Latest Updates
-
பூரி செய்யும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க - இல்லனா எண்ணெய் உறிஞ்சி முறுக்கு மாதிரி மாறிரும் -
நவராத்திரி ஸ்பெஷல் சுரைக்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
முருங்கைக்காய் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கார குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
காலையில் எழுந்ததும் இந்த பழக்கம் இருந்தா உடனே நிறுத்துங்க.. இல்ல கிட்னி டேமேஜ் ஆயிடும்! எச்சரிக்கும் டாக்டர்! -
கொல்கத்தாவில் துர்கா தேவி சிலைகள் செய்ய ஏன் பாலியல் தொழிலாளர்களின் வீட்டு மண் பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
18 ஆண்டுகள் கழித்து மகர ராசிக்கு செல்லும் ராகு: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
இட்லி, தோசைக்கு ஒருடைம் இந்த கதம்ப சட்னியை செய்யுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க.. -
அக்டோபர் 16, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
துலாம் ராசியில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கப்போகுது! -
Navratri 2026: நவராத்திரியில் துர்கா தேவியை கனவில் கண்டால் என்ன அர்த்தம் தெரியுமா?
நீங்க தினமும் சுயஇன்பம் செய்றீங்களா? அப்ப இந்த விஷயங்கள கண்டிப்பா நீங்க தெரிஞ்சிக்கணுமாம்...!
ஆனால், தினசரி அல்லது ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு மேல் சுயஇன்பத்தில் ஈடுபடும்போது கூட, சுயஇன்பம் உங்கள் ஆரோக்கியத்திற்கு மோசமானது என்று கூறும் அறிவியல் தரவு எதுவும் இல்லை.
பாலியல் இன்பம் உங்களுக்கு வழங்கும் நன்மைகளை விட, தினசரி சுயஇன்பம் உங்கள் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் பயனுள்ளதாக இருக்கும். சுயஇன்பம் செய்வது ஒரு வேடிக்கையான, இயற்கையான மற்றும் ஆரோக்கியமான செயலாகும். எந்தவொரு பாலியல் பயத்தையும் பதற்றத்தையும் அகற்ற இது பாதுகாப்பான வழியாகும். நீங்கள் தொடர்ந்து சுயஇன்பம் செய்வது ஆரோக்கியமற்றதாகக் கருதும் பல கட்டுக்கதைகள் பல ஆண்டுகளாக மக்கள் மத்தியில் பரவிவருகிறது. அதேசமயம், உங்கள் உடலை ஆராய்வதற்கும், மகிழ்ச்சியை அனுபவிப்பதற்கும், அதன் எண்ணற்ற மன மற்றும் உடல் ஆரோக்கிய நன்மைகளை அனுபவிப்பதற்கும் இது பாதுகாப்பான வழிகளில் ஒன்றாகும். சிலர் ஒவ்வொரு நாளும் சுயஇன்பம் செய்கிறார்கள், சிலர் வாரத்திற்கு ஒரு முறை செய்கிறார்கள்.

சிலர் வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை கூட செய்யலாம். மற்றவர்கள் சுயஇன்பம் செய்யாமலே இருப்பார்கள். இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். விழிப்புணர்வுடன் செய்தால், அது ஒருவரது உடலுக்குள் நல்ல அதிர்வுகளை வெளியிடும். தினசரி சுயஇன்பம் செய்வது உடல் நலத்திற்கு நல்லதா? தீமையா? என்பதை பற்றி இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

சுயஇன்பம் என்றால் என்ன?
சுயஇன்பத்தைப் பற்றி நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் ஈரோஜெனஸ் உடல் பாகங்களை (உங்கள் பிறப்புறுப்புகளை உள்ளடக்கியிருக்கலாம் அல்லது சேர்க்காமல் இருக்கலாம்) இணைப்பது, உடல் ரீதியாக தொடுவது அல்லது தடவுவது போன்ற எந்தவொரு செயலும் சுயஇன்பமாக கருதப்படுகிறது. மிகவும் பொதுவான வடிவத்தில் பொதுவாக பிறப்புறுப்புப் பகுதிகளை (ஆண்களில் ஆண்குறி அல்லது பெண்களில் பெண்குறி), யோனியில் ஒரு விரல் அல்லது சில பொருளைச் செருகுவது உச்சக்கட்டத்திற்கு வழிவகுக்கும்.

தொடர்ந்து செய்து வந்தால் சுயஇன்பம் பாதுகாப்பானதா?
தினசரி சுயஇன்பம் செய்வது உடல் அல்லது மனதுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பொதுவான நம்பிக்கையாகக் கூறப்படுகிறது. ஆனால், தினசரி அல்லது ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு மேல் சுயஇன்பத்தில் ஈடுபடும்போது கூட, சுயஇன்பம் உங்கள் ஆரோக்கியத்திற்கு மோசமானது என்று கூறும் அறிவியல் தரவு எதுவும் இல்லை. உண்மையில், பாலியல் இன்பத்தை அனுபவிப்பதற்கும் உங்கள் சொந்த உடலுடன் இணைவதற்கும் இது ஒரு பாதுகாப்பான இன்ப முறையாகும்.

பாலியல் ரீதியாக தொற்று பரவாது
பல ஆய்வுகள் தொடர்ந்து சுயஇன்பத்தின் ஆரோக்கியம் மற்றும் பாலியல் பலன்களை பற்றி விவரித்துள்ளன. சிறந்த பாலியல் விளைவுகள், அதிக திருப்தி மற்றும் ஒட்டுமொத்த மன அழுத்தம் குறைதல் மற்றும் மேம்பட்ட இதய செயல்பாடு மற்றும் தூக்கம் ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது. பெண்களில், மாதவிடாயின் போது சுயஇன்பம் பிடிப்புகள் மற்றும் மனநிலை மாற்றங்கள், வீக்கம், பசி போன்ற மாதவிடாய் நோய்க்குறியின் அறிகுறிகளைக் குறைக்கும். சுயஇன்பம் போன்ற தனிமையான செயல்பாடுகளால் கர்ப்பம் அல்லது பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளுக்கு ஆபத்து இல்லை. இருப்பினும், சுகாதாரமான சூழ்நிலையிலும், வசதியான, தனிப்பட்ட இடத்திலும் சுயஇன்பத்தில் ஈடுபடுவது முக்கியம்.

பரவி வரும் கட்டுக்கதைகள்
சுயஇன்பம் செய்யும் போது விறைப்புத்தன்மை குறைபாடு இதய செயலிழப்பு அல்லது மோசமான இதய ஆரோக்கியத்தின் எச்சரிக்கை அறிகுறியாகும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல ஆண்டுகளாக சுயஇன்பம் குறித்த தவறான கருத்துக்கள் பரவி வருகிறது. இது பலவீனத்திற்கு வழிவகுக்கும், விந்து இழப்பு மற்றும் ஆற்றல் இழப்பு தொடர்பான கலாச்சார நம்பிக்கைகள் பொதுவாக சுயஇன்பம் பற்றிய தவறான எண்ணங்களுக்கு வழிவகுத்தன. இவை அனைத்தும் கட்டுக்கதைகள்.

இறுதி குறிப்பு
நமது சொந்த உடலைப் பற்றிய சிறந்த புரிதல் நம்பிக்கையை ஏற்படும். மேம்படுத்தப்பட்ட பாலியல் கல்வி மற்றும் சுயஇன்பம் அல்லது பாலியல் செயல்பாடுகள் தொடர்பான உரையாடல்களை பொதுவெளியில் நிகழ்த்த வேண்டும். இளைஞர்களுக்கு இது குறித்த தெளிவான புரிதல் இருக்க வேண்டும். சுயஇன்பம் மற்றும் பாலியல் உறவு குறித்து நாம் அதிகமாக பேச தொடங்கும்போது, அதை சுற்றியுள்ள கட்டுக்கதைகள் மாறி, உண்மை என்னவென்று மக்கள் புரிந்துகொள்வார்கள்.



Click it and Unblock the Notifications
