Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
தினமும் உடல் சோர்வா இருக்கா? அப்ப உடம்புல இந்த சத்து குறைவா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்...
ஜிங்க் குறைபாட்டை போக்க மாத்திரைகள் மட்டுமின்றி, ஒருசில உணவுகளும் உதவி புரியும். இப்போது ஜிங்க் குறைபாட்டின் அறிகுறிகளையும், அந்த குறைபாட்டைப் போக்க உதவும் உணவுகள் குறித்தும் காண்போம்.
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் ஊட்டச்சத்துக்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. இந்த ஊட்டச்சத்துக்களில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் ஜிங்க். உடலுக்கு ஜிங்க் பல வழிகளில் நன்மை அளிக்கிறது. அன்றாட உடல் செயல்பாடுகளுக்கு ஜிங்க் சிறிய அளவில் அவசியம் தேவைப்படுகிறது. உதாரணமாக, இது தசைகள் மற்றும் திசுக்களின் வளர்ச்சி, ஹார்மோன்களின் உற்பத்தி, நோயெதிர்ப்பு சக்தியை பராமரிப்பது மற்றும் செரிமானத்தை எளிதாக்குவது என்று பல செயல்பாடுகளுக்கு ஜிங்க் அவசியமாகும்.

உலகளவில் நோய்களை உண்டாக்கும் காரணிகளில் ஜிங்க் குறைபாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஜிங்க் உடலின் ஒவ்வொரு செல், உறுப்பு, எலும்பு, திசு மற்றும் உடலின் திரவங்களிலும் உள்ளது. எனவே உடலை ஆரோக்கியமாக பராமரிக்க தினமும் ஜிங்க் சத்தை உட்கொள்ள வேண்டும். ஒருவரது உடலில் ஜிங்க் மிகவும் குறைவாக இருந்தால், அது பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். ஜிங்க் குறைபாட்டை போக்க மாத்திரைகள் மட்டுமின்றி, ஒருசில உணவுகளும் உதவி புரியும். இப்போது ஜிங்க் குறைபாட்டின் அறிகுறிகளையும், அந்த குறைபாட்டைப் போக்க உதவும் உணவுகள் குறித்தும் காண்போம்.

பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி
வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பராமரிப்பதில் ஜிங்க் முக்கிய பங்கை வகிக்கிறது. குறிப்பாக டி-செல்களின் வளர்ச்சிக்கு இது அவசியமானது மற்றும் ஆபத்தான பாக்டீரியா மற்றும் வைரஸ்களைக் கொல்லும் வெள்ளை இரத்த அணுக்களுக்கு இச்சத்து மிகவும் முக்கியமானது.

வயிற்றுப்போக்கு
ஜிங்க் குறைபாட்டினால் நோயெதிர்ப்பு சக்தி குறைவதால், தொடர்ந்து வயிற்றுப்போக்கு பிரச்சனையை சந்திக்கக்கூடும். மேலும் இச்சத்து குறைபாட்டின் காரணமாக உடலில் பாக்டீரியா தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

வளர்ச்சி குறைபாடு
ஒருவரது வளர்ச்சிக்கு ஜிங்க் சத்து மிகவும் அவசியம். ஆனால் இச்சத்து உடலில் மிகவும் குறைவான அளவில் இருந்தால், அது வளர்ச்சியில் தாமதத்தை ஏற்படுத்தும். எனவே வயதிற்கு ஏற்ப வளர்ச்சியை காணவில்லை என்றால் அதற்கு ஜிங்க் சத்து குறைபாடும் ஓர் காரணம்.

பசியின்மை
உங்களுக்கு வரவர பசி எடுப்பதில்லையா? வழக்கத்தை விட குறைவான அளவில் பசியை உணர்கிறீர்களா? அப்படியானால் உங்கள் உடலில் ஜிங்க் சத்து மிகவும் குறைவாக உள்ளதென்று அர்த்தம்.

சுவை அல்லது வாசனை இழப்பு
உடலில் கடுமையான ஜிங்க் குறைபாடு இருந்தால், அது ஒருவரின் சுவை மற்றும் வாசனை உணர்வில் இடையூறை ஏற்படுத்தலாம். மேலும் இரவு நேர பார்வை இழப்பும் இச்சத்து குறைபாட்டின் மற்றொரு அறிகுறியாகும்.

உளவியல் கோளாறு
நீங்கள் திடீரென்று அதிக மன அழுத்தம் அல்லது மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டிருப்பது போல் உணர்ந்தால், உங்கள் உடலில் ஜிங்க் சத்து மிகவும் குறைவான அளவில் உள்ளதென்று அர்த்தம்.

மோசமான நரம்பியல் செயல்பாடு
நரம்பியல் செயல்பாடுகளுக்கு ஜிங்க் மிகவும் அவசியமான சத்து. உடலில் ஜிங்க் அளவு மிகவும் குறைவாக இருந்தால், அது எதிலும் கவனம் செலுத்த முடியாமை, எழுதுவதில், படிப்பதில் சிரமம், தசை பலவீனம், நினைவாற்றல் பிரச்சனை போன்றவற்றை சந்திக்க நேரிடும்.

முகப்பரு அல்லது அரிப்பு
யாருடைய உடலில் ஜிங்க் சத்து போதுமான அளவில் இல்லாமல் இருக்கிறதோ, அவர்கள் பல்வேறு சரும பிரச்சனைகளான முகப்பரு, அரிப்பு போன்றவற்றை சந்திக்க நேரிடும். எனவே இம்மாதிரியான அறிகுறியை திடீரென்று அனுபவித்தால், அதை சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள்.
இப்போது ஜிங்க் குறைபாட்டை சரிசெய்ய உதவும் உணவுப் பொருட்களைக் காண்போம்.

பூண்டு
பூண்டுகளில் ஜிங்க் சத்து காணப்படுகிறது. ஜிங்க் குறைபாடு உங்களுக்கு இருந்தால், தினமும் பூண்டு சாப்பிடுங்கள். இதனால் உடலுக்கு ஜிங்க் சத்து கிடைப்பதோடு, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, அயோடின், இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்களும் கிடைக்கும்.

வேர்க்கடலை
பலருக்கு வேர்க்கடலை சாப்பிட பிடிக்கும். உங்களுக்கு ஜிங்க் குறைபாடு இருந்தால், தினமும் வேர்க்கடலையை ஒரு கையளவு சாப்பிடுங்கள். இதனால் ஜிங்க் குறைபாடு நீங்குவதோடு, உடலுக்கு இரும்புச்சத்து, பொட்டாசியம், ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி, மக்னீசியம் மற்றும் நார்ச்சத்து போன்ற சத்துக்களும் உடலுக்கு கிடைக்கும்.

முந்திரி
நட்ஸ்களில் முந்திரி அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடியது. முந்திரியில் ஜிங்க் மட்டுமின்றி, காப்பர், வைட்டமின் கே, வைட்டமின் ஏ மற்றும் ஃபோலேட் போன்றவை அதிகம் உள்ளன. அதோடு முந்திரியில் மோனோ மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களும் உள்ளன. எனவே முந்திரி சாப்பிடுவதால் ஜிங்க் குறைபாடு நீங்குவதோடு, இதயம் ஆரோக்கியமாகவும், இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடனும் இருக்கும்.

தயிர்
தயிர் செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது. தயிரில் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. இது நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதுடன், செரிமான மண்டலத்தை வலுவாக்குகிறது. முக்கியமாக தயிரில் ஜிங்க் வளமான அளவில் உள்ளது. எனவே ஜிங்க் குறைபாடு உள்ளவர்கள் தினமும் தயிர் சாப்பிடுவது நல்லது.

முட்டை
முட்டையின் மஞ்சள் கருவில் ஜிங்க் போதுமான அளவில் உள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் முட்டையை சாப்பிடும் போது அதன் மஞ்சள் கருவை சாப்பிடுவதில்லை. ஆனால் ஜிங்க் குறைபாடு இருந்தால், முட்டையை மஞ்சள் கருவுடன் சாப்பிட வேண்டும். முட்டையின் மஞ்சள் கருவில் ஜிங்க் சத்துடன், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி12, தயமின், வைட்டமின் பி6, ஃபோலேட் மற்றும் பாந்தினோனின் அமிலம் போன்றவையும் உள்ளன.

காளான்
காளானில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவு. ஆனால் இதில் ஜிங்க், பொட்டாசியம், நியாசின் மற்றும் பல முக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆகவே ஜிங்க் குறைபாடு உள்ளவர்கள் காளானை அடிக்கடி உணவில் சேர்ப்பது நல்லது.

செம்மறி ஆட்டுக்கறி
செம்மறி ஆட்டுக்கறியில் உயர்தரமான புரோட்டீன் அதிகளவில் உள்ளது மற்றும் இதில் பல வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களும் உள்ளன. குறிப்பாக இந்த ஆட்டுக்கறியில் ஜிங்க் சத்து அதிகளவில் உள்ளதால், ஜிங்க் குறைபாடு உள்ளவர்கள் இதை அவ்வப்போது சாப்பிட்டால், விரைவில் இக்குறைபாட்டை போக்கலாம்.



Click it and Unblock the Notifications