ரொம்ப பலவீனமா இருக்குற மாதிரி உணருறீங்களா? இத ஃபாலோ பண்ணுங்க சரியாயிடும்...

நாள்பட்ட உடல் பலவீனம் ஒருசில நோய்களின் அறிகுறியும் கூட. எனவே உடல் பலவீனத்தை பல நாட்களாக/மாதங்களாக ஒருவர் உணர்ந்தால், அதை சாதாரணமாக விட்டுவிடாமல், அதை சரிசெய்யும் முயற்சியில் உடனே இறங்க வேண்டும்.

இன்று ஏராளமான மக்கள் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை உடல் பலவீனம் அல்லது களைப்பு. ஒருவர் பலவீனமாக இருந்தால், காலை எழுந்தது முதல் மிகுந்த களைப்பை உணர்வதோடு, அன்றாட வேலைகளை செய்ய முடியாத அளவில் உடல் வலியையும், பலவீனத்தையும் உணர்வார்கள். இப்படி ஒரு நாள் முழுவதும் இருந்தால் எப்படி இருக்கும்?

Simple Ways to Deal With Weakness At Home

மேலும் நாள்பட்ட உடல் பலவீனம் ஒருசில நோய்களின் அறிகுறியும் கூட. எனவே உடல் பலவீனத்தை பல நாட்களாக/மாதங்களாக ஒருவர் உணர்ந்தால், அதை சாதாரணமாக விட்டுவிடாமல், அதை சரிசெய்யும் முயற்சியில் உடனே இறங்க வேண்டும். அப்படி முயற்சித்தும் உடல் பலவீனமாக இருந்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். இக்கட்டுரையில் உடல் பலவீனத்தை சரிசெய்யும் சில வழிகளைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல் பலவீனமாக இருப்பதற்கான காரணங்கள்:

உடல் பலவீனமாக இருப்பதற்கான காரணங்கள்:

ஒருவரது உடல் பலவீனமாக இருப்பதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. அவையாவன:

* ஊட்டச்சத்து குறைபாடு

* தூக்கமின்மை

* எய்ட்ஸ்

* மன அழுத்தம்

* அதிகமாக மது அருந்துவது

* உணவுகளைத் தவிர்ப்பது

* மருந்துகள்

* அதிக உடல் உழைப்பு

* டிஸ்டிமியா, மனச்சோர்வு அல்லது இருமுனை கோளாறு ஆகியவற்றால் அவதிப்படுவது

வேறு சில காரணங்கள்:

வேறு சில காரணங்கள்:

ஒருசில உடல்நல பிரச்சனைகள் இருந்தாலும் தொடர்ந்து பலவீனம் ஏற்படலாம். அந்த பிரச்சனைகளாவன:

* இரத்த சோகை

* ஆர்த்ரிடிஸ்

* ஹைப்போ தைராய்டிசம்

* தூக்க கோளாறுகள்

* புற்றுநோய்

* சர்க்கரை நோய்

* இதய நோய்கள்

* இறுதி மாதவிடாய்

* நரம்பியல் கோளாறுகள்

* சுவாசக் கோளாறுகள்

உடல் பலவீனத்தின் அறிகுறிகள்:

உடல் பலவீனத்தின் அறிகுறிகள்:

உடல் பலவீனமாக இருந்தால், உடலில் ஆற்றல் ஏதும் இல்லாமல் அன்றாட வேலைகள் கூட செய்ய முடியாமல் போகும். அதுமட்டுமின்றி,

* தலைச்சுற்றல்

* சோர்வு

* மந்தம்

* அன்றாட வேலைகளை செய்வதில் ஆர்வமின்மை

* பசியின்மை

* கவனச்சிதறல்

* தூங்குவதில் சிரமம்

இப்போது உடல் பலவீனத்தை சரிசெய்ய உதவும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் இயற்கை சர்க்கரைகளான சுக்ரோஸ், ஃபுருக்டோஸ் மற்றும் க்ளுக்கோஸ் உள்ளது. இந்த சர்க்கரைகள் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும். மேலும் வாழைப்பழத்தில் பொட்டாசியம் உள்ளது. இது உடலில் சர்க்கரையை ஆற்றலாக மாற்றக்கூடியவை. அதோடு வாழைப்பழத்தில் இருக்கும் நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவும்.

எனவே உடல் பலவீனமாக இருந்தால், ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழங்களை சாப்பிடுங்கள். அதிலும் வாழைப்பழத்தை துண்டுகளாக்கி, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து தினமும் இரண்டு முறை சாப்பிடுங்கள்.

பாதாம்

பாதாம்

பாதாமில் உள்ள வைட்டமின் ஈ, உடல் பலவீனத்திற்கான அறிகுறிகளை எதிர்த்து, ஆற்றலுடன் இருக்கச் செய்யும். மேலும் பாதாமில் உள்ள மக்னீசியம், உடலில் புரோட்டீன், கொழுப்பு மற்றும் கார்ப்போஹைட்ரேட்டுக்களை ஆற்றலாக மாற்றும் பணியை செய்யக்கூடியவை. உடலில் மக்னீசிய குறைபாடு இருந்தாலும், உடல் பலவீனத்தை உணரக்கூடும்.

எனவே தினமும் இரவில் படுக்கும் முன் 2 பாதாம், 1 உலர் அத்திப்பழம் மற்றும் சிறிது உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் பாதாமின் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுங்கள். பின் இதர பொருட்களை நீருடன் உட்கொள்ளுங்கள்.

வெதுவெதுப்பான பால்

வெதுவெதுப்பான பால்

பாலில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஏராளமாக உள்ளது. இது தசைகள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும். தினமும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், உடல் பலவீனம் நீங்கும். வேண்டுமானால், 2-3 உலர் அத்திப்பழத்தை ஒரு கப் பாலில் போட்டு கொதிக்க வைத்து, அதனை உட்கொள்வதன் மூலம் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காய்

நெல்லிக்காய் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு உணவுப் பொருள். இது உடலின் ஆற்றலை மேம்படுத்த உதவும் ஓர் பொருள். இதில் வைட்டமின் சி, கால்சியம், புரோட்டீன், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது. தினமும் ஒரு நெல்லிக்காயை சாப்பிட்டால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும். அதிலும் நெல்லிக்காயைக் கொண்டு ஜூஸ் தயாரித்து, அத்துடன் தேன் கலந்து குடித்து வந்தால், பலவீனமாக இருக்கும் உடல் வலிமையாகும்.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி நல்ல சுவையான மற்றும் மணமான உணவுப் பொருள். இதனை உட்கொண்டால் நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்படலாம். இப்பழத்தில் வைட்டமின் சி உள்ளதால், இது உடலில் உள்ள பாதிக்கப்பட்ட திசுக்களை சரிசெய்வதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தியை மேம்படுத்தும் மற்றும் ப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கும். அதோடு ஸ்ட்ராபெர்ரி பழத்தில் மாங்கனீசு, நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்தும் ஆரோக்கியமான அளவில் நிறைந்துள்ளது. எனவே நீங்கள் பலவீனமாக இருப்பது போல் உணர்ந்தால், ஒரு டம்ளர் ஸ்ட்ராபெர்ரி ஜூஸ்/மில்க் ஷேக்கைக் குடியுங்கள்.

முட்டை

முட்டை

சரிவிகித டயட்டை மேற்கொள்வது மிகவும் இன்றியமையாதது. இதனால் உடல் பலவீனம் மற்றும் சோர்வு ஏற்படுவதைத் தடுக்கலாம். அதிலும் ஒருவர் முட்டையை அன்றாட டயட்டில் சேர்த்து வந்தால், அதில் உள்ள புரோட்டீன், இரும்புச்சத்து, பயோடின், வைட்டமின் ஏ, ஃபோலிக் அமிலம், ரிபோஃப்ளேவின் மற்றும் பான்டோதெனிக் அமிலம் போன்ற சத்துக்கள் கிடைத்து, உடலின் ஆற்றல் அதிகரிக்கும். அதிலும் முட்டையை வேக வைத்து சாப்பிடுவதே சிறந்தது.

காபி

காபி

காபியில் உள்ள காப்ஃபைன், உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும். மேலும் இது ஒருவரின் ஆற்றலை அதிகரித்து, உடலில் உள்ள வலியைக் குறைத்து, உடலின் மெட்டபாலிச அளவை மேம்படுத்தி, உடலை வலிமையை அதிகரிக்க உதவும். முக்கியமாக காபியை அளவாக குடிப்பதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஒரு நாளைக்கு 2 கப் காபி குடிக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன. அளவுக்கு அதிகமாக குடித்தால், பதற்றம், படபடப்பு, தூக்கமின்மை போன்றவற்றின் அபாயம் அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion