Latest Updates
-
வாஸ்துப்படி, ஃப்ரிட்ஜ்ஜின் மேல் இந்த பொருட்களை ஒருபோதும் வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை அதிகரிக்கும்.. -
Malai Ice Cream: கொளுத்துற வெயிலுக்கு வெறும் 4 பொருளை வெச்சு குளுகுளு-ன்னு இப்படி ஐஸ்க்ரீம் செய்யுங்க.. -
வெயிலால் உங்க கை கருப்பா மாறுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்.. -
உங்களுக்கு உடம்பு சூடு பிடிக்கக்கூடாதா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த 4 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க! -
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.! -
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா?
ஒரே நாளில் தமிழ்நாட்டில் கிடுகிடுவென உயர்ந்த ஓமிக்ரான் நோயாளிகளின் எண்ணிக்கை... அடுத்த அதிர்ச்சி!
கொரோனா அறிகுறிகளில் பல ஓமிக்ரானுக்கும் உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் தொண்டை வலி முக்கியமான அறிகுறியாக உள்ளது. மேலும், தொண்டை புண், உடல்வலி, தலைவலிம், சோர்வு, சளி, தும்மல் மற்றும் காய்ச்சல் அறிகுறியாக கூறப்படுகிறது.
2019ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளும் பாதிப்புகளும் அதிகமாக இருந்தது. உலக நாடுகள் முழுவதும் பில்லியன்கணக்கான மக்கள் கோவிட் -19 தொற்றால் உயிரிழந்தனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துவரும் நிலையில், கொரோனா உருமாறி இன்னும் தொற்று பரவிவருகிறது. கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதில் இருந்து, புதிய மாறுபாடுகள் மற்றும் பிறழ்வுகள் தொடர்ந்து வெளிப்பட்டு வருகின்றன, இதுவரை கண்டறியப்பட்ட மாறுபாடுகளில் டெல்டா மாறுபாடு அனைத்திலும் மிகவும் ஆபத்தானது எனக்கூறப்பட்டது.

தமிழகத்தில் தற்போது ஓமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 33 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

வேகமாக பரவக்கூடியது
ஒரு புதிய கோவிட்-19 மாறுபாடு "ஓமிக்ரான்" உலகின் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் பிறழ்வு மிகவும் ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. ஓமிக்ரானின் அறிகுறிகள் டெல்டாவை விட லேசானவை. ஆனால் இது முந்தைய மாறுபாட்டை விட 7 மடங்கு பரவக்கூடியதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

உலக நாடுகளில் ஓமிக்ரான்
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வகை கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகளுக்கு பரவியிருக்கிறது. அமெரிக்கா, நைஜீரியா, பிரிட்டன், இந்தியா போன்ற நாடுகளில் வேகமாக பரவிவருகிறது. தற்போது இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் ஓமிக்ரான் பாதிப்பு
தமிழகத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 34 பேரில் 26 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். மதுரையில் 4 பேருக்கும், திருவண்ணாமலையில் 2 பேருக்கும் சேலத்தில் ஒருவருக்கும் ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு அறிகுறிகள் இல்லாத ஓமிக்ரான் தொற்று ஏற்பட்டுளளதாக கூறப்படுகிறது.

ஓமிக்ரான் அறிகுறிகள்
கொரோனா அறிகுறிகளில் பல ஓமிக்ரானுக்கும் உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் தொண்டை வலி முக்கியமான அறிகுறியாக உள்ளது. மேலும், தொண்டை புண், உடல்வலி, தலைவலிம், சோர்வு, சளி, தும்மல் மற்றும் காய்ச்சல் அறிகுறியாக கூறப்படுகிறது. வாசனையின்மை,சுவை இழப்பு, அல்லது கடுமையான காய்ச்சல் பற்றி யாரும் குறிப்பிடவில்லை. ஓமிக்ரான் அறிகுறிகள் பற்றி சரியான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.

இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு
இந்தியாவில் 236 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு இன்று காலையில் தெரிவித்திருந்த நிலையில், தமிழகத்தில் 33 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், தற்போது 266 எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நாட்டிலையே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 65 பேரும், டெல்லியில் 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 34 பேருக்கு ஓமிக்ரான் உறுதியாகியுள்ளதால், மூன்றாவது இடத்தில் உள்ளது. தெலுங்கானா 24, கர்நாடகம் 19, ராஜஸ்தான் 21, கேரளா 15, குஜராத் 14, ஜம்மு - காஷ்மீர் 3, ஒடிசா 3, உத்தரப் பிரதேசம் 2, ஆந்திரப் பிரதேசம் 2, ஒடிசா 2 , சண்டிகர், லடாக், உத்தராகண்ட் ,மேற்கு வங்கத்தில் தலா ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி குறிப்பு
இந்தியா முழுவதும் ஓமிக்ரான் வேகமாக பரவி வருவதால் மக்கள் விழிப்புர்ணவுடன் இருக்க வேண்டும். ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறு அறிகுறிகள் மட்டுமே காணப்படுகிறது. ஓமிக்ரான் பரவல் மிக வேகமாக இருப்பதால், மக்கள் அச்சப்படாமல் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது மற்றும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



Click it and Unblock the Notifications











