Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
எச்சரிக்கை! உடம்புல இந்த சத்து குறைவாக இருந்தால் புற்றுநோய் செல்கள் வளர ஆரம்பிக்குமாம்... உஷாரா இருங்க...
குறிப்பிட்ட சில சத்துக் குறைபாடுகளினாலும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எந்த சத்துக் குறைபாடுகளால் ஒருவருக்கு புற்றுநோய் வரலாம், அச்சத்துக் குறைபாட்டின் அறிகுறிகள் என்ன, அக்குறைபாட்டை எப்படி சரிசெய்வது?
உலகளவில் அதிக மரணத்தை ஏற்படுத்தும் ஓர் நோய் தான் புற்றுநோய். முந்தைய காலத்தில் தான் இந்த புற்றுநோய்க்கு சரியான மருந்து இல்லை. ஆனால் தற்போது மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தில் புற்றுநோய்க்கு பல்வேறு சிகிச்சைகள் உள்ளன. எனவே ஆரம்பத்திலேயே ஒருவர் புற்றுநோயை கண்டறிந்துவிட்டால், சிகிச்சை மேற்கொண்டு குணமாகலாம்.

புற்றுநோய் என்பது செல்கள் கட்டுப்பாடு இல்லாமல் பிரிந்து, சுற்றியுள்ள திசுக்களில் பரவும் போது ஏற்படும் ஒரு நோயாகும். புற்றுநோயானது டிஎன்ஏ-வில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படுகிறது. ஒருவருக்கு புற்றுநோய் பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். அதில் முக்கிய காரணங்கள் என்றால் மரபியல் மற்றும் சில சுற்றுச்சூழல் அல்லது நடத்தை தூண்டுதல்களால் ஏற்படுகிறது. சிலருக்கு புற்றுநோய் பரம்பரையின் காரணமாகவும் ஏற்படலாம்.
இது தவிர குறிப்பிட்ட சில சத்துக் குறைபாடுகளினாலும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்போது எந்த சத்துக் குறைபாடுகளால் ஒருவருக்கு புற்றுநோய் வரலாம், அச்சத்துக் குறைபாட்டின் அறிகுறிகள் என்ன, அக்குறைபாட்டை எப்படி சரிசெய்வது என்பதை காண்போம்.

வைட்டமின் ஈ
இன்றைய காலக்கட்டத்தில், உடலில் வைட்டமின் அல்லது கனிமச்சத்துக்கள் போதுமான அளவில் இல்லாததால், சிறிய நோய்கள் கூட வந்து பாடாய் படுத்துகின்றன. அதேப்போல் உடலில் வைட்டமின் ஈ குறைபாடு ஏற்பட்டால், அது பல ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும். அதுவும் புற்றுநோய் போன்ற கொடிய நோய் கூட வர வாய்ப்புள்ளது.

வைட்டமின் ஈ குறைபாட்டின் அறிகுறிகள்:
* தசை பலவீனம்
* பார்வை குறைபாடு
* தொடர்ச்சியான உடல் பலவீனம்
* தலைமுடி உதிர்வது
* பலவீனமான செரிமானம்
* கண்களில் படபடப்பு

வைட்டமின் ஈ குறைபாடு உண்டாக்கும் நோய்கள்:
* வைட்டமின் ஈ குறைபாடு புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.
* இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி குறைந்து, இரத்த சோகையின் அபாயத்தை அதிகரிக்கிறது.
* உடலில் ஆக்சிஜன் குறைபாடு ஏற்படுகிறது.
* தலைமுடி உதிர்தல், முடியின் அடர்த்தி குறைதல் மற்றும் வழுக்கையாதல்
* சரும வறட்சி போன்ற சருமம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுதல்
* வைட்டமின் ஈ குறைபாடு உடலை பலவீனமாக்கி, நோயெதிர்ப்பு சக்தியை நேரடியாக பாதிக்கிறது.

வைட்டமின் ஈ குறைபாட்டைப் போக்க சாப்பிட வேண்டிய உணவுகள்
வைட்டமின் ஈ குறைபாட்டைப் போக்குவதற்கு பாதாம், வேர்க்கடலை, வால்நட்ஸ், பசலைக்கீரை, ப்ராக்கோலி, சோயா பீன்ஸ், சூரியகாந்தி விதைகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். இதனால் விரைவில் இச்சத்து குறைபாட்டை சரிசெய்யலாம்.

