Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
ஆண்களை விட பெண்களுக்கு இடுப்புப் பகுதியில் கொழுப்பு அதிகம் இருக்க காரணம் என்ன தெரியுமா?
ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு இடுப்பு பகுதியில் இருக்கும் கொழுப்பை குறைப்பது என்பது மிகப்பெரிய பிரச்சினையாகும்.
வயிறு வீக்கம் என்பது இன்று பெரும்பாலான மக்களுக்கு இருக்கும் ஒரு முக்கிய பிரச்சினையாகும். எவ்வளவுதான் அழகிய உடையை அணிந்திருந்தாலும் வயிறு பெரிதாக தெரியும் போது அது நம்முடைய தோற்றத்தையே மாற்றிவிடும், இதனால் நாம் பல சங்கடங்களுக்கு ஆளாக நேரிடலாம். வயிற்றுப்பகுதியில் இருக்கும் கொழுப்பை குறைக்க வேண்டுமென்பதே இன்றைய இளைஞர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலாகும்.

ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு இடுப்பு பகுதியில் இருக்கும் கொழுப்பை குறைப்பது என்பது மிகப்பெரிய பிரச்சினையாகும். ஏனெனில் ஹார்மோன் மாற்றங்கள், PCOS, மாதவிடாய் கோளாறுகள் என பல பிரச்சினைகளால் பெண்களின் இடுப்புப் பகுதியை சுற்றி கொழுப்புகள் அதிகம் சேர்ந்துவிடும். உடலின் மற்ற பாகங்களைக் காட்டிலும் இடுப்புப் பகுதியில் அதிக கொழுப்புகள் சேர்வதே இதற்கு காரணம். சில இயற்கை உணவுகளின் மூலம் இந்த பிரச்சினையை சரி செய்யலாம். இந்த பதிவில் வயிறு வீக்கத்தை கட்டுப்படுத்தும் உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

வயிற்றில் ஏன் கொழுப்பு சேர்கிறது?
உங்கள் வயிறை சுற்றி கொழுப்பை அதிகரிக்கும் உணவுகள் என்னென்ன என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள். இதில் முதல் இடத்தில் இருப்பது சர்க்கரைதான், உங்கள் வயிறைச் சுற்றி இருக்கும் கொழுப்புகளை குறைக்க முதலில் அதிக மது அருந்துவதை நிறுத்துவது நல்லது. மேலும் டீ/காபி, சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட குளிர்பானங்கள், உணவிற்கு பிறகு சாப்பிடும் நொறுக்குத்தீனிகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். எந்தெந்த உணவுகள் உங்கள் வயிறை சுற்றியிருக்கும் கொழுப்பை குறைக்கும் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

இலை காய்கறிகள்
பச்சை இலை காய்கறிகளான கீரை, காலே, முட்டைகோஸ் போன்றவற்றில் அதிகளவு இரும்புசத்து, பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், நார்ச்சத்துக்கள், புரோட்டின் மற்றும் தேவையான வைட்டமின்கள் உள்ளன. இந்த அனைத்து ஊட்டச்சத்துக்களின் கலவையும் உங்கள் வயிற்று கொழுப்பை குறைப்பதில் திறம்பட செயல்படுகிறது.

ஓட்ஸ்
ஓட்ஸானது உங