Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
ஆண்களே! 30 வயசாயிடுச்சா? அப்ப இனிமேல் உங்களுக்கு இந்த பிரச்சனைலாம் வர வாய்ப்பிருக்கு... உஷார்...
ஆண்கள் எவ்வளவுக்கு எவ்வளவு தங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்கிறார்களோ, அந்த அளவில் அவர்களின் வாழ்நாள் நீட்டிக்கப்படும். இப்போது 30 வயதை எட்டிய ஆண்கள் எந்த மாதிரியான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதை காண்போம்.
பெண்களை விட ஆண்கள் தான் உயிரைப் பறிக்கும் பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். முந்தைய காலத்தில் ஆண்கள் 50 வயதிற்கு மேல் தான் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்து வந்தார்கள். ஆனால் தற்போதைய மார்டன் உலகில் 30 வயதை எட்டியதுமே ஆண்களின் உடலில் பல பிரச்சனைகள் தலைதூக்க ஆரம்பிக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக திகழ்வது வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் தான். இவ்விரண்டுமே முந்தைய காலத்தில் இருந்து முற்றிலும் மாறிவிட்டது.

மேலும் பெண்களை விட ஆண்கள் உடலில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு அவ்வளவு எளிதில் மருத்துவரிடம் செல்வதில்லை. இதனால் பிரச்சனையானது முற்றிய நிலையில் மருத்துவரை அணுகுகின்றனர். இதன் விளைவாக சில சமயங்களில் உயிரை இழக்க நேரிடுகிறது. அதில் முக்கியமான ஒன்று தான் மாரடைப்பு. ஆண்கள் எவ்வளவுக்கு எவ்வளவு தங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்கிறார்களோ, அந்த அளவில் அவர்களின் வாழ்நாள் நீட்டிக்கப்படும். இப்போது 30 வயதை எட்டிய ஆண்கள் எந்த மாதிரியான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதையும், அதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் காண்போம்.

1. இதய நோய்
உலகில் மரணத்தை அதிகம் ஏற்படுத்தும் ஓர் பிரச்சனை தான் மாரடைப்பு மற்றும் பக்கவாதம். அதுவும் தற்போதைய காலகட்டத்தில் வயது அதிகரிக்கும் போது இதய நோயின் அபாயமும் அதிகரிக்கிறது. குறிப்பாக பெண்களை விட ஆண்களுக்கு தான் மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. எனவே 30 வயதை எட்டிய ஆண்கள் ஒவ்வொருவரும் தங்களின் இதய ஆரோக்கியத்தில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும்.

இதய பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைப்பது எப்படி?
* கெட்ட கொழுப்புக்கள் நிறைந்த பொரித்த உணவுகள், கேக்குகள், பிஸ்கட் போன்றவற்றைத் தவிர்த்து, பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உண்ண வேண்டும்.
* புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால், அதை நிறுத்த முயற்சிக்க வேண்டும்.
* தினமும் தவறாமல் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். கடுமையான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும் என்பதில்லை, 30 நிமிட நடைப்பயிற்சி போதுமானது.
* வாரம் ஒருமுறை குடும்பத்தினருடன் சந்தோஷமாக நேரத்தை செலவிட முயற்சிக்க வேண்டும்.
* மல்டிவைட்டமின் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் எடுத்து வருவது நல்லது.

2. சர்க்கரை நோய்
இன்று சர்க்கரை நோய் இல்லாதவர்கள் காண முடியாது. இதன் முக்கிய அறிகுறியே அடிக்கடி சிறுநீர் கழிப்பது தான். வயது அதிகரிக்கும் போது சர்க்கரை நோயின் அபாயம் அதிகரிக்கும். குறிப்பாக 30 வயதை எட்டினால், எப்போது வேண்டுமானாலும் இப்பிரச்சனையை சந்திக்க வாய்ப்புள்ளது. அதுவும் பரம்பரையில் யாருக்கேனும் சர்க்கரை நோய் இருந்தால், அத்தகையவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கு நிறைய வாய்ப்புள்ளது. எனவே ஆரம்பத்தில் இருந்தே உஷாராக இருப்பது நல்லது.

சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைப்பது எப்படி?
* தினமும் நல்ல ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும் மற்றும் சரியான நேரத்தில் உணவுகளை தவறாமல் உண்ண வேண்டும்.
* தினமும் 30 நிமிடம் நடக்கும் ஆண்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான அபாயம் 50 சதவீதம் குறையும்.
* உடல் எடை அதிகரிக்காமல் ஃபிட்டாக இருக்க வேண்டும். ஏனெனில் உடல் பருமன் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் நிச்சயம் வரும்.

