Latest Updates
-
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க..
ஆண்களே! விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு குட்-பை சொல்லணுமா? இந்த ஜூஸ் குடிங்க...
இன்று பல ஆண்கள் அதிக மன அழுத்தத்தின் காரணமாக விறைப்புத்தன்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்களின் விறைப்புத்தன்மை பிரச்சனையை ஒருசில உணவுகள் மட்டுமின்றி, ஜூஸ்களும் சரிசெய்யும்.
விறைப்புத்தன்மை பிரச்சனை என்பது உறவில் ஈடுபடும் போது, போதுமான விறைப்பு இல்லாமையால் துணையை திருப்திபடுத்த முடியாமல் போகும் நிலையாகும். சில சமயங்களில் இதை மலட்டுத்தன்மை என்றும் கூறுவர். இன்று பல ஆண்கள் அதிக மன அழுத்தத்தின் காரணமாக விறைப்புத்தன்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடிக்கடி விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்படுமாயின் அது தீவிரமான ஆரோக்கிய பிரச்சனைக்கான அறிகுறியாகும். எனவே இந்நிலையில் உடனே மருத்துவரை அணுகி போதிய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியது அவசியம். ஆண்களின் இந்த மாதிரியான பிரச்சனைக்கு ஆரம்பத்திலேயே சரியான சிகிச்சையை மேற்கொண்டால், நிலைமை தீவிரமாவதைத் தடுக்கலாம்.
குறிப்பாக ஆண்களின் விறைப்புத்தன்மை பிரச்சனையை ஒருசில உணவுகள் மட்டுமின்றி, ஜூஸ்களும் சரிசெய்யும். இக்கட்டுரையில் ஆண்களின் விறைப்புத்தன்மை பிரச்சனையை சரிசெய்ய உதவும் ஜூஸ்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

விறைப்புத்தன்மை பிரச்சனை என்றால் என்ன?
ஆண் குறியில் இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும் போது விறைப்பு ஏற்படும். ஆனால் விறைப்புத்தன்மை குறைபாடு என்பது ஆண்குறிக்கு போதுமான அளவு இரத்த ஓட்டம் இல்லாமல் போனால் சந்திக்கும் நிலையாகும். பொதுவாக ஆண்குறிக்கு இரத்த ஒட்டமானது பாலியல் எண்ணங்கள் அல்லது ஆண் குறியுடன் நேரடி தொடர்பு கொள்ளும் போது தூண்டப்படும்.

விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு என்ன காரணம்?
ஒரு ஆணுக்கு விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்பட பல காரணங்கள் உள்ளன. உணர்ச்சி மற்றும் உடல் கோளாறுகளாலும் ஒருவருக்கு இப்பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. அதில் சில பொதுவான காரணங்களாவன:
* இதய நோய்
* சர்க்கரை நோய்
* உயர் இரத்த அழுத்தம்
* புற்றுநோய்
* உடல் பருமன்
* முதுமை
* மன அழுத்தம்
* பதற்றம்
* உறவுகளில் பிரச்சனைகள்
* மதுப் பழக்கம்
* போதைப் பழக்கம்
* புகைப்பிடித்தல்
சரி, இப்போது விறைப்புத்தன்மை குறைபாட்டை சரிசெய்ய உதவும் பானங்கள் குறித்து காண்போம்.

பீட்ரூட் ஜூஸ்
உணவு மற்றும் பாலியல் ஆரோக்கியம் என்று வரும் போது, அதில் பீட்ரூட் மிஞ்ச எதுவும் இல்லை. ஏனெனில் பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் அதிகம் உள்ளது. இது உடலினுள் செல்லும் போது நைட்ரிக் ஆக்ஸைடாக மாறி, இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து, இரத்த ஓட்டத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள உதவும். எனவே நீங்கள் விறைப்புத்தன்மை பிரச்சனையை சந்திப்பவராயின், தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸை குடித்து வாருங்கள். இதனால் படுக்கையில் நீண்ட நேரம் குதூகலமாக இருக்கலாம்.

தர்பூசணி ஜூஸ்
தர்பூசணியில் சிட்ருலின் மற்றும் லைகோபைன் அதிகம் உள்ளது. இவை ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பொருட்களாகும். சிட்ருலின் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்ய உதவி, இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, நீண்ட நேரம் விறைப்புடன் இருக்க உதவும். லைகோபைனும், அதே பணியை செய்யக்கூடியவை. எனவே தான் தர்பூசணியை நேச்சுரல் வயாகரா என்று அழைக்கின்றனர். ஆகவே விறைப்புத்தன்மை பிரச்சனை நீங்க, அவ்வப்போது தர்பூசணி ஜூஸைக் குடியுங்கள்.

மாதுளை ஜூஸ்
கலிஃபோர்னியா பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், மாதுளையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஒட்டுமொத்த உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை சிறப்பாக வைத்துக் கொள்ளவும், நீண்ட நேரம் படுக்கையில் சந்தோஷமாக இருக்க உதவுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே ஆண்கள் ஜூஸ் கடைக்கு சென்றால், என்ன ஜூஸ் குடிப்பது என்று யோசிக்காமல், மாதுளை ஜூஸை வாங்கிக் குடியுங்கள். இதனால் உங்கள் தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

தக்காளி ஜூஸ்
தக்காளியில் லைகோபைன் என்னும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் அதிகம் உள்ளது. இது இரத்த சுழற்சிக்கு உதவுவதோடு, பல்வேறு பாலியல் பிரச்சனைகளையும் சரிசெய்ய வல்லது. தக்காளியை சாப்பிட்டால், இதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இதனால் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் தடையின்றி சிறப்பாக இருக்கும். ஆகவே விறைப்புத்தன்மை பிரச்சனை இருப்பின், தக்காளி ஜூஸை அடிக்கடி குடியுங்கள்.

பசலைக்கீரை ஜூஸ்
பச்சை இலைக் காய்கறிகளில் நைட்ரேட்டுகள் அதிகம் உள்ளது. அதிலும் பசலைக்கீரை உடலுக்கு வலிமையைத் தரக்கூடிய அற்புதமான கீரை என்பதால், பசலைக்கீரையை வாங்கி, ஜூஸ் போட்டு குடியுங்கள். இதனால் இந்த ஜூஸ் அந்தரங்க உறுப்புக்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, படுக்கையில் துணையுடன் புகுந்து விளையாட உதவி புரியும்.



Click it and Unblock the Notifications