Latest Updates
-
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல ந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
40 வயதை எட்டிய பெண்கள் எலும்புகளை வலுவாக வைத்துக் கொள்ள பின்பற்ற வேண்டியவைகள்!
இன்று சர்வதேச மகளிர் தினம் என்பதால், 40 வயதைத் தாண்டிய பெண்கள் தங்களின் எலும்புகளின் ஆரோக்கியத்தை எவ்வாறு கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து கொடுத்துள்ளோம்.
International Womens Day 2023: 40 வயது ஆகிவிட்டால், பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் குறிப்பாக எலும்புகளின் ஆரோக்கியத்தில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். ஏனெனில் பெண்களுக்கு ஆண்களை விட ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு புரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே பெண்கள் 40 வயதை தாண்டிவிட்டால், தங்கள் எலும்புகளின் அடர்த்தியைப் பராமரிக்க வேண்டியது அவசியம்.

இன்று சர்வதேச மகளிர் தினம் என்பதால், 40 வயதைத் தாண்டிய பெண்கள் தங்களின் எலும்புகளின் ஆரோக்கியத்தை எவ்வாறு கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து கொடுத்துள்ளோம்.

பெண்களைத் தாக்கும் ஆஸ்டியோபோரோசிஸ்
ஆஸ்டியோபோரோசிஸ் நோயானது எலும்புகளை பலவீனமாக்கி, எளிதில் உடையச் செய்கிறது.பெரும்பாலும் இம்மாதிரியான நோயானது இறுதி மாதவிடாய் எட்டிய பெண்களுக்கு ஏற்படும். இந்தியாவில் 40 வயதை எட்டிய பெரும்பாலான பெண்கள் மூட்டு வலி, முழங்கால் வலியால் அதிகம் அவதிப்படுகிறார்கள். இதற்கு அவர்களின் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்டிரோன் ஹார்மோன்களின் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் தான் முக்கிய காரணம்.
எனவே 40 வயதைத் தாண்டிய பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தை மருத்துவரிடம் சென்று பரிசோதிக்க வேண்டியது அவசியம். இப்போது சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, 40 வயதை எட்டிய பெண்கள் தங்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க பின்பற்ற வேண்டியவைகள் என்னவென்பதைக் காண்போம்.

கால்சியம் அதிகம் எடுக்கவும்
பெண்களுக்கு வயது அதிகரிக்கும் போது கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டியது அவசியம். இந்த கால்சியமானது பால், பால் பொருட்கள், கீரைகள், சோயா பொருட்கள் போன்றவற்றில் அதிகம் காணப்படுகின்றன. ஒருவேளை நீங்கள் சப்ளிமெண்ட்டுகளை எடுப்பவரானால், உங்கள் மருத்துவரிடம் கேட்டு சரியாதை தேர்ந்தெடுத்து போடுங்கள். முக்கியமாக மருத்துவரின் அனுமதியின்றி நீங்களாக எந்த ஒரு சப்ளிமெண்ட்டுகளையும் எடுக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

போதுமான சூரிய ஒளியைப் பெறவும்
உடலில் கால்சியம் சத்து உறிஞ்சப்பட வேண்டுமானால், அதற்கு வைட்டமின் டி சத்து அவசியம் தேவை. இந்த வைட்டமின் டி சத்தானது உணவுகளில் இருந்தாலும், சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் வைட்டமின் டி இன்னும் நற்பலனை வழங்கும். எனவே தினமும் காலையில் 8 மணி முதல் 10 மணி வரை சூரிய ஒளியைப் பெற முயற்சி செய்யுங்கள். அது முடியாதவர்கள், சால்மன், மத்தி, முட்டையின் மஞ்சள் கருவை தினசரி உண்பதன் மூலம் உடலுக்கு வேண்டிய வைட்டமின் டி சத்தைப் பெறலாம்.

புகைப்பது மற்றும் மது அருந்துவதை கைவிடவும்
தற்போது பெண்களும் புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்தும் பழக்கத்தைக் கொண்டுள்ளார்கள். இவ்விரு பழக்கங்களும் எலும்புகளை பலவீனப்படுத்துவதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மோசமாக பாதிக்கும். முக்கியமாக இந்த இரண்டு பழக்கங்களைக் கொண்டவர்களுக்கு எலும்புகளின் அடர்த்தி குறைவாக இருப்பதால், எளிதில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே எலும்பு தொடர்பான பிரச்சனைகள் வரக்கூடாது என்று நினைத்தால், இவ்விரு பழக்கங்களையும் உடனே கைவிடுங்கள்.

உடல் எடையைப் பராமரிக்கவும்
அதிகப்படியான உடல் எடை மற்றும் குறைவான உல் எடை ஆகிய இரண்டுமே ஆஸ்டியோபோரோசிஸ் ஆபத்தை அதிகரிக்கும். எனவே ஒருவர் நல்ல உடலமைப்புடன், சரியான உடல் எடையுடன் இருக்க வேண்டியது அவசியம். அதற்கு தினமும் வாக்கிங், ஜாக்கிங், சைக்கிளிங், நீச்சல் அல்லது யோகா போன்ற பயிற்சிகளை தினமும் ஒரு மணிநேரம் என வாரத்திற்கு 5 நாட்களாவது தவறாமல் ஈடுபட வேண்டும். ஏனெனில் இவை அனைத்தும் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பயிற்சிகளாகும்.

புரோட்டீனை அதிகம் உட்கொள்ளவும்
எலும்புகளில் வலிமைக்கு புரோடீன் மிகவும் இன்றியமையாத சத்தாகும். எனவே கால்சியத்திற்கு அடுத்தப்படியாக பெண்கள் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கவும், பராமரிக்கவும், புரோட்டீன் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். இந்த புரோட்டீன் பழங்கள், காய்கறிகள், தானியங்கள், நட்ஸ், விதைகள் மற்றும் பருப்பு வகைகளில் அதிகம் காணப்படுகின்றன.
மேலே கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்துமே எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஒவ்வொரு பெண்ணும் பின்பற்ற வேண்டிய முக்கியமான விஷயங்களாகும். எனவே இவற்றை மனதில் கொண்டு பின்பற்றி, ஆஸ்டியோபோரோசிஸ் ஆபத்தில் இருந்து விடுபடுங்கள்.



Click it and Unblock the Notifications