மக்னீசியம்
மனித உடலுக்குத் தேவையான நான்காவது மிகவும் முக்கியமான கனிமச்சத்து தான் மக்னீசியம். இது உடல் மற்றும் மூளையின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. இச்சத்து உடலின் எலும்பில் 60 சதவீதமும், எஞ்சியவை தசைகள், மென்மையான திசுக்கள் மற்றும் இரத்தம் போன்றவற்றில் காணப்படுகின்றன. சொல்லப்போனால், இது உடலின் ஒவ்வொரு செல்லிலும் காணப்படுகிறது மற்றும் அவற்றின் சரியான செயல்பாட்டிற்கு அவசியமாக உள்ளது.

மக்னீசியம் குறைபாடு பல நோய்களைத் தூண்டும்
மக்னீசியம் குறைபாடு பொதுவாக ஹைப்போமக்னீமியா என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலானோரால் பொதுவாக கவனிக்கப்படாமல் போகும் ஒரு உடல்நலப் பிரச்சினையாகும். மக்னீசியம் குறைபாடு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை போதுமான ஊட்டச்சத்து உட்கொள்ளல் முதல் உடலில் மக்னீசியம் குறைபாடு வரை இருக்கும். ஆய்வுகளானது மக்னீசியம் குறைபாடு ஒருவருக்கு நோய்த்தொற்றுகள் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களை உண்டாக்குவதாக தெரிவிக்கினறன.

புற்றுநோயாளிகளுக்கு முக்கியமான சத்து
ஜர்னல் செல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், டி செல்கள் சரியாக செயல்படுவதற்கு போதுமான மக்னீசியம் தேவை என்று கண்டறியப்பட்டது. இந்த கண்டுபிடிப்பு, தற்போதைய புற்றுநோய் நோயெதிர்ப்பு சிகிச்சைகளில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். ஏனெனில் இந்த சிகிச்சைகள் புற்றுநோய் செல்களைக் கொல்ல நோயெதிர்ப்பு மண்டலத்திலிருந்து சைட்டோடாக்ஸிக் டி செல்களைப் பயன்படுத்துகின்றன. ஆகவே கட்டிகளில் மக்னீசியம் செறிவை அதிகரிப்பது புற்றுநோய் செல்களுக்கு எதிராக டி செல்களின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது என்பதை சோதனை மாதிரிகளில் ஆராய்ச்சியாளர்களால் நிரூபிக்க முடிந்தது.

மக்னீசியம் குறைபாட்டின் அறிகுறிகள்
மக்னீசியம் குறைபாடு புற்றுநோயாளிகளுக்கு ஆபத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், சர்க்கரை நோய், நாள்பட்ட வயிற்றுப்போக்கு, செலியாக் நோய் போன்ற பிற ஆரோக்கிய பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும். ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய மக்னீசியம் குறைபாட்டின் அறிகுறிகளாவன குமட்டல், வாந்தி, பசியின்மை, உடல் பலவீனம் போன்றவை. இச்சத்து குறைபாடு தீவிரமாகும் போது, ஒருவர் ஹைபோகால்சீமியா, உணர்வின்மை, தசை பிடிப்புகள், வலிப்புத்தாக்கங்கள், அசாதாரண இதயத்துடிப்பு, கரோனரி பிடிப்புகள் மற்றும் மனநல மாற்றங்கள் போன்றவற்றை அனுபவிக்கலாம்.

மக்னீசியம் அதிகம் நிறைந்த உணவுகள்
மக்னீசியம் குறைபாட்டைப் போக்க சாப்பிட வேண்டிய உணவுகளாவன பாதாம், பசலைக்கீரை, சோயாபீன்ஸ், அவகேடோ, உருளைக்கிழங்கு, கைக்குத்தல் அரிசி, முந்திரி, ப்ராக்கோலி, வெண்டைக்காய், எள்ளு விதைகள், தர்பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள், துளசி, ஆளி விதைகள் போன்றவை.



Click it and Unblock the Notifications