Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
72 மணிநேரத்தில் நுரையீரலை சுத்தம் செய்ய வேண்டுமா? அப்ப இந்த மாதிரி செய்யுங்க..
நுரையீரலை சுத்தம் செய்ய பல வழிகள் உள்ளன. ஆனால் அவை அனைத்துமே உடனடி மற்றும் நீடித்த முடிவுகளைத் தராது. ஆயினும், 72 மணிநேரத்தில் அதாவது 3 நாட்களில் நுரையீரலில் உள்ள பெரும்பாலான நச்சுக்களை வெளியேற்றும் சில வழிமுறைகள் உள்ளன.
மனித உடலில் நுரையீரல் மிகவும் முக்கியமான உறுப்பு. ஆனால் தற்போதைய மாசடைந்த சுற்றுச்சூழலால் பெரும்பாலான மக்கள் நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளைக் கொண்டுள்ளனர். மேலும் உயிரைப் பறிக்கும் கொடிய நோய்களில் ஒன்றான நுரையீரல் புற்றுநோயாலும் மக்கள் அவதிப்படுகின்றனர். பலரும் நுரையீரல் பிரச்சனை புகைப்பிடிப்பவர்களுக்கு மட்டும் தான் வரும் என்று நினைக்கிறார்கள். ஆனா, அது தவறு. நுரையீரலில் அதிகப்படியான நச்சுக்கள் தேங்கியிருந்தாலும், நுரையீரல் பிரச்சனை வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே நுரையீரலை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியது முக்கியம்.

நுரையீரலை எப்படி சுத்தம் செய்வது என்று நீங்கள் கேட்கலாம். நுரையீரலை சுத்தம் செய்ய பல வழிகள் உள்ளன. ஆனால் அவை அனைத்துமே உடனடி மற்றும் நீடித்த முடிவுகளைத் தராது. ஆயினும், 72 மணிநேரத்தில் அதாவது 3 நாட்களில் நுரையீரலில் உள்ள பெரும்பாலான நச்சுக்களை வெளியேற்றும் சில வழிமுறைகள் உள்ளன. இப்போது அந்த வழிமுறைகளைத் தான் பார்க்கப் போகிறோம். நீங்கள் 3 நாட்களில் நுரையீரலை சுத்தம் செய்ய விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு செய்யுங்கள்.

படி #1
நுரையீரலை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்கள் என்றால், முதலில் பால் பொருட்களை முழுமையாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் பால் பொருட்கள் ஒரு குறிப்பிட்ட நச்சுக்களைக் கொண்டுள்ளன. எனவே முதலில் பால் பொருட்களை நுரையீரல் சுத்திரிப்பின் போது அறவே தவிர்க்க வேண்டும்.

படி #2
நுரையீரல் சுத்திகரிப்பின் முதல் நாளில் இரவு தூங்கும் முன் ஒரு கப் மூலிகை டீ குடிக்க வேண்டும். இது இரைப்பைக் குடல் பாதையில் மலச்சிக்கலை உண்டாக்கும் டாக்ஸின்கள் மற்றும் பிற நச்சுக்கள் அனைத்தையும் வெளியிடச் செய்யும். மேலும் நுரையீரல் சுத்திகரிப்பின் போது, நுரையீரல் அல்லது உடலின் பிற பகுதிகளுக்கு கடுமையான வேலையைக் கொடுக்கக்கூடாது. காலை உணவு உண்பதற்கு முன் 300 மிலி நீரில் 2 எலுமிச்சையின் சாற்றினைப் பிழிந்து, அந்த எலுமிச்சை நீரைக் குடிக்க வேண்டும்.

படி #3
300 மிலி கிரேப்ஃபுரூட் ஜூஸ் அல்லது அன்னாசி ஜூஸ் குடிக்க வேண்டும். இந்த இரண்டு ஜூஸ்களிலுமே இயற்கை ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை சுவாச மண்டலத்தை மற்றும் அதன் செயல்பாட்டை சரிசெய்யும்.

படி #4
காலை உணவு மற்றும் மதிய உணவுகளுக்கு இடையே 300 மிலி கேரட் ஜூஸ் குடிக்க வேண்டும். இந்த ஜூஸ் நுரையீரல் சுத்திகரிப்பின் போது இரத்தத்தை காரமாக்க உதவுகிறது.

படி #5
மதிய வேளையில் 400 மிலி பொட்டாசியம் அதிகம் நிறைந்த ஜூஸ் குடிக்க வேண்டும். ஏனெனில் பொட்டாசியமானது ஒரு சிறந்த கிளென்சிங் டானிக் போன்ற செயல்படுகிறது. இந்த பொட்டாசியம் சத்தானது ஆரஞ்சு, வாழைப்பழம், கிவி, மாம்பழம், மாதுளை போன்ற பழங்களில் அதிகம் உள்ளது.

படி #6
இரவு தூங்கும் முன் 400 மிலி கிரான்பெர்ரி ஜூஸ் குடிக்க வேண்டும். இது நுரையீரலில் தொற்றுக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராட உதவுகிறது.

உடற்பயிற்சி அவசியம்
முக்கியமாக நுரையீரல் சுத்திகரிப்பின் போது தவறாமல் உடற்பயிற்சியை செய்ய வேண்டும். ஏனெனில் உடற்பயிற்சி செய்யும் போது வெளியேறும் வியர்வையின் மூலம் ஏராளமான நச்சுக்கள் வெளியேற்றப்படுகின்றன. எனவே தினமும் தவறாமல் 30 நிமிடம் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். மேலும், தினமும் 20 நிமிடம் சுடுநீர் குளியல் மேற்கொள்வதன் மூலமும் நச்சுக்கள் வெளியேற்றப்படுகின்றன. இது தவிர ஒரு பௌல் சுடுநீரில் 5-10 துளிகள் யூகலிப்டஸ் எண்ணெயை ஊற்றி, அந்நீரில் ஆவி பிடிக்க வேண்டும். இதன் மூலம், சுவாச மண்டலம் ரிலாக்ஸாகி, சுவாசப் பாதை சுத்தமாகும்.

எதை தவிர்க்க வேண்டும்?
நுரையீரல் சுத்திகரிப்பில் ஈடுபட்டிருக்கும் போது, புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை சுத்திகரிப்பு செயல்முறையில் இடையூறை ஏற்படுத்தும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ளதை ஒருவர் 3 நாட்கள் பின்பற்றி வந்தால், நுரையீரலில் உள்ள பெரும்பாலான நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, நுரையீரல் ஓரளவு சுத்தமாக இருக்கும். இருப்பினும், நீங்கள் ஏதேனும் மருந்து மாத்திரைகளை தினமும் உட்கொள்பவராயின், உங்கள் மருத்துவரை அணுகி அவரது அனுமதி பெற்றி பின் முயலுங்கள்.



Click it and Unblock the Notifications