Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
தினமும் ஆபாசப்படங்களைப் பார்ப்பதால் சந்திக்கும் மோசமான விளைவுகள் பற்றி தெரியுமா?
ஆபாச படத்திற்கு அடிமையானால் உடல் மற்றும் வளர்ச்சி மட்டுமின்றி, உறவுகளும் பாதிக்கப்படும். படம் தானே பார்க்கிறோம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது உங்களை அறியாமலேயே பல மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
இன்றைய காலகட்டத்தில் மக்கள் அதிக நேரம் இணையத்தில் நேரத்தை செலவிட வேண்டியவாறு உள்ளது. இதற்கு அவர்கள் செய்யும் வேலை காரணமாக இருக்கலாம். ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலையில் பலர் எதை எதையோ தேடுகிறேன் என்று, அந்த இணையத்தை தவறுதலாக பயன்படுத்தி ஒரு மோசமான அடிமைப்பழக்கத்திற்கு ஆளாகிறார்கள். அது தான் ஆபாசப் படத்தைப் பார்ப்பது. ஆனால் பலருக்கு தாங்கள் ஆபாச படத்திற்கு அடிமையாகிவிட்டோம் என்பது தெரிவதில்லை.

இப்படி தெரியாததால், இவர்களுக்கு தங்களின் நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றம் மற்றும் தங்களின் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படுகிறது போன்றவை தெரியாமல் இருக்கிறார்கள். இப்பழக்கத்திற்கு அடிமையானால் உடல் மற்றும் வளர்ச்சி மட்டுமின்றி, உறவுகளும் பாதிக்கப்படும். படம் தானே பார்க்கிறோம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது உங்களை அறியாமலேயே பல மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். இப்போது ஆபாசப்படத்தைப் பார்ப்பதால் ஏற்படும் தீமைகள் என்னவென்பதைக் காண்போம். உங்களுக்கு இம்மாதிரியான பழக்கம் இருந்தால், உடனே அதை நிறுத்த முயலுங்கள். இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திப்பீர்கள்.

உங்களின் சந்தோஷத்தை மறைத்துவிடும்
இன்றைய சமூகத்தில் ஆபாசப்படத்தைப் பார்ப்பது ஒரு செயலாக மாறியிருந்தாலும், இதை செய்வதன் மூலம் உங்களை அறியாமலேயே உங்கள் மகிழ்ச்சியை நீங்கள் அழித்து வருகிறீர்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் இப்படத்தைக் காண வேண்டும் என்ற அளவுக்கு அதிகமான எண்ணத்தால் தன்னைச் சுற்றியிருப்பவர்களை விட்டு எப்போதும் தனியே இருக்க நேரிடுகிறது.

மனதளவில் பலவீனம்
எப்படி புகை, மது போன்றவற்றிற்கு மக்கள் அடிமையாகிவிடுகிறார்களோ, அதேப் போல் ஆபாசப்படங்களைப் பார்ப்பதற்கும் மக்கள் அடிமையாகிவிடுகிறார்கள். இப்படி ஒரு விஷயத்தை தொடர்ந்து செய்வதன் மூலம், அவர்களின் மூளையில் டோபமைன் என்னும் ரசாயனம் நிரம்பி, மீண்டும் மீண்டும் ஆபாசப் படத்தைப் பார்க்கத் தூண்டி, மனதளவில் ஒருவரை பலவீனமாக்கிவிடும்.

கணவன்-மனைவி உறவைக் கெடுக்கும்
ஆபாசப் படங்கள் கணவன்-மனைவிக்கு இடையேயான உறவைக் கெடுத்துவிடும் என்று உளவியல் நிபுணர்கள் நம்புகிறார்கள். இம்மாதிரியான படத்தை தினமும் பார்த்து வந்தால், அது வாழ்க்கைத் துணையுடனான உங்கள் உறவை பலவீனமாக்கி, உறவை முறிக்கவும் வாய்ப்புள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டது போன்ற உணர்வு
என்ன தான் ஆபாசப்படங்களை ஒருவர் தனிமையில் பார்த்தாலும், இதுப்போன்ற படங்களைப் பார்ப்பவர்களிடையே ஒருவித சங்கடம், தனிமை மற்றும் பாதுகாப்பின்மை போன்ற உணர்வுகள் அதிகரிக்கிறது. அதோடு இப்பழக்கம் உள்ளவர்களிடையே டென்சன் மற்றும் அமைதியின்மை போன்ற பிரச்சனைகளும் எழுகின்றன.

வன்முறையை ஊக்குவிக்கின்றன
ஆபாசப் படங்களைப் பார்ப்பது சமூகத்தில் குற்றச் செயல்களை ஊக்குவிக்கிறது. அதுவும் இப்படங்களைப் பார்ப்பவர்கள் பெண்கள் மீதான மரியாதை உணர்வை இழந்து, துஷ்பிரயோகம், கற்பழிப்பு மற்றும் தாக்குதல் போன்ற மோசமான மற்றும் தவறான உணர்வுகளை வளர்த்துக் கொண்டு, பெண்களும் மோசமாக நடந்து கொள்கிறார்கள்.



Click it and Unblock the Notifications