Latest Updates
-
ஆடி மாதம் இந்த 3 ராசிகளுக்கு ஆபத்துகளும், நஷ்டமும் நிறைந்த மாதமாக இருக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 5 ராசிக்காரர்களுக்கு எதிரிகள் அதிகமா இருப்பாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உடுப்பி ஸ்டைல் முள்ளங்கி ஸ்டைல் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட்டா ஆரோக்கியமா இருக்கும் -
குதிகால் வெடிப்பு அதிகமாக உள்ளதா? அதை போக்க இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க... -
இந்த 3 நபர்கள் ஒருவர் வாழ்க்கையில் இருந்தால் அவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வையால் ஆடி மாதத்தில் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிக்காரர்கள்! -
ஜூலை கடைசியில் நடக்கும் சனி-புதன் பெயர்ச்சியால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் செட்டிநாடு பால் கொழுக்கட்டை - ஈஸியா எப்படி செய்யணும்? -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026 முதல் 2030 வரை உலகில் நிகழப்போகும் ஆபத்தான மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? -
ஒரு கையளவு உப்புக்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் 6 நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர்!'
தினமும் உணவில் நெய் சேர்க்கலாமா? கூடாதா? - உண்மை என்ன?
நெய்யானது, கொழுப்பு மற்றும் வைட்டமின்களின் நல்ல மூலமாகும். அதனால் தான் அவை வளர்ச்சி மற்றும் உடலின் மேம்பாட்டிற்கு உதவுகிறது. நெய் பற்றிய பல கட்டுக்கதைகள் அனைவரது மனதிலும் சிறிது இருக்க தான் செய்கிறது.
நெய் என்பது பல ஆண்டுகளாகவே மக்களால் பயன்படுத்தப்பட்டு வரக்கூடிய ஒன்று. மேலும் நம் முன்னோர்களால் அறிவுறுத்தப்பட்ட உணவுகளில் முக்கியமானது. பொதுவாகவே, நெய் குறித்து தாய்மார்கள் மற்றும் பாட்டிகள் கூறும் விஷயம் முற்றிலும் வேறுபட்டதாக காணப்படும். ஆனால் தூய்மையான பசு மாட்டு நெய், பல ஆரோக்கிய நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது. பொதுவாக இந்தியா மற்றும் அதன் துணைக் கண்டத்தின் பல்வேறு வகையான உணவுகளில் நெய் முக்கிய இடம் வகிக்கிறது. நெய்யில் கொழுப்புச்சத்து, புரதச்சத்து, ஆற்றல், பொட்டாசியம், தாதுக்கள் போன்ற உள்ளடக்கங்களுடன் மிகவும் சத்தான ஒன்றாக திகழ்கிறது.

தூய பசு மாட்டு நெய்யை உணவில் சேர்ப்பது பல வீடுகளில் நடைமுறையில் இருக்கக்கூடிய விஷயம். உண்மையில், பல யோகிகளும் மருத்துவர்களும் அதன் நன்மைகள் மற்றும் பயன்பாடுகளைப் பற்றி தொடர்ந்து பேசி வருகின்றனர். மற்ற சமையல் எண்ணெய்களுக்கு பதிலாக உங்கள் உணவை நெய் பயன்படுத்தி தராளமாக சமைக்கலாம். முக்கிய ஆரோக்கிய நன்மைகளுடன், உணவின் சுவையையும் இது அதிகரிக்க செய்திடும். இது செரிமானத்தையும், நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது.
நெய்யை உணவில் சேர்ப்பதால் உடலில் ஏற்படக்கூடிய தாக்கத்தைப் பற்றி மக்கள் என்ன நம்புகிறார்கள் என்பதைப் பற்றி தான் தற்போது விவரிக்கப் போகிறோம். மேலும், நெய் பற்றி பரவலாக பேசப்படும் கட்டுக்கதைகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள போகிறோம்... நெய் குறித்து மேலும் தெரிந்து கொள்ள கட்டுரையை தொடர்ந்து படிக்கவும்...

நெய்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதிலும், எலும்பு வளர்ச்சிக்கு உதவுவதிலும் நெய் முக்கிய பங்கு வகிக்கிறது. வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு நெய் மிகவும் பயனுள்ளதாக திகழ்கிறது. உடலுக்கு நிறைய வலிமையும் ஆற்றலும் தேவைப்படுகிறது. நெய்யானது, கொழுப்பு மற்றும் வைட்டமின்களின் நல்ல மூலமாகும். அதனால் தான் அவை வளர்ச்சி மற்றும் உடலின் மேம்பாட்டிற்கு உதவுகிறது. நெய் பற்றிய பல கட்டுக்கதைகள் அனைவரது மனதிலும் சிறிது இருக்க தான் செய்கிறது. சரி, நெய் ஆரோக்கியமானதா அல்லது ஆரோக்கியமற்றதா? நெய்யைப் பற்றிய சில கட்டுக்கதைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள...

