண்-பெண் இருவருக்குமே மகிழ்ச்சிகரமான அனுபவத்தைக் கொடுப்பதாகும். உடலுறவு என்பது வெறும் உடல்ரீதியான இன்பம் மட்டுமல்ல, அதற்குப் பின்னால் பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. அந்த நன்மைகளை பெற உடலுறவுக்குப் பின் சில விஷயங்களை செய்ய வேண்டும் மற்றும் சில விஷயங்களை செய்யக்கூடாது.

ஆண்களைப் பொறுத்தவரை அவர்களின் உச்சக்கட்டத்திற்குப் பிறகு கவனம் செலுத்த வேண்டிய சில விஷயங்கள் உள்ளது. உடலுறவுக்கு பின் இந்த விஷயங்களில் ஒன்றை செய்வது ஒவ்வொரு முறையும் ஆண்களுக்கு ஆரோக்கியமான உடலுறவு அனுபவத்தைக் கொடுக்கும். ஆண்கள் உடலுறவுக்குப் பின் அவசியம் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

வாழைப்பழம் சாப்பிட வேண்டும்
பிடிப்புகள் ஏற்படுவது உடலுறவின் சில பக்க விளைவுகளாகும். எனவே உடலுறவின் போது மற்றும் அதற்குப் பிறகு தசைப்பிடிப்பு அல்லது பிடிப்புகள் ஏற்படுவதைத் தடுக்க வாழைப்பழம் சாப்பிட்டு தண்ணீர் குடிக்க வேண்டும். ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துப்படி, வாழைப்பழத்தில் ப்ரோமெலைன் என்சைம் உள்ளது என்று சில ஆய்வுகள் கண்டறிந்துள்ளன, இது ஒரு ஆணின் லிபிடோவை அதிகரிக்கிறது. பாலியல் ஹார்மோன் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்திக்கு அவசியமான ரிபோஃப்ளேவின் போன்ற பி வைட்டமின்களும் அவற்றில் நிறைந்துள்ளன.

ஆணுறுப்பை சுத்தம் செய்ய வேண்டும்
ஆணுறுப்பை ஆரோக்கியமாக பராமரிப்பதில் பல ஆண்கள் கவனக்குறைவாகவே இருக்கிறார்கள். உடலுறவுக்குப் பிறகு ஆண்குறியை சோப்பு மற்றும் தண்ணீரால் கழுவுமாறு ஆண்களுக்கு, குறிப்பாக விருத்தசேதனம் செய்யாத ஆண்களுக்கு பாலியல் வல்லுநர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். அவ்வாறு செய்யத் தவறினால் தொற்று மற்றும் பிற நோய்கள் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மோசமான ஆணுறுப்பு சுகாதாரத்தால் நோய்த்தொற்றுகள், வீக்கம், முன்தோல் குறுக்கம் மற்றும் கட்டிகள் கூட ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

தண்ணீர் குடிக்க வேண்டும்
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற தண்ணீர் தேவை. ஆண்குறிக்கு இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் விநியோகத்தை நல்ல அளவில் பராமரிக்க போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லையெனில், உடலுறவுக்கு பின் ஆண்கள் சோர்வாக உணர்வார்கள்.

குட்டித் தூக்கம்
பெரும்பாலான ஆண்கள் இதை எப்படியும் செய்வார்கள். ஏனெனில் உடலுறவின் போது, வாசோபிரசின் என்ற ஹார்மோன், இரத்த நாளங்களை இறுக்கமாக்கி, உடலின் ஹோமியோஸ்டாசிஸில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஹார்மோன் நேரடியாக மூளையில் வெளியிடப்படுகிறது மற்றும் உடலைத் தளர்த்தும்.இதனால் ஆண்கள் உடலுறவிற்கு பின் ஆண்கள் லேசான மயக்க நிலைக்கு ஆளாகிறார்கள்.

சியா விதைகளை சாப்பிட வேண்டும்
இந்த விதைகள் பல ஊட்டச் சத்துக்கள் நிறைந்திருப்பதுடன் ஆற்றல் மையமாகவும் இருக்கிறது. சியா விதைகளை உட்கொள்வது ஆற்றலை அதிகரிக்கவும், மீண்டும் புத்துணர்ச்சியை உருவாக்கவும் சிறந்த வழியாகும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். ஒருவேளை உங்களுக்கு சியா விதைகள் கிடைக்கவில்லை என்றால் எள் அல்லது பூசணி விதைகளை சாப்பிடுங்கள்.



Click it and Unblock the Notifications