Latest Updates
-
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா?
பிபி இருப்பவர்கள் 'இந்த' விஷயத்தை தீவிரமா செய்யக்கூடாதாம்...இல்லனா மாரடைப்பு ஏற்படுமாம்...ஜாக்கிரதை!
உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு ஜாகிங், மிதமான ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல் ஆகியவை பரிந்துரைக்கப்படும் உடற்பயிற்சிகள். ஆனால், இவர்களுக்கு ஸ்பிரிண்டிங் ஒரு நல்ல தேர்வு அல்ல.
உயர் இரத்த அழுத்தம் என்பது ஒரு வாழ்க்கை முறைக் கோளாறு ஆகும். நீண்ட காலமாக இந்த நோயறியாமல் அல்லது சிகிச்சை இல்லாமல் இருந்தால், கடுமையான நோய்களை ஏற்படுத்தலாம். உயர் இரத்த அழுத்தத்தைக் கையாள்பவர்கள் நாள் முழுவதும் தங்கள் இரத்த அழுத்தத்தின் அளவைக் கவனித்து கொள்ள வேண்டும். உங்கள் உடல் செயல்பாடுகளும், நீங்கள் சாப்பிடும் உணவுகளும் உங்க இரத்த அழுத்த அளவில் மாற்றத்தை உண்டாக்கும். இரத்த அழுத்தம் அதிகரிப்பது பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான அபாயத்தை ஏற்படுத்தும். உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட தினசரி உடற்பயிற்சி பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.

ஆனால், தீவிர உடற்பயிற்சி இரத்த அழுத்தத்தை உடனடியாக அதிகரிக்கலாம். இது தலைச்சுற்றல் மற்றும் மூச்சுத் திணறலுக்கு வழிவகுக்கும். 180/100 மிமீஹெச்ஜி அல்லது அதற்கு மேற்பட்ட இரத்த அழுத்தம் உள்ள அனைவரும், புதிய உடற்பயிற்சி முறையைத் தொடங்குவதற்கு முன், மருத்துவரிடம் மருத்துவ ஆலோசனையைப் பெற பரிந்துரைக்கப்படுகிறது. பிபி இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டிய சில பயிற்சிகள் பற்றியும் பாதிப்பை பற்றியும் இக்கட்டுரையில் காணலாம்.

பளு தூக்குதல்
உடற்பயிற்சி செய்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. வலிமையான பயிற்சி எலும்புகளை வலுப்படுத்தவும், எலும்பு தொடர்பான காயங்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும். உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு, எடையைத் தூக்குவது இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்தவும், கடுமையான நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும். ஆனால், கடுமையான உடற்பயிற்சி உங்கள் இரத்த அழுத்த அளவை ஆபத்தான நிலைக்கு உயர்த்தும்.

ஸ்பிரிண்டிங்
உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு ஜாகிங், மிதமான ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல் ஆகியவை பரிந்துரைக்கப்படும் உடற்பயிற்சிகள். ஆனால், இவர்களுக்கு ஸ்பிரிண்டிங் ஒரு நல்ல தேர்வு அல்ல. ஸ்ப்ர்னிட்டிங் என்பது அதிக தாக்கம் மற்றும் தீவிரமான உடற்பயிற்சி செயலாகும். இது உங்கள் இரத்த அழுத்த அளவை உடனடியாக அதிகரிக்கலாம்.

ஆழ்கடலில் நீச்சல்
உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள், டைவிங் செய்யும் போது, அவர்களின் இரத்த அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இது மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம். இவை இரண்டும் நீருக்கடியில் ஆபத்தானவை. இந்த வாட்டர் ஸ்போர்ட்ஸை முயற்சிக்கும் முன், உங்கள் மருத்துவரை அணுகி, விரும்பத்தகாத நிகழ்வுகளைத் தவிர்க்க செக்-அப் செய்துகொள்ளுங்கள்.

ஸ்கைடிவிங்
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், வானில் ஸ்கைடிவிங்கின் செய்யும்போது ஆக்ஸிஜன் மாற்றங்களில் தலையிடலாம். இது ஒரு சாகச மற்றும் தீவிர விளையாட்டு. இது இரத்த அழுத்த அளவை திடீரென அதிகரிக்க வழிவகுக்கும். இதுபோன்ற உடற்பயிற்சி விளையாட்டுகள் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இதுபோன்ற எதையும் முயற்சிக்கும் முன் உங்கள் மருத்துவரிடம் பேசுவது நல்லது.

ஸ்குவாஷ்
ஸ்குவாஷ் என்பது ஒரு தீவிரமான உடற்பயிற்சியாகும். இது நீங்கள் விரைவாக ஓடவும் நகரவும் வேண்டும். உயர் இரத்த அழுத்தம் இருக்கும் போது இதுபோன்ற பயிற்சிகளை செய்வதன் மூலம் உங்கள் இரத்த அழுத்தத்தை விரைவாக அதிகரித்து மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். ஆதலால், இந்த கடினமான உடற்பயிற்சியை தவிர்த்து விடுங்கள்.

இறுதிகுறிப்பு
இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தீவிரமான மற்றும் கடினமான உடற்பயிச்சிகள் செய்ய தவிர்க்கப்படுகிறார்கள். இது அவர்களின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். பந்துவீச்சு, கோல்ஃப் மற்றும் டேபிள் டென்னிஸ் போன்ற உடற்பயிச்சி விளையாட்டுக்களை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் நீங்கள் தேர்வு செய்யலாம். மேலும், விறுவிறுப்பான நடைப்பயிற்சி, ஜாகிங், யோகா போன்ற எளிய பயிற்சிகளைச் செய்வதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம் மற்றும் இரத்த அழுத்த அளவைக் குறைக்கலாம்.



Click it and Unblock the Notifications