கட்டுக்கதை 1
"நெய் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்."
ஒரு நபரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நெய் மோசமானது என்று சிலர் நம்புகின்றனர். நெய்யில் இருக்கக்கூடிய நன்மைகள் பற்றி கட்டுரையின் ஆரம்பத்திலேயே பார்த்தோம். இது உங்களுக்கு ஆரோக்கியமற்றது அல்ல என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். இருப்பினும், இது உங்கள் உணவில் ஒரு குறிப்பிடத்தக்க அளவில் உட்கொள்ள வேண்டும். நெய்யில் ஆரோக்கியமான மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்காத மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. புற்றுநோய் வளர்ச்சியைக் குறைக்கும் பண்புகள் நெய்யில் உள்ளன என்றும் கூறப்படுகிறது. எனவே, இது உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மிகப் பெரிய கட்டுக்கதையாகும்.

கட்டுக்கதை 2
"இதய பிரச்சனைகளை உண்டாக்கும்."
நெய்யுடன் தொடர்புடைய மற்றொரு முக்கிய கட்டுக்கதை என்னவென்றால், இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என்பது தான். பல காரணங்களால் இதய பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஆனால் நெய் அவற்றில் ஒன்றல்ல. சரியான உடல் செயல்பாடுகளுடன் தினமும் சரியான அளவு நெய்யை உட்கொள்வது என்பது உடலுக்கும் மிகவும் நல்லது. நெய் இதய நோய்களுக்கு நல்லது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில், இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களுடன் இணைந்து லினோலிக் அமிலம் மற்றும் வைட்டமின்கள் ஏ, ஈ மற்றும் டி ஆகியவை உள்ளன.

கட்டுக்கதை 3
"லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்றவர்கள் நெய்யை உட்கொள்ளக்கூடாது."
லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்ற ஒருவர் நெய்யை உட்கொள்ளவே கூடாது என்பது நெய்யை குறித்து கூறப்படும் அடுத்த கட்டுக்கதை. நெய்யை உட்கொள்வதால் உடலில் சகிப்பின்மையைத் தூண்டுவதோடு, நிலைமையை மேலும் மோசமாக்கக்கூடும் என்று மக்கள் நம்புகிறார்கள். பால் சம்பந்தப்பட்ட திடப்பொருள்கள், நெய்யுடன் மறைமுகமாக எந்த விதத்திலும் இணைக்கப்படவில்லை. லாக்டோஸ் சகிப்புத்தன்மை மற்றும் லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்ற ஆகிய இரண்டு நிலைகளுக்குமே பசு நெய் மிகவும் நன்மை பயக்கும்.

கட்டுக்கதை 4
"எடை அதிகரிப்பதற்கு காரணமாகிறது."
பசு நெய்யைப் பற்றிய இந்த கட்டுக்கதை மிகவும் பொதுவான ஒன்று என்றே கூற வேண்டும். தூய பசு நெய்யானது, ஒரு பசுவிலிருந்து வருகிறது என்று பலர் நம்புகிறார்கள். அதனால் நிறைய கொழுப்புகள் இருக்கலாம் என்ற எண்ணம் அனைவரிடத்திலும் இருக்க தான் செய்கிறது. இருப்பினும், இது உண்மை இல்லை. நெய்யில் உள்ள இணைந்த லினோலிக் அமிலம் எடை இழப்புக்கு உதவக்கூடியது. மேலும், எடை அதிகரிப்பதில் நெய் எந்த விதத்திலும் பங்களிக்காது. ஆரோக்கியமான மற்றும் பொருத்தமான வாழ்க்கை முறையை வழிநடத்த பருப்பு அல்லது சப்பாத்தியில் நிச்சயமாக சிறிது நெய்யைச் சேர்த்துக் கொள்ளலாம்.

முடிவுரை
பசு நெய்யை உட்கொள்வது பற்றி மக்களிடையே நம்பப்பட்டு வரும் 4 முக்கிய கட்டுக்கதைகள் இவை தான். நெய் நமக்கெல்லாம் கிடைத்த ஒரு வரமே தவிர, எந்த விதத்திலும் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கவே விளைவிக்காது. மறுபுறம், பசு நெய் உங்கள் கண்பார்வையை அதிகரிக்கச் செய்து, தசைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவக்கூடியது. வெண்ணெய் அல்லது சுத்திகரிக்கப்பட்ட பிற எண்ணெய்களுடன் ஒப்பிடும் போது, பசு நெய் கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு அதிக நன்மை பயக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதில் குறைந்த அளவு கொழுப்பு இருப்பதால் எளிதாக செரிமானம் ஆகிவிடும்.



Click it and Unblock the Notifications