Latest Updates
-
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
சைனஸ் பிரச்சனை பாடாய் படுத்துதா? இதோ அதை சரிசெய்யும் சில இயற்கை வழிகள்!
உங்களுக்கு சைனஸ் பிரச்சனையை சரிசெய்யும் இயற்கை வைத்தியங்கள் பற்றி தெரியாது என்றால், கீழே சைனஸ் பிரச்சனைக்கான சில சக்தி வாய்ந்த பாரம்பரிய இயற்கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
சைனசிடிஸ் என்பது சைனஸ் சுரப்பியின் வீக்கம் ஆகும். இன்று பலருக்கும் இந்த சைனஸ் பிரச்சனை உள்ளது. பொதுவாக சைனஸ் பிரச்சனை குளிர் அல்லது ஒவ்வாமை காரணமாக ஏற்படுகிறது. சைனஸ் பிரச்சனையை சந்திப்பவர்கள் அடிக்கடி சளி, ஜலதோஷம் மற்றும் சுவாசிப்பதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். சைனஸ் பிரச்சனையை சரிசெய்யாவிட்டால், அது கடுமையான தலைவலி, குறட்டை பிரச்சனை மற்றும் தீவிரமான சந்தர்ப்பங்களில் மூளைக்காய்ச்சல் போன்றவற்றை உருவாக்கலாம்.

சைனஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஓர் நற்செய்தி என்னவென்றால், இயற்கை வழிகளின் மூலம் உடனடி நிவாரணத்தை பெறலாம். உங்களுக்கு சைனஸ் பிரச்சனையை சரிசெய்யும் இயற்கை வைத்தியங்கள் பற்றி தெரியாது என்றால், கீழே சைனஸ் பிரச்சனைக்கான சில சக்தி வாய்ந்த பாரம்பரிய இயற்கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகர் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது. ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் சளி, ஜலதோஷம், அலர்ஜி அல்லது காய்ச்சல் போன்றவற்றை சரிசெய்ய உதவுகின்றன. அதற்கு ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதனால் ஒரு நல்ல பலனை காணலாம்.

ஆவி தெரபி
சைனஸ் பிரச்சனையால் அவதிப்படும் போது, சுடுநீர் குளியல் எடுப்பதன் மூலம், சுவாசப் பாதைகள் திறக்கப்பட்டு சைனஸ் பிரச்சனையில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். இல்லாவிட்டால் ஒரு பாத்திரத்தில் சுடுநீரை நிரப்பி, அதிலிருந்து வரும் நீராவியை சுவாசிக்கலாம். இதன் மூலம் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

மஞ்சள்
மருத்துவ குணம் வாய்ந்த மஞ்சள் அற்புதமான மசாலா பொருள் மட்டுமல்ல. சைனஸ் பிரச்சனையின் போது சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எனவே சுடுநீரில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இது சுவாசப் பாதையில் உள்ள சளியைக் கரைத்து வெளியேற்ற உதவி புரிந்து, சைனஸ் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணத்தை அளிக்கிறது.

யூகலிப்டஸ் ஆயில்
இந்த எண்ணெய் சைனஸ் தொற்றை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் சுவாச மண்டலத்தை வலுவாக்குகிறது. சைனஸ் பிரச்சனையால் அவதிப்படும் போது ஒன்று அல்லது இரண்டு துளிகள் யூகலிப்டஸ் எண்ணெயை ஒரு துணியில் ஊற்றி, அதை சுவாசிக்க வேண்டும். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

மிளகு
சைனஸ் தொற்றை சரிசெய்வதில் மிளகு மிகவும் பயனுள்ள பொருளாக கருதப்படுகிறது. அதுவும் சுடுநீரில் சிறிது மிளகுத் தூளை சேர்த்து கலந்து, ஒரு நாளைக்கு 2-3 முறை குடிக்க வேண்டும். வேண்டுமானால் இதில் சிறிது தேன் சேர்த்து கலந்து கொள்ளலாம். ஆனால் வாய்ப்புண் இருந்தால், இந்த வழியைப் பின்பற்றாதீர்கள்.



Click it and Unblock the Notifications
