Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
சூரியனின் இரட்டை கிரக பெயர்ச்சியால் ராஜயோகத்தை அடையப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்..
இந்த கொழுப்பு அமிலத்தை உணவில் அதிகம் சேர்த்து கொள்வது எவ்வளவு ஆபத்துகளை ஏற்படுத்துகிறது தெரியுமா?
ஒமேகா- 3 அமிலத்தால் ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் இதனை அதிகம் சாப்பிடும்போது அது பல ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.
எந்தவொரு டயட்டும் ஒமேகா-3 அமில உணவுகள் இன்றி முழுமைப் பெறுவதில்லை. இந்த கொழுப்பு அமிலம் நமது உடலின் சீரான செயல்பாடுகளுக்கு அத்தியாவசியமானது ஆகும். கொழுப்பு அமிலங்கள் நமது உடலில் தானாக உற்பத்தி செய்யப்படுவதில்லை, எனவே அதனை வெளிப்புற உணவுகளில் இருந்துதான் பெற முடியும். இதனை ஊட்டச்சத்துக்கள் இருக்கும் பல உணவுகளில் இருந்து பெறலாம்.

பொதுவாக ஒமேகா-3 அமிலங்கள் என்பது நிறைவுறாத பாலி அமிலங்கள் ஆகும். இந்த ஆரோக்கியமான அமிலம் உங்களுக்கு பல நன்மைகளை வழங்கும். மூளை மற்றும் இதயத்தின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு இந்த அமிலம் அவசியமானதாகும். பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் இதனை அதிகம் சாப்பிடும்போது அது பல ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். இந்த பதிவில் ஒமேகா- 3 அமிலத்தை அதிகம் எடுத்துக்கொள்ளும் போது ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

ஒமேகா- 3 அமிலம் இருக்கும் உணவுகள்
சரும ஆரோக்கியத்திற்கு ஒமேகா- 3 அமிலம் மிகவும் அவசியமானதாகும். வால்நட், பாதாம், சியா விதைகள், ஆளி விதைகள், கொழுப்பு அமிலம் இருக்கும் மீன் போன்றவற்றில் ஒமேகா- 3 அமிலம் அதிகம் இருக்கிறது.

மூக்கு மற்றும் ஈறுகளில் இரத்தப்போக்கு
அதிகளவு ஒமேகா- 3 அமிலம் எடுத்துக்கொள்வதால் ஏற்படும் பொதுவான பாதிப்புகளில் ஒன்று உடலில் இரத்தப்போக்கு அதிகம் ஏற்படுவதாகும். இரத்த உறைவு அதிகம் ஏற்படுவது இரத்தப்போக்கு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். அதிக கொழுப்பு எண்ணெய்களை எடுத்துக்கொண்ட பிறகு மூக்கு மற்றும் ஈறுகளில் அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பு
ஒமேகா- 3 கொழுப்பு அமிலத்தை அதிக அளவு எடுத்துக் கொள்வது இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை திடீரென அதிகரிக்கச் செய்து சர்க்கரை நோய் அதிகரிக்க வழிவகுக்கும். மீன் எண்ணெய் மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவர்களை அணுகுவது நல்லது.

குமட்டல்
கொழுப்பு அமிலங்களில் கொழுப்புகள் அதிகம் மேலும் இதனால் உங்கள் உடலில் அமிலத்தன்மை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் குமட்டல், வாயுக்கோளாறு, தலைவலி, நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். மிதமான அளவு ஒமேகா- 3 அமிலம் எடுத்துக் கொள்வது இதய நோய்களை தடுக்க உதவும்.

குறைந்த இரத்த அழுத்தம்
மீன் எண்ணெய் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் முன் எப்பொழுதும் மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது. ஒமேகா- 3 அமிலங்கள் உங்கள் மருந்துகளின் செயல்பாட்டில் குறுக்கிட்டு உடனடியாக உங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம்.

வயிற்றுபோக்கு
ஒமேகா- 3 அமிலத்தை அதிகமாக உட்கொள்வது அஜீரணம், வீக்கம் மற்றும் வயிறுப்போக்கு ஏற்பட காரணமாக அமைகிறது. பாதாம், வால்நட், கொழுப்பு அமிலம் அதிகமுள்ள மீன் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவது இத்தகைய அசௌகரியங்களை ஏற்படுத்தும்.

எடை அதிகரிப்பு
எடையை குறைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் ஒமேகா- 3 அமிலத்தை உணவில் குறைவாக சேர்த்துக் கொள்வதை கடைபிடிக்க வேண்டும் இல்லையெனில் இது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். மீன் எண்ணெயில் கொழுப்பு நிறைந்துள்ளது மற்றும் கலோரிகளும் அதிகமாக இருப்பதை நீங்கள் ஏற்கனவே அறிவீர்கள், இது அதிகமாகும் போது அது உங்கள் வளர்சிதை மாற்ற எடையை அதிகரிக்கும்.

தூக்கமின்மை
அதிகப்படியான கொழுப்பு அமிலங்கள் தூக்கமின்மையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது உங்கள் தூக்கத்தை பாதிப்பதுடன் தூக்கத்தின் தரத்தையும் குறைக்கிறது. மேலும் ஒழுங்கற்ற தூக்க சுழற்சியையும் ஏற்படுத்தும். அதேசமயம் மிதமான அளவில் இதனை எடுத்துக் கொள்வது உங்களுக்கு நல்ல தூக்கத்தை வழங்கும்.



Click it and Unblock the Notifications











