Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
உங்களுக்கு மனஅழுத்தம் அதிகமாக இருக்கா? அப்ப இந்த ஆபத்தான பிரச்சினைகள் வர வாய்ப்பிருக்காம்... உடனே கவனிங்க...!
கடினமான வேலை, மோசமான வாழ்க்கை முறை தனிப்பட்ட வாழ்க்கையில் சிக்கல் மற்றும் திருமண பிரச்சினைகள் என நம்மை தொந்தரவு செய்யும் அனைத்து விஷயங்களும் ஏதோ ஒரு வகையில் மனஅழுத்தத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது.
கடினமான வேலை, மோசமான வாழ்க்கை முறை தனிப்பட்ட வாழ்க்கையில் சிக்கல் மற்றும் திருமண பிரச்சினைகள் என நம்மை தொந்தரவு செய்யும் அனைத்து விஷயங்களும் ஏதோ ஒரு வகையில் மனஅழுத்தத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. வேலை, பள்ளி, கல்லூரி, தொழில், தனிப்பட்ட வாழ்க்கை என எல்லாவற்றுக்கும் இடையில் மன அழுத்தத்திற்கு ஆளாவது என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.

வாழ்க்கையின் பல்வேறு பக்கங்களில் இருந்து வரும் அழுத்தங்களும் சிக்கல்களும் ஒட்டுமொத்தமாக ஒருவருக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன, சில சமயங்களில் இந்த மன அழுத்த நிலைகள் நீண்ட காலம் நீடிக்கும்.நீண்ட காலம் மனஅழுத்தத்துடன் வாழும் போது அது பல ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். மன அழுத்தம் உங்கள் உடல்நலத்தில் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தூக்கமின்மை
நீடித்த மன அழுத்தம் தூக்கமின்மையை ஏற்படுத்தும். மன அழுத்தம் நிறைந்த எண்ணங்கள் நல்ல இரவு தூக்கத்திற்கு மோசமான தடையாக இருக்கும். தொடர்ச்சியாக மனஅழுத்தத்தில் இருக்கும் ஒரு நபரால் நன்றாக தூங்க முடியாது அல்லது மிகவும் ஒழுங்கற்ற மற்றும் தொந்தரவு நிறைந்த தூக்க சுழற்சியால் பாதிக்கப்படுவார்கள்.

உயர் இரத்த சர்க்கரை
மன அழுத்த ஹார்மோன்கள் இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸின் வெளியீடுகளைத் தூண்டுகின்றன, இது உங்களுக்கு டைப் 2 நீரிழிவு அபாயத்தை உண்டாக்கும். நீங்கள் நீண்டகால மன அழுத்தத்தில் இருந்தால், உங்கள் உடலால் இந்த கூடுதல் குளுக்கோஸ் உயர்வை சமாளிக்க முடியாமல் போகலாம். இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கலாம்.

மாரடைப்பு
மன அழுத்தத்ம் அதிகமாக இருக்கும் போது உங்கள் இதயமும் வேகமாக பம்ப் செய்கிறது. மன அழுத்த ஹார்மோன்கள் உங்கள் இரத்த நாளங்களை சுருக்கி, உங்கள் தசைகளுக்கு அதிக ஆக்ஸிஜனை திருப்பி விடுகின்றன, எனவே நீங்கள் அதனை சமாளிக்க அதிக அழுத்தத்தைக் கொடுக்க வேண்டியிருக்கும் ஆனால் இது உங்கள் இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கிறது. இதனால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.

வயிற்று உபாதைகள்
ஹார்மோன்களின் அவசரம், விரைவான சுவாசம் மற்றும் அதிகரித்த இதய துடிப்பு ஆகியவை உங்கள் செரிமான அமைப்பை சீர்குலைக்கும். வயிற்றில் அமிலம் அதிகரிப்பதால் உங்களுக்கு நெஞ்செரிச்சல் அல்லது ஆசிட் ரிஃப்ளக்ஸ் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். நீடித்த மன அழுத்தம் மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலிக்கு வழிவகுக்கும்.

மாதவிடாய் கோளாறு
பெண்களுக்கு அதிக மன அழுத்தம் இருப்பது மாதவிடாய் சுழற்சியை தொந்தரவு செய்யலாம். மன அழுத்தம் காரணமாக வெளியிடப்படும் ஹார்மோன்கள் பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பை ஏற்படுத்தலாம் மற்றும் மனஅழுத்தம் எல்லையைக் கடக்கும் போது அது முற்றிலும் மாதவிடாயை நிறுத்தலாம்.



Click it and Unblock the Notifications