3. விறைப்புத்தன்மை பிரச்சனை
விறைப்புத்தன்மை பிரச்சனை உயிரைப் பறிக்கும் அளவில் அபாயகரமானது அல்ல. ஆனால் இது ஆண்மைக்குறைவு போன்ற பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். விறைப்புத்தன்மை பிரச்சனை சந்திக்கும் ஆண்கள் சுயமரியாதையை இழந்து மனச்சோர்வடையக்கூடும். எனவே விறைப்புத்தன்மை பிரச்சனையை சந்திக்கும் ஆண்கள் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகி சோதிக்க வேண்டும். இப்பிரச்சனையைத் தவிர்க்க சிறந்த வழி மல்டி வைட்டமின்களை எடுப்பது தான். இவை விறைப்புத்தன்மை பிரச்சனையைப் போக்க உதவுவது மட்டுமின்றி, விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் கருவுறுதலையும் மேம்படுத்த உதவும்.

4. மன இறுக்கம்/மன அழுத்தம்
வயது அதிகரிக்கும் போது ஒருவருக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். குறிப்பாக ஆண்களுக்கு இது அதிகமாகவே இருக்கும். இதனால் ஆண்கள் சீக்கிரம் மன இறுக்கத்திற்கு ஆளாவார்கள். மன இறுக்கத்துடன் இருக்கும் நபருக்கு எதிலும் ஆர்வம் இருக்காது. மேலும் அதிக கோபம் கொள்வதோடு, கண்டபடி பேச ஆரம்பிப்பார்கள். சொல்லப்போனால் ஆண்களின் தற்கொலைக்கு மன அழுத்த 8 ஆவது முக்கிய காரணமாகும். ஆனால் ஒருவரின் உதவியுடன் மன அழுத்தத்தில் இருந்துவிடுபடலாம்.

மன அழுத்தத்தைத் தவிர்ப்பது எப்படி?
* தினமும் சிறிது நேரம் தியானம் செய்ய வேண்டும். இது மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவும்.
* உடற்பயிற்சி, யோகா போன்றவற்றில் ஈடுபடுவதன் மூலமும் மன அழுத்தத்தைத் தவிர்க்கலாம்.

5. ஆர்த்ரிடிஸ்
வயது அதிகரிக்கும் போது, எலும்புகளின் அடர்த்தி குறைய ஆரம்பித்து மூட்டுக்களில் பிரச்சனையை சந்திக்க நேரிடும். இந்த பிரச்சனை ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் இருக்கும். கிட்டத்தட்ட வாழ்வின் ஒரு கட்டத்தில் மூட்டுக்களில் வீக்கம், வலி, பிடிப்பு போன்றவற்றை சந்திக்க நேரிடும். இவை அனைத்தும் ஆர்த்ரிடிஸ் பிரச்சனையின் அறிகுறிகளாகும். இந்த ஆர்த்ரிடிஸ் பிரச்சனை உடலின் எந்த மூட்டுக்களிலும் ஏற்படலாம்.

ஆர்த்ரிடிஸ் அபாயத்தைக் குறைப்பது எப்படி?
* உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
* தினமும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.
* வைட்டமின் டி மற்றும் கால்சியம் உணவுகளை போதுமான அளவு சாப்பிட வேண்டும்.
* கால்சியம் மாத்திரைகள் மற்றும் சப்ளிமெண்ட்டுகளை மருத்துவரின் அறிவுரையின் பேரில் எடுக்க வேண்டும்.

6. உடல் பருமன்
வயது அதிகரிக்கும் போது உடலின் மெட்டபாலிசம் குறைந்து, கொழுப்புக்கள் வயிறு மற்றும் உடலில் ஆங்காங்கு அப்படியே தங்கிவிடும். அப்படி தங்கும் போது, அது உடல் தோற்றத்தை சேதப்படுத்தி அசிங்கமான தொப்பையை உருவாக்கும். தொப்பை வந்துவிட்டால், அது பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக பெண்களை விட ஆண்கள் தான் பானை போன்ற பெரிய தொப்பையை கொண்டு அவதிப்படுவார்கள். ஒருவரது உடல் பருமனாகிவிட்டால், அதைக் குறைப்பது என்பது மிகவும் கடினம். எனவே ஆரம்பத்திலேயே எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.

உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது எப்படி?
* ஜங்க் உணவுகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.
* தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
* சர்க்கரை உணவுகளைக் கட்டுப்படுத்தி, கார்போஹைட்ரேட் உணவுகளை குறைக்க வேண்டும்.
* தினமும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகள் உண்பதோடு, க்ரீன்-டீயை குடிக்க வேண்டும்.

7. செரிமான கோளாறு
30 வயதை எட்டிய நிறைய ஆண்கள் சந்திக்கும் மற்றொரு பொதுவான பிரச்சனை தான் செரிமான கோளாறு. ஏனெனில் வயது அதிகரிக்கும் போது செரிமான சக்தி குறையும். இதன் விளைவாக உணவுகள் சரியாக செரிமானமாகாமல் பலவிதமான செரிமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

செரிமான பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைப்பது எப்படி?
* புகைப்பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
* மது மற்றும் காஃப்பைன் பானங்களை குறைக்க வேண்டும்.
* உணவு உண்ண உடனேயே தூங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
* இஞ்சி, சீமைச்சாமந்தி, புதினா, துளசி போன்றவற்றைக் கொண்டு அவ்வப்போது தேநீர் தயாரித்துக் குடிக்கலாம்.



Click it and Unblock the Notifications