Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம்
40 வயதிற்கு மேலான ஆண்களைத் தாக்கும் ஹைட்ரோசெல் நோய் பற்றி தெரியுமா?
ஹைட்ரோசெல் என்பது ஆண்களுக்கு பொதுவாக தென்படும் நோயாகும். ஆண்களின் ஆணுறுப்பு பகுதியில் அதிகப்படியான திரவம் தேங்கி வீக்கத்தை ஏற்படுத்தும் நிலை தான் இந்த ஹைட்ரோசெல்.
ஹைட்ரோசெல் என்பது ஆண்களுக்கு பொதுவாக தென்படும் நோயாகும். இதை பிறப்புறுப்பு எடிமா அல்லது டெஸ்டிகுலர் எடிமா என்றும் அழைக்கின்றனர். ஆண்களின் ஆணுறுப்பு பகுதியில் அதிகப்படியான திரவம் தேங்கி வீக்கத்தை ஏற்படுத்தும் நிலை தான் இந்த ஹைட்ரோசெல்.

இது பொதுவாக குழந்தைகளுக்கும் வயதான பெரியவர்களுக்கும் தொற்றக்கூடும். இந்த வீக்கத்தால் பிறப்புறுப்பு பகுதியில் வலி உண்டாகும். விந்தணுவை சேமிக்கும் இரண்டு பைகளிலும் வீக்கம் ஏற்படலாம். பிறந்த குழந்தைக்கு கூட இந்த பாதிப்பு ஏற்பட்டு ஓரிரு வருடங்களில் சரியாக வாய்ப்புள்ளது.
40 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் இந்த ஹைட்ரோசெல் பாதிப்பால் அவதிப்படுகிறார்கள். வலி சில நேரங்களில் இல்லாமல் இருக்கலாம் இல்லையென்றால் காலப்போக்கில் அதிகரிக்க நேரிடும்.

ஹைட்ரோசெல் ஏற்பட பொதுவான காரணங்கள்:
* ஆணுறுப்பில் ஏற்படும் காயம்
* நரம்புகளில் வீக்கம்
* மரபணு காரணங்கள்
* பல கூட்டாளர்களுடன் உடல் உறவு கொள்ளுதலால் ஏற்படும் அழற்சி
* அதிக எடையை தூக்குதல்
* உடலில் அசுத்தமான மலம் வெளியேறாமல் இருப்பது
* மலச்சிக்கல் காரணமாக
* நீண்ட நேரம் சிறுநீர் கழிப்பதை நிறுத்துவதால் சிறுநீர்ப்பையில் ஏற்படும் அழுத்தம்
* ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும் இந்த பிரச்சினைக்கு பின் இருக்கும் காரணங்களாக உள்ளன.

அறிகுறிகள்
* முதலில் விந்தணு பையில் நீர் தேங்கி வீக்கம் உண்டாகும்
* விந்தணு பை நீர் தேங்கி சாதாரண அளவை விட பெரிதாகும்
* கடுமையான வலி ஏற்படும்
* இதனால் பாதிக்கப்பட்ட நபர் நடக்க முடியாது, உட்கார கூட முடியாது.

நோயைக் கண்டறிதல்
உடற்பரிசோதனையாக விந்தணு பை வீங்கிய விதத்தை வைத்தும் அளவைப் பார்த்தும் கண்டறியலாம். சில சமயங்களில் ஏதேனும் காயங்கள் அல்லது அழற்சியால் கூட இப்படி நேர வாய்ப்புள்ளது. அந்த மாதிரியான சமயங்களில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் விந்தணு பையில் தேங்கி இருக்கும் திரவத்தை படம் எடுத்து கண்டறிவார்கள்.

சிகிச்சை முறைகள்
ஹைட்ரோசெல் பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால் மருந்து மாத்திரைகள் மூலம் குணப்படுத்தி விடலாம். இல்லையென்றால் நிலைமை மோசமாகி அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

ஹைட்ரோகெலெக்டோமி
ஹைட்ரோசெல் பாதிப்பால் ஏற்படும் வலி தாங்க முடியாத ஒன்று. வீக்கம் இருப்பதால் இரத்த ஓட்டம் தடைபட வாய்ப்புள்ளது. இந்த சமயங்களில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இரத்தத்தில் தொற்று, திரவம் கசியத் தொடங்கினால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஆரம்பித்து விடுவார்கள். இந்த ஹைட்ரோகெலெக்டோமி அறுவை சிகிச்சை மூலம் இதை சரி செய்து விடலாம். ஆனால் சிலருக்கு மீண்டும் பாதிப்பு மறுபடி வர வாய்ப்புள்ளது.

துளையிடுதல் முறை
இந்த முறையில் விந்தணு பையில் இருக்கும் நீரை வெளியேற்ற துளையிட்டு அதன் வழியாக வெளியேற்றுகின்றனர். பிறகு இந்த துளையை ஸ்க்லரோசிங் மருந்துகளை உட்செலுத்தி மூடி விடுகின்றனர். இந்த முறை மூலம் பிற்காலத்தில் இந்த பாதிப்பு வருவது குறைவு . எனவே அறுவை சிகிச்சை விரும்பாத நபர்கள் இதை மேற்கொள்ளலாம். ஆனால் லேசான வலி, தொற்று மற்றும் விந்தணுக்களைச் சுற்றியுள்ள ஃபைப்ரோஸிஸ் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

தடுப்பு நடவடிக்கைகள்:
* ஆரோக்கியமான சாப்பாடு, சுகாதாரமான வாழ்க்கை முறையை பேணுங்கள்.
* ஆணுறுப்பில் ஏற்படும் காயத்தை தடுக்க விளையாடும் போது பாதுகாப்பு கப்களை வைத்துக் கொள்ளுங்கள்.
* நோய்த்தொற்றை தடுக்க பல பேருடனான உடலுறவை தவிருங்கள்.
* உடற்பயிற்சி செய்து உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications