For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களே… உங்கள் ஆண்குறியில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா?...தீர்வுகளை தெரிந்துகொள்ளுங்கள்…!

ஆண்குறி எரிச்சல் அல்லது ஆண்குறி ஒவ்வாமை பிரச்சனை என்பது சாதாரணமானது அல்ல.

|

பொதுவாக நிறைய பேர் ஆண்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது? அவர்கள் மகிழ்ச்சியாகதான் இருக்கிறார்கள் என்று கூறுவார்கள். அது உடல் ரீதியாகவும் சரி, உளவியல் ரீதியாகவும் சரி. உடல் ரீதியாக பெண்கள் அதிகபடியான பிரச்சனை கொண்டுள்ளனர் என்றால் ஆண்களுக்கும் அதே அளவு பிரச்சனை உள்ளது. ஆண்குறியினால் ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம்.

Penile Allergies Causes, Home remedies and Tips to prevent

பெண்களின் பிறப்புறுப்பில் எப்படி நோய்த்தொற்று, எரிச்சல், அழற்சி ஆகியவை ஏற்படுகிறதோ, அதேபோன்று ஆண்களுக்கும் ஏற்படும். ஆண்குறி எரிச்சல் அல்லது ஆண்குறி ஒவ்வாமை பிரச்சனை என்பது சாதாரணமானது அல்ல. அது அவர்களுக்கு மிகப்பெரிய வலியை கொடுக்கும். ஆண்குறியில் ஏற்படும் பிரச்சனைகளுக்கான தீர்வுகளும், இந்த பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் இங்கு காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆண்குறி ஒவ்வாமை பிரச்சனை

ஆண்குறி ஒவ்வாமை பிரச்சனை

ஆண்குறியில் வலி, வீக்கம், அரிப்பு, நோய்த்தொற்று மற்றும் பிற பிரச்சனைகள் ஏற்படவாய்ப்புகள் அதிகம். ஆண்களின் அன்றாட வாழ்க்கையை சீர்குலைப்பதிலிருந்து, அவர்களின் பாலியல் வாழ்க்கையை நிறுத்தி வைப்பது வரை, ஆண்குறி ஒவ்வாமை பல்வேறு நிலைகளில் அசெளரிய காரியங்களை ஏற்படுத்தும். அத்துடன், உடல் செயல்பாடுகள் அல்லது காயங்கள் காரணமாக கூட ஆண்குறி ஒவ்வாமை பிரச்சனை உருவாகலாம்.

MOST READ: மனிதர்களை போலவே இந்த சிம்பன்சி செய்யும் வேலையை பாருங்களேன்... நீங்களே ஆச்சிரியப்படுவீங்க...

ஆரோக்கியத்திற்கு ஆபத்தானவை

ஆரோக்கியத்திற்கு ஆபத்தானவை

ஆண்குறி ஒவ்வாமையின் முதன்மை அறிகுறி ஆண்குறியின் நுனியில் தடிப்புகள் ஏற்படுவது. பின்னர் இது சிவப்பு நிறமாக மாறும். ஆண் இனப்பெருக்க உறுப்பு மீது இந்த வீங்கிய வெல்ட்கள் அல்லது சிறிய புடைப்புகள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பாதிப்பில்லாதவை. ஆனால், சில சமயங்களில் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானவை. ஆண் குறி ஒவ்வாமைக்கான பொதுவான காரணங்களை காணலாம்.

ஆண்குறியில் தடிப்பு

ஆண்குறியில் தடிப்பு

ஆண்குறியில் தடிப்பு ஏற்படுவது ஆட்டோ இம்யூன் நிலை. இது உங்கள் ஆண்குறியில் சிறிய, சிவப்பு திட்டுகளை ஏற்படுத்தும். உங்கள் ஆண்குறி சருமம் செதிலாகவோ அல்லது பளபளப்பாக மாறுவதால் அதில் அரிப்பு அல்லது புண் ஏற்படலாம். விருத்தசேதனம் எனப்படும் ஆண்குறியின் நுனித் தோலை அகற்றாத ஆண்களையும் இது பாதிக்கிறது.

தோல் அழற்சி

தோல் அழற்சி

நறுமணம் நிறைந்த சோப்புகளை உங்கள் ஆண்குறி பகுதியில் நீங்கள் உபயோகிப்பதால், அவற்றில் உள்ள ரசாயனங்களால் ஆண்குறியில் அழற்சி ஏற்படும். ஆண்குறியின் சருமம் மிகவும் சென்சிடிவாகா இருப்பதால், ரசாயன சோப்புகளால் அரிப்பு மற்றும் சிவப்பு திட்டுக்கள், சொறி மற்றும் ஆண்குறியில் தோல் அழற்சி உருவாகலாம். இது சில நிமிடங்கள் முதல் மணிநேரம் வரை நீடிக்கும்.

MOST READ: 2019ஆம் ஆண்டுக்கான உலகின் டாப் 10 செக்ஸியான ஆண்கள் யார் என்று தெரியுமா?

பாலியல் நோய் தொற்றுகள்

பாலியல் நோய் தொற்றுகள்

பாலியல் ரீதியாக பரவக்கூடிய நோய்த்தொற்றுகள், குறிப்பாக ஆண்களின் பிறப்புறுப்பைத்தான் பாதிக்கின்றன. ஆண்குறியின் அருகே புடைப்புகள், புண்கள், கொப்புளங்கள், மருக்கள், சிவத்தல், வீக்கம் மற்றும் அரிப்பு ஏற்பட்டால் நீங்கள் பாலியல் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம். இந்த அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.

ஈஸ்ட் நோய்த்தொற்றுகள்

ஈஸ்ட் நோய்த்தொற்றுகள்

மிகவும் பொதுவான ஆண்குறி ஒவ்வாமைகளில் ஒன்றான, ஈஸ்ட் தொற்று உங்கள் ஆண்குறி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அரிப்பு, ஸ்பாட்டி சொறியை ஏற்படக்கூடும். இது எரிச்சலை ஏற்படுத்தும் மற்றும் ஆண்குறி பகுதியில் ஒரு அடர்த்தியான வெள்ளை நிற படலம் இருப்பதுபோல ஏற்படுத்தும். ஈஸ்ட் நோய்த்தொற்றுகள் பூஞ்சைகளினால் ஏற்படுகிறது. பெரும்பாலான ஈஸ்ட் நோய்த்தொற்றுகளுக்கு பூஞ்சை காளான் மருந்துகளுடன் சிகிச்சையளிக்க முடியும். கடுமையான சந்தர்ப்பங்களில், ஈஸ்ட் நோய்த்தொற்றுகள் பாலனிடிஸுக்கு வழிவகுக்கும்.

மொட்டுத் தோலழற்சி

மொட்டுத் தோலழற்சி

இந்த நிலை உங்கள் ஆண்குறியின் மேல் பகுதியில் தோல் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. அதோடு ஆண்குறியில் சிவத்தல், வீக்கம், அரிப்பு, சொறி, வலி மற்றும் ஒரு துர்நாற்றம் வீசும். இந்த அழற்சியானது குறிப்பிட்ட சில காரணங்களால் ஏற்படுகிறது. விருத்தசேதனம் செய்யாமல் இருப்பது, மோசமான சுகாதாரத்தை கடைப்பிடிப்பது, சிறுவர்களின் பாலனிடிஸ், நோய்த்தொற்று, ஒவ்வாமை பிரச்சனை, நாள்பட்ட தோல் பிரச்சினைகள் மற்றும் நீரிழிவு போன்ற அடிப்படை மருத்துவ நிலை காரணமாக இந்த அழற்சி தூண்டப்படும்.

MOST READ: இந்த ராசிக்காரங்க முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுவார்களாம்...நீங்க எந்த ராசி?

சிறுநீர் பாதை நோய்த்தொற்று

சிறுநீர் பாதை நோய்த்தொற்று

இது பெண்களில் பொதுவான பிரச்சனை என்றாலும், ஆண்களும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் ஏற்படலாம். இது சிறுநீர் கழிக்கும் பாதையில் பாக்டீரியாக்கள் உருவாவதன் விளைவாக இத்தொற்று உருவாகிறது. சிறுநீர் கழிப்பதில் சிக்கல் ஏற்படுதல், சிறுநீர் கழித்தபின் ஆண்குறியில் எரிச்சல் ஏற்படுதல், கூச்ச உணர்வு ஏற்படுதல் ஆகியவை ஆண்குறி ஒவ்வாமைக்கு வழிவகுக்கும்.

ஆண்குறி ஒவ்வாமைக்கு சிகிச்சையளிப்பது எப்படி

ஆண்குறி ஒவ்வாமைக்கு சிகிச்சையளிப்பது எப்படி

ஆண்குறி ஒவ்வாமைக்கு சிகிச்சையளிக்க, வீட்டு வைத்தியம், அத்துடன் மருந்துகள் உதவும். உங்கள் ஆண்குறியில் மேற்கூறிய ஒவ்வாமை பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால், உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் சிறந்த ஒன்றாகும். அதுதவிர, மருத்துவரிடம் இதுகுறித்து நீங்கள் பேச கூச்சமடைகிறீர்கள் என்றால், பின்வருபவை போன்ற வீட்டு வைத்தியங்களும் உங்களுக்கு பயனளிக்கும்.

