Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
உங்களுக்கு தைராய்டு இருக்கா? அப்ப இந்த பிரச்சனைகளை சந்திக்க நிறைய வாய்ப்பிருக்கு...
ஆண்களை விட பெண்கள் தான் தைராய்டு பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். தைராய்டு பிரச்சனையால் பல பெண்களின் உடலில் நிறைய மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதில் ஒன்று ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி.
தைராய்டு என்பது கழுத்தில் இருக்கும் ஒரு முக்கியமான சுரப்பியாகும். இன்று பெரும்பாலான பெண்கள் தைராய்டு பிரச்சனையை சந்திக்கிறார்கள். இந்த தைராய்டில் இரண்டு வகைகள் உள்ளன. அவை ஹைப்பர் தைராய்டு மற்றும் ஹைப்போ தைராய்டு. இதில் ஹைப்பர் தைராய்டு என்பது அளவுக்கு அதிகமான தைராய்டு ஹார்மோன்கள் உற்பத்தி செய்யப்படும் நிலையாகும். ஹைப்போ தைராய்டு என்பது குறைவான அளவில் தைராய்டு ஹார்மோன்கள் உற்பத்தி செய்யப்படும் நிலையாகும்.

ஆண்களை விட பெண்கள் தான் தைராய்டு பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். தைராய்டு பிரச்சனையால் பல பெண்களின் உடலில் நிறைய மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதில் ஒன்று ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி. இது தவிர தூக்கமின்மை, உடல் பருமன் அல்லது எடை இழப்பு, அதிகப்படியான மன அழுத்தம் போன்ற அறிகுறிகளை தைராய்டு பிரச்சனை உள்ள பெண்கள் சந்திப்பார்கள். இப்போது தைராய்டு பிரச்சனை வேறு எந்த ஆரோக்கிய பிரச்சனைகளை வரத் தூண்டும் என்பதைக் காண்போம்.

சரும பிரச்சனைகள்
தைராய்டு ஹார்மோன்கள் உடலில் அளவுக்கு அதிகமாக சுரக்கும் போது, அது பல்வேறு சரும பிரச்சனைகளை உருவாக்கும். அதில் முக்கியமான ஒரு சரும பிரச்சனை தான் முகப்பரு. எனவே திடீரென்று உங்களுக்கு முகப்பரு வருகிறது என்றால், உங்களுக்கு தைராய்டு பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த தைராய்டு பிரச்சனைக்கான மருந்து மாத்திரைகளை எடுக்க வேண்டும். பெரும்பாலும் இந்த பிரச்சனையானது 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களிடமே காணப்படுகின்றன.

முன்கூட்டிய மெனோபாஸ்
தைராய்டு பிரச்சனையானது பெண்களுக்கு முன்கூட்டிய மெனோபாஸை உண்டாக்கும். அதென்ன முன்கூட்டிய மெனோபாஸ் என்று கேட்கலாம். முன்கூட்டிய மெனோபாஸ் என்பது 45 முதல் 50 வயதிற்குள் ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சி முழுமையாக நிறுத்தப்படும் நிலையாகும். பொதுவாக பெண்களுக்கு 50 வயதிற்கு மேல் தான் மாதவிடாய் சுழற்சி முற்றிலும் நிறுத்தப்படும். ஆனால் தைராய்டு பிரச்சனை இருந்தால், அது சீக்கிரமே நின்றுவிடும்.

கருவுறாமை
ஒரு பெண்ணால் கருவுற முடியாமல் போனால், அப்பெண்ணிற்கு தைராய்டு பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது. ஹைப்பர் தைராய்டு அல்லது ஹைப்போ தைராய்டு என்று எது இருந்தாலும், அது பெண்ணின் கருவுறுதல் செயல்முறையை பாதிக்கும். ஏனெனில் தைராய்டு பிரச்சனையானது கருப்பையில் நீர்க்கட்டிகளை உருவாக்கலாம். அதன் விளைவாக கருவுறுதலில் பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

ஒழுங்கற்ற மாதவிடாய்
தைராய்டு பிரச்சனை இருக்கும் பெண்கள் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியாகும். அதில் சில பெண்களுக்கு குறுகிய காலத்தில் மாதவிடாய் சுழற்சி நிகழலாம் அல்லது பல மாதங்களுக்கு ஒருமுறை நிகழலாம்.

போஸ்ட்போர்ட்டல் தைராய்டிடிஸ்
இந்த போஸ்ட்போர்ட்டல் தைராய்டிடிஸ் பிரசவத்திற்கு பின்பு ஏற்படும். தைராய்டு சுரப்பியின் ஏற்றத்தாழ்வு காரணமாக, பெண்களுக்கு பிரசவத்திற்குப் பிறகு தைராய்டிடிஸ் பிரச்சனை ஏற்படலாம். அதுவும் பிரசவத்திற்கு பின், 4 முதல் 12 மாதங்களுக்கு இடையே இப்பிரச்சனை ஏற்படலாம். ஏனெனில் இக்காலத்தில் இரத்தத்தில் தைராய்டு ஹார்மோன்கள் காணப்படும். ஆனால் இப்பிரச்சனை அனைத்து பெண்களிடம் காணப்படாது. இருப்பினும் தைராய்டு சுரப்பியில் பிரச்சனை உள்ள பெண்களுக்கு இந்த பிரச்சனைக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.



Click it and Unblock the Notifications