அக்குளில் உள்ள வலிமிக்க கட்டிகளைப் போக்கும் சில இயற்கை வழிகள்!

நம் உடலில் அவ்வப்போது ஆங்காங்கு வலிமிக்க சிறு கட்டிகள் வருவதுண்டு. சிலருக்கு அக்குளில் கட்டிகள் வரும். இப்படி அக்குளில் வரும் வலிமிக்க கட்டிகள் பல காரணங்களால் வருவதுண்டு.

நம் உடல் முழுவதும் நீள்வட்ட வடிவில் சிறிய அளவிலான நிணநீர் முடிச்சுக்கள் உள்ளன. இவை உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தில் முக்கிய பங்கை வகிக்கின்றன. நம் உடலில் அவ்வப்போது ஆங்காங்கு வலிமிக்க சிறு கட்டிகள் வருவதுண்டு. சிலருக்கு அக்குளில் கட்டிகள் வரும். இப்படி அக்குளில் வரும் வலிமிக்க கட்டிகள் பல காரணங்களால் வருவதுண்டு.

Natural And Effective Home Remedies For Armpit Lumps Treatment

ஷேவிங் அல்லது ஆண்டிபெர்ஸ்பிரண்ட் பயன்பாடு காரணமாக நீர்க்கட்டி, தொற்று அல்லது எரிச்சல் காரணமாக அக்குள் கட்டிகள் ஏற்படலாம். சில சமயங்களில் தீவிரமான ஆரோக்கிய பிரச்சனையாலும் கட்டிகள் உருவாகலாம். இப்போது அக்குளில் வரும் வலிமிக்க கட்டிகளைப் போக்க உதவும் சில எளிய இயற்கை வழிகளைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுடுநீர் சிகிச்சை

சுடுநீர் சிகிச்சை

அக்குளில் வரும் வலிமிக்க கட்டிகளை சுடுநீர் சிகிச்சையின் மூலம் சரிசெய்யலாம். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் கெட்டியான காட்டன் துணியை சுடுநீரில் நனைத்து பிழிந்து, அந்த துணியைக் கொண்டு வலிமிக்க கட்டிகள் உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

மசாஜ்

மசாஜ்

அக்குளில் உள்ள கட்டிகளைப் போக்குவதற்கான ஒரு எளிய இயற்கை வழி, அக்குள் பகுதியில் மென்மையாக மசாஜ் செய்வது தான். அதுவும் ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யுங்கள். இதனால் அக்குள் பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரித்து, கட்டிகளின் வீக்கம் குறையும்.

தர்பூசணி ஜூஸ்

தர்பூசணி ஜூஸ்

தர்பூசணியில் உள்ள நச்சுகளை நீக்கும் பண்புகள், கட்டிகளை உண்டாக்கும் பாக்டீரியாக்களைக் குறைக்க உதவும். எனவே அக்குளில் கட்டிகள் வந்தால், தினமும் காலையில் தர்பூசணி ஜூஸைக் குடியுங்கள். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, கட்டிகளும் போய்விடும்.

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸ்

அக்குளில் உள்ள வலிமிக்க கட்டிகளைப் போக்க உதவும் மற்றொரு பொருள் எலுமிச்சை ஜூஸ். இதில் வைட்டமின் சி அதிகம் நிறைந்திருப்பதோடு, அழற்சி எதிர்ப்பு பண்புகளும் நிறைந்துள்ளதால், இது வலியுடனான கட்டிகளின் வீக்கத்தைக் குறைத்து, சரிசெய்ய உதவும். அதற்கு தினமும் எலுமிச்சை ஜூஸைக் குடிக்க வேண்டும்.

வெங்காயம்

வெங்காயம்

வெங்காயத்தில் ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் ஆன்டி-செப்டிக் பண்புகள் உள்ளதால், இசூது அக்குளில் உள்ள கட்டிகளை சரிசெய்ய பெரிதும் உதவி புரியும். அதற்கு வெங்காய சாற்றினை அக்குளில் தினமும் இரண்டு முறை தடவ வேண்டும். இதனால் விரைவில் அக்குளில் உள்ள கட்டிகள் போய்விடும்.

பூண்டு

பூண்டு

பூண்டு அக்குளில் இருக்கும் வலிமிக்க கட்டிகளை சரிசெய்யக்கூடியது. ஏனெனில் இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. உங்களுக்கு அடிக்கடி அக்குளில் கட்டிகள் வருமானால், பூண்டு பற்களை வாயில் போட்டு மென்று ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரைக் குடியுங்கள்.

ஜாதிக்காய்

ஜாதிக்காய்

ஜாதிக்காயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. இது கட்டிகளால் ஏற்படும் வலியைக் குறைக்க உதவும். அதற்கு ஒரு டம்ளர் சுடுநீரில் 1/2 டீஸ்பூன் ஜாதிக்காய் பொடி மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, தினமும் குடிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு ஒருமுறை குடித்தால், அக்குள் கட்டிகள் விரைவில் மறைந்துவிடும்.

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி, ஆன்டி-செப்டின், ஆன்டி-பாக்டீரியல் போன்றவைகளும் அதிகம் நிறைந்துள்ளன. மஞ்சள் உடலினுள் உள்ள நாள்பட்ட அழற்சியை எதிர்க்க வல்லது மற்றும் வீக்கத்தைக் குறைக்கக்கூடியது. அத்தகைய மஞ்சளை பாலுடன் சேர்த்து தினமும் குடிப்பதன் மூலம், அக்குளில் உள்ள கட்டிகளைப் போக்கலாம். இல்லாவிட்டால் மஞ்சள் தூளை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, கட்டிகளின் மீது தடவி 10-15 நிமிடம் நன்கு காய வைத்து, பின் கழுவ வேண்டும். இதனாலும் கட்டிகள் மறையலாம்.

வைட்டமின் ஈ

வைட்டமின் ஈ

சரும பிரச்சனைகளானது வைட்டமின் அல்லது புரோட்டீன் குறைபாடுகளால் வரும். ஏனெனில் சருமத்திற்கு இது மிகவும் அத்தியாவசியமானது. வைட்டமின் ஈ ஒருவருக்கு போதுமான அளவு கிடைக்க வேண்டுமானால், பால், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். ஒருவேளை அப்படியிருந்தும் வைட்டமின் ஈ கிடைக்காவிட்டால், வைட்டமின் ஈ கேப்ஸ்யூலை எடுக்க வேண்டும்.

வைட்டமின் ஏ

வைட்டமின் ஏ

வைட்டமின் ஏ உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும். மேலும் இது நிணநீர் முடிச்சுக்களின் செயல்பாட்டையும் மேம்படுத்தும். ஒருவர் தினமும் போதுமான அளவு வைட்டமின் ஏ சத்துக்களை எடுத்து வந்தால், கட்டிகள் வராமல் இருக்கும். எப்போது இந்த சத்து உடலில் குறைவாக உள்ளதோ, அப்போது வலிமிக்க கட்டிகள் உடலில் வரக்கூடும். எனவே வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளான பப்பாளி, கேரட் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion