Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
உங்க சிறுநீரில் புரோட்டீன் அதிகமா இருக்கா? இதோ அதைக் குறைக்கும் சில வழிகள்!
சிறுநீரில் புரோட்டீன் அதிகமாகும் போது, சிறுநீரக கோளாறு தீவிரமாகி, சிறுநீரகங்களை சேதமடையச் செய்துவிடும். இப்படிப்பட்ட நிலையை ஒருசில இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்ய முடியும்.
உடல் ஆரோக்கியமாக இருக்க புரோட்டீன் மிகவும் இன்றியமையாத ஊட்டச்சத்து. உடலில் உள்ள திசுக்களை உருவாக்கவும், சரிசெய்யவும் புரோட்டீன் பயன்படுத்தப்படுகிறது. எலும்புகள், தசைகள், குருத்தெலும்பு, தோல், மற்றும் இரத்தம் ஆகியவற்றின் முக்கியமான அடிப்படை அம்சமாக புரோட்டீன் இருக்கிறது. எனவே புரோட்டீனை ஒருவர் தினமும் போதுமான அளவு எடுக்க வேண்டியது அவசியம்.

அவ்வளவு முக்கியத்துவத்தைக் கொண்ட புரோட்டீன், ஒருவரது சிறுநீரில் அதிகமானால், அது சிறுநீரகத்தில் பிரச்சனை இருப்பதை குறிப்பதோடு, இதர ஆரோக்கிய பிரச்சனைகளுக்கான அறிகுறியும் கூட. பொதுவாக இரத்தம் சிறுநீரகங்களுக்கு செல்லும் போது, அதில் உள்ள கழிவுகள் மற்றும் அதிகப்படியான நீரை வடிகட்டும். சிறுநீரகங்கள் அதன் செயல்பாடுகளைச் செய்யத் தவறும் போது, இரத்தத்தில் சுற்றும் புரதம், இரத்தத்திற்குள் திரும்புவதற்குப் பதிலாக, சிறுநீரக வடிகட்டிகள் வழியாக சிறுநீரில் செல்கிறது.
பெரும்பாலும் சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு தான் இப்பிரச்சனையின் அபாயம் அதிகம் உள்ளது. சிறுநீரில் புரோட்டீன் அதிகமாகும் போது, சிறுநீரக கோளாறு தீவிரமாகி, சிறுநீரகங்களை சேதமடையச் செய்துவிடும். இப்படிப்பட்ட நிலையை ஒருசில இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்ய முடியும். இக்கட்டுரையில் சிறுநீரில் உள்ள அதிகப்படியான புரோட்டீனைக் குறைக்கும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சிறுநீரில் புரோட்டீன் அதிகமாவதற்கான காரணங்கள்
* உடல் வறட்சி
* கடுமையான உடற்பயிற்சி
* மன அழுத்தம்
* காய்ச்சல்
* கடுமையான குளிர் வெப்பநிலை

யாருக்கெல்லாம் இப்பிரச்சனையின் அபாயம் உள்ளது?
* சர்க்கரை நோய்
* உயர் இரத்த அழுத்தம்
* அமிலோய்டோசிஸ்
* பெர்கர் நோய்
* இதய உள்ளுறையழற்சி
* இதய செயலிழப்பு
* ஹாட்ஜ்கின் லிம்போமா
* லூபஸ்
* மலேரியா
* மைலோமா
* ஆர்த்தோஸ்டேடிக் புரோட்டினூரியா
* கர்ப்பம்
* முடக்கு வாதம்
* சிக்கிள் செல் இரத்த சோகை

சிறுநீரில் புரோட்டீன் அதிகம் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்
* நுரைப் போன்ற சிறுநீர்
* மூச்சு விடுவதில் சிரமம்
* அடிக்கடி சிறுநீர் வெளியேற்றம்
* களைப்பு
* கை, கால் அல்லது முக வீக்கம்
* சரும வறட்சி
* தூங்குவதில் சிரமம்
* விக்கல்
* குமட்டல்
* வாந்தி
* கவனம் செலுத்த முடியாமை
இப்போது சிறுநீரில் உள்ள புரோட்டீனைக் குறைக்கும் இயற்கை வழிகளைக் காண்போம்.

உப்பு எடுப்பதைக் குறைக்கவும்
உணவில் உப்பு சேர்த்துக் கொள்வதைக் குறைத்துக் கொள்வதன் மூலம் சிறுநீரில் உள்ள புரோட்டீன் அளவைக் குறைக்கலாம். ஆய்வுகளில் உணவில் உப்பைக் குறைத்ததன் மூலம் 22% சிறுநீரில் உள்ள புரோட்டீன் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. சோடியம் எடுக்கும் அளவு குறைவதால் இரத்த அழுத்தம் குறைவதுடன், சிறுநீரக செயல்பாடும் மேம்படும்.

சோயா புரோட்டீன்
சிறுநீரில் புரோட்டீன் அதிகம் உள்ள மக்கள் இறைச்சிகளில் இருந்து பெறும் புரோட்டீன் அளவைக் தவிர்த்து, சோயா புரோட்டீனை எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது. இதனால் சிறுநீரில் புரோட்டீன் அளவு குறையும். ஆய்வுகளின் படி, 20% சோயா புரோட்டீன் எடுப்பதால், சிறுநீரில் உள்ள புரோட்டீன் அளவு குறைவதோடு மட்டுமின்றி, சிறுநீரக செல்களைப் பாதிக்கும் சைட்டோகீன்களின் அளவைக் குறைக்க உதவும்.

ஆளி விதை
ஆளி விதையை அன்றாட டயட்டில் சேர்ப்பதன் மூலம், சிறுநீரில் உள்ள புரோட்டீன் அளவைக் குறைக்கலாம். ஆளி விதையில் உள்ள ஆல்பா-லினோலினிக் அமிலம் மற்றும் லிக்னன்கள் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த உதவும். ஆகவே அன்றாடம் ஆளி விதையை உண்ணும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். இதனால் சிறுநீரில் புரோட்டீன் அதிகமாவதைத் தடுக்கலாம்.

மீன் எண்ணெய்
சிறுநீரில் புரோட்டீன் அதிகம் உள்ளவர்களுக்கு மீன் எண்ணெய் மிகவும் நல்லது. இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அழற்சி எதிர்ப்பு பண்புகளாக செயல்பட்டு, சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக கருதப்படுகிறது. மேலும் மீன் எண்ணெய் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

இரத்த சர்க்கரை அளவில் கட்டுப்பாடு
சர்க்கரை நோயாளிகளுக்கு இப்பிரச்சனை இருப்பது பொதுவான ஒன்று. ஒருவரது இரத்த சர்க்கரை அளவில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டால், அது சிறுநீரகங்களைப் பாதித்து, சிறுநீரில் அதிகளவு புரோட்டீனைத் தங்கச் செய்யும். எனவே இரத்த சர்க்கரை அளவில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது அவசியம். இதனால் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக செயல்பட்டு, சிறுநீரில் புரோட்டீன் அளவு குறைய உதவி புரியும். ஆகவே சிறுநீரில் புரோட்டீன் அதிகம் கொண்டவர்கள், சர்க்கரை நோயாளிகள் போன்று டயட்டில் கட்டுப்பாட்டுன் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.



Click it and Unblock the Notifications