உப்பு குளியல்

உப்பு குளியல்

ஆண்குறியில் ஏற்படும் ஒவ்வாமைகளை அகற்றுவதற்கு மிகவும் பயனுள்ள நடவடிக்கைகளில் ஒன்று உப்பு குளியல். கடல் உப்பு அல்லது எப்சம் உப்பு ஒவ்வாமைகளை ஆற்ற உதவும். நீங்கள் குளிப்பதற்கு முன்பு வாளியில் உள்ள நீரில் 2 கப் உப்பை போட்டு கரைத்துக்கொள்ளவும். பின்னர், அந்த நீரில் குளிக்கலாம். வீட்டில் குளியல் தொட்டி இருந்தால், 15 நிமிடங்கள் அதில் அமர்ந்திருக்கலாம். இதில், நீங்கள் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயையும் சேர்க்கலாம். இதை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்யுங்கள்.

MOST READ: 2019 மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் கலந்து கொண்ட முதல் லெஸ்பியன் போட்டியாளர்!

குளிர் அழுத்தம்( கூல் கம்ப்ரஸ்)

குளிர் அழுத்தம்( கூல் கம்ப்ரஸ்)

ஒரு ஐஸ் பேக் அல்லது கூல் கம்ப்ரஸ் எரிச்சலைத் தணிக்கும் மற்றும் எந்த வீக்கத்தையும் குறைக்கும் தன்மை கொண்டது. உங்கள் ஆண்குறியில் 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஈரமான, குளிர்ந்த துணியைப் பயன்படுத்துங்கள் அல்லது ஒரு துண்டில் போர்த்தப்பட்ட ஐஸ் கட்டியைப் பயன்படுத்துங்கள்.

மாய்ஸ்சரைசிங் கிரீம்

மாய்ஸ்சரைசிங் கிரீம்

சென்சிடிவான உங்கள் ஆண்குறி பகுதி சோப்பு ராசாயணங்களால் பாதிக்கப்பட்டிருப்பதால், மாய்ஸ்சரைசிங் கிரீம்களை நீங்கள் அப்பகுதியில் பயன்படுத்தலாம். கிரீம்கள் உபயோகிப்பதற்கு முன்பு மருத்துவரிடம் கலந்துரையாடுங்கள்.

உடலுறவில் இருந்து விலகுதல்

உடலுறவில் இருந்து விலகுதல்

தவறான அல்லது பாதுகாப்பற்ற உடலுறவு உங்கள் ஆண்குறிகளை பெரிதும் பாதிக்கும். உடலுறவின் போது, பாதுகாப்பு கருதி நிறைய பேர் காண்டம் பயன்படுத்துகிறார்கள். பொதுவாக சிலரின் ஆண்குறி மிகவும் சென்சிடிவ்வாக இருப்பதால் காண்டமைப் பயன்படுத்தும் போது, காண்டம் தயாரிக்கப் பயன்படுத்திய மெட்டீரியல் ஆண்குறியின் தோல் பகுதியில் கடுமையான பாதிப்பை உண்டாக்கும். உங்கள் ஆண்குறியைச் சுற்றியுள்ள சருமத்தை மோசமாக்கும் உடலுறவு மற்றும் பிற செயல்களைத் தவிர்ப்பது நல்லது.

ஆண்குறி ஒவ்வாமையை எவ்வாறு தடுப்பது

ஆண்குறி ஒவ்வாமையை எவ்வாறு தடுப்பது

எரிச்சலூட்டாத, சோப்பு இல்லாத சுத்தப்படுத்தியைக் கொண்டு உங்கள் ஆண்குறியை தவறாமல் கழுவவும், உடலுறவு அல்லது சுயஇன்பத்திற்குப் பிறகு உங்கள் ஆண்குறியைக் கழுவி உலர வைக்கவும். குளியலறையைப் பயன்படுத்துவதற்கு முன்பும் பின்பும் உங்கள் கைகளை நன்றாக கழுவ வேண்டும். ஆடை அணிவதற்கு முன் உங்கள் ஆண்குறியின் தலையை உலர வைக்கவும். உங்கள் பிறப்புறுப்பை நீங்கள் எவ்வாறு பாதுகாப்பாக கவனித்து கொள்கிறீர்களோ, அதே அளவு நீங்கள் நலமுடன் வாழலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Penile Allergies Causes, Home remedies and Tips to prevent

Here we discussing about the penile allergies causes, home remedies and tips to prevent.
Desktop Bottom Promotion