Latest Updates
-
தங்கம் ஏன் மஞ்சள் நிறத்தில் மட்டும் இருக்கிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சுக்ராதித்ய யோகத்தால் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்.. பண மழை கொட்டும்.. -
கம்பு ரொட்டியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 22, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணும் - ஜாக்கிரதை -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க
நீங்க எவ்வளவு முயற்சி செய்தும் உங்க கொலஸ்ட்ரால் அளவு குறையாமல் இருக்க இதில் ஒன்றுதான் காரணமா இருக்குமாம்!
ஆரோக்கியமான செல்களை உருவாக்க உங்கள் உடலுக்கு கொலஸ்ட்ரால் தேவைப்பட்டாலும், அதை அதிகமாக வைத்திருப்பது இதய நோயை உருவாக்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.
கல்லீரல்தான் கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்கிறது, இது உங்கள் இரத்தத்தில் இருக்கும் ஒரு மெழுகுப் பொருளாகும். ஆரோக்கியமான செல்களை உருவாக்க உங்கள் உடலுக்கு கொலஸ்ட்ரால் தேவைப்பட்டாலும், அதை அதிகமாக வைத்திருப்பது இதய நோயை உருவாக்கும் வாய்ப்பை அதிகரிக்கும். உணவுப்பழக்கம், புகைபிடித்தல், உடல் பருமன் அல்லது மரபியல் உள்ளிட்ட பல காரணங்கள் கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகரிப்பதற்குக் காரணமாகின்றன.

எந்தவொரு அறிகுறிகளையும் ஏற்படுத்தாததால், கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் வரும்வரை பெரும்பாலான மக்கள் தங்களுக்கு அதிக கொலஸ்ட்ரால் இருப்பதை உணரத் தவறிவிடுகிறார்கள். எனவே, அதிக கொலஸ்ட்ரால் பிரச்சினையை ஆரம்பத்திலேயே கண்டறிய வழக்கமான பரிசோதனை அவசியம். உங்கள் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உங்கள் வாழ்க்கை முறையை மாற்றுவது முக்கியம். உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் குறையாமல் இருக்க முக்கிய காரணங்களாக இருப்பவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

புகைபிடித்தல்
நீங்கள் எவ்வளவு முயற்சித்தாலும் உங்கள் கொழுப்பு அளவு குறையாமல் இருக்க உங்களின் புகைபிடித்தல் முக்கிய காரணாமாக இருக்கலாம். புகைபிடித்தல் HDL கொழுப்பைக் குறைக்கிறது மற்றும் கரோனரி இதய நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது. மேலும் புகைபிடிக்காதவர்கள் புகைபிடிப்பதில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

மறைமுக கொழுப்புகள்
டிரான்ஸ் கொழுப்புடன் நிறைவுற்ற கொழுப்புகளை உட்கொள்வதைக் குறைப்பதும் முக்கியம், ஏனெனில் அவை உங்கள் எல்டிஎல் கொழுப்பை அதிகரிக்கச் செய்கின்றன. சிவப்பு இறைச்சி, வெண்ணெய் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் கொண்ட உணவுகளை சாப்பிடுவதை நீங்கள் தவிர்க்காமல் இருப்பதும் கெட்ட கொழுப்பை குறைக்க விடாமல் தடுக்கும்.

டயட்டை மட்டும் முழுமையாக நம்பியிருப்பது
ஆரோக்கியமான டயட்டை பராமரிப்பது முக்கியம்தான். இருப்பினும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க இது போதாது. முடிந்த வரை உடல் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். நீங்கள் ஹைபர்கொலஸ்டிரோலீமியா நோயால்பாதிக்கபட்டால் உங்கள் நிலை மேலும் மோசமாகும்.

தொடர்ச்சியாக ஹோட்டலில் சாப்பிடுவது
உணவகத்தில் ஆர்டர் செய்யும் ஆரோக்கியமான உணவு கூட முற்றிலும் ஆரோக்கியமானது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. உங்கள் உணவு மற்றும் கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க வீட்டில் சமைத்த உணவை உண்ண வேண்டும்.

மது அருந்துவதை நிறுத்தாமல் இருப்பது
அதிகப்படியான ஆல்கஹால் நுகர்வு உங்கள் கொலஸ்ட்ரால் அளவை கணிசமாக உயர்த்தி உடல் பருமனுக்கு வழிவகுக்கும். ஆய்வுகளின் படி, அதிகப்படியான மது அருந்துதல் இருதய கோளாறுகள் போன்ற உடல்நலப் பிரச்சினைகளை உருவாக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கலாம்.

மருந்துகளை மட்டும் நம்பியிருப்பது
மருந்துகளை மட்டுமே நம்பியிருப்பது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவாது என்று ஆய்வுகள் கூறுகிறது. ஸ்டேடின்கள் பரிந்துரைக்கப்படும்போது மக்கள் பொதுவாக எடை அதிகரிப்பையும் குறைவாக உடற்பயிற்சி செய்வதையும் கண்டறிந்துள்ளது.



Click it and Unblock the Notifications
