Latest Updates
-
18 ஆண்டுக்கு பின் கேது துலாம் ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரம் தொடங்கப்போகுதாம் -
மும்பை ஸ்டைல் சன்னா மசாலா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
6 நெல்லிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
அக்டோபர் 17, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாள் காத்திருக்காம் -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அக்டோபர் 28-ல் சுக்கிரன் உதயமாவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும் -
பண்டிகைக் காலத்தில் சருமத்தை பளிச்சென்று புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக்குகள்! -
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பரிசாக கொடுத்தது எந்த நாடு தெரியுமா?
உங்களுக்கு அடிக்கடி ஏற்படும் நெஞ்செரிச்சலை போக்க இத செஞ்சா போதுமாம் தெரியுமா?
படுக்கைக்குச் செல்வதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே நீங்கள் உணவை சாப்பிட வேண்டும். ஏனெனில் வயிறு முழுவதுமாக நிரம்பிய நிலையில் படுப்பது நெஞ்செரிச்சலைத் தூண்டும்.
நெஞ்செரிச்சல் என்பது உங்கள் மார்பகத்திற்குப் பின் மார்பில் எரியும் உணர்வு. வலி பொதுவாக மாலையில் சாப்பிட்ட பிறகு அல்லது படுத்திருக்கும் போது அல்லது குனிந்து கொண்டிருக்கும் போது மோசமாகிவிடும். பெரும்பாலான மக்கள் சுய உதவி மூலம் அல்லது தங்கள் வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் இந்த பிரச்சனையை குணப்படுத்துகிறார்கள். இருப்பினும், நெஞ்செரிச்சல் அடிக்கடி அல்லது கடுமையானதாக இருந்தால், அதற்கு மருத்துவ ஆலோசனை தேவைப்படுகிறது. நெஞ்செரிச்சல் சில சமயங்களில் எச்சரிக்கை அறிகுறியாகவும் இருக்கலாம்.

நெஞ்செரிச்சலை தவிர்க்க மாலையில் அதிகமாக சாப்பிடுவதையும் வேகமாக சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். உங்கள் வாழ்க்கை முறையில் சில விஷயங்களை மாற்றுவதன் மூலம், நீங்கள் இந்த பிரச்சனையை சமாளிக்கலாம். இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள எளிய வீட்டு வைத்தியம் மூலம் நெஞ்செரிச்சலை எப்படி குணப்படுத்தலாம் என தெரிந்துகொள்ளுங்கள்.

நெஞ்செரிச்சல்
நெஞ்செரிச்சல் உங்கள் மார்பில், உங்கள் மார்பகத்திற்குப் பின்னால் எரியும் வலி. எப்போதாவது நெஞ்செரிச்சல் பொதுவானது. நெஞ்செரிச்சல் மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். உங்கள் தொண்டை மற்றும் வயிற்றின் பின்புறத்தை இணைக்கும் ஒரு குழாயில் இரைப்பை அமிலம் வெளியேறும்போது, இந்த பிரச்சனை தொடங்குகிறது.

நெஞ்செரிச்சல் அறிகுறிகள்
மார்பில் எரியும் உணர்வு சில நிமிடங்கள் முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கும்
மார்பில் வலி உணர்வு
தொண்டையில் எரியும் உணர்வு
விழுங்குவதில் சிரமம்
தொண்டையின் பின்புறத்தில் அமில, புளிப்பு அல்லது உப்பு சுவை

நெஞ்செரிச்சலுக்கு பயனுள்ள வீட்டு வைத்தியம்
பழுத்த வாழைப்பழம்
பழுத்த வாழைப்பழத்தை சாப்பிடுங்கள். இது உங்களுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் உள்ளது. இது வயிற்று அமிலத்தை நீக்கி, உங்களை நன்றாக உணர வைக்கிறது. ஆதலால், பழுத்த வாழைப்பழத்தை தினமும் சாப்பிடுங்கள்.

தூண்டுதல் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்
ஆரோக்கியமான சமச்சீர் உணவை எடுத்துக்கொள்ளுங்கள். நெஞ்செரிச்சல் பிரச்சனையைத் தூண்டும் உணவுகளை அடையாளம் கண்டு அவற்றை தவிர்க்க வேண்டும். உணவு அட்டவணையைத் தயாரிப்பதன் மூலம் இதை முறையாகச் செய்யலாம். அந்த உணவுகளை தவிர்த்து மற்ற உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

சிறிய பகுதிகளாகவும் மெதுவாகவும் சாப்பிடுங்கள்
அதிகளவு எடுத்து ஒரே நேரத்தில் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. வால்வின் மீது அழுத்தம் கொடுப்பது அமிலத்தன்மைக்கு வழிவகுக்கும். எனவே, சிறிய அளவில் சாப்பிட்டு, உணவை மெதுவாக மென்று சாப்பிடுங்கள். இவ்வாறு சாப்பிடுவது உணவை எளிதில் ஜீரணமாக உதவும்.

இறுக்கமான ஆடைகள்
இறுக்கமான பெல்ட்கள், உடைகள் மற்றும் உள்ளாடைகள் வயிற்றில் அழுத்தம் கொடுக்கின்றன. இது நெஞ்செரிச்சல் அறிகுறிகளை மோசமாக்குகிறது. ஆதலால், இருக்கமான ஆடைகள் அணிவதை தவிர்த்து, உங்களுக்கேற்ற சரியான ஆடைகளை அணியுங்கள்.

தூக்க நிலை
படுக்கைக்குச் செல்வதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே நீங்கள் உணவை சாப்பிட வேண்டும். ஏனெனில் வயிறு முழுவதுமாக நிரம்பிய நிலையில் படுப்பது நெஞ்செரிச்சலைத் தூண்டும். மேலும், இது உங்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தலாம். இதனால், இரவு முழுவதும் உங்கள் தூக்கம் பாதிக்கப்படலாம். உங்கள் இடது பக்கத்தில் தூங்க முயற்சி செய்யுங்கள். ஏனெனில் இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் வயிற்றில் அமில ரிஃப்ளக்ஸ் தடுக்கிறது. தூங்கும் போது உங்கள் தலை மற்றும் மார்பு உங்கள் கால்களை விட உயரமாக இருக்க வேண்டும்.

புகைபிடிப்பதை நிறுத்துங்கள்
நீங்கள் அதிக எடையுடன் இருந்தால் உடல் எடையை குறைக்க முயற்சி செய்யுங்கள். புகைபிடிப்பது உங்கள் ஆரோக்கியத்தை பலவழிகளில் பாதிக்கும். ஆதலால், புகைபிடிப்பதை நிறுத்துங்கள். புகைபிடித்தல் உமிழ்நீர் உற்பத்தியின் அளவைக் குறைக்கிறது. இதனால் வயிற்றில் அமிலம் உருவாகிறது. மேலும், மன அழுத்தமில்லாமல் வாழுங்கள்.

கடுமையான நெஞ்செரிச்சல்
லேசான நெஞ்செரிச்சலுக்கு ஆன்டாக்சிட்கள் மற்றும் சுய-உதவி வேலை செய்யலாம். ஆனால் அடிக்கடி அசௌகரியம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும். சில சந்தர்ப்பங்களில், நெஞ்செரிச்சல் சில தீவிர நோய்களின் எச்சரிக்கை அறிகுறியாக கூட இருக்கலாம். நெஞ்செரிச்சலைக் கட்டுப்படுத்த மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் தொடர்ந்து மருந்துகளை உட்கொண்டால், இந்த மருந்துகள் மற்ற மருந்துகளுடன் தலையிடக்கூடும் என்பதால், அதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவர் ஆலோசனையோடு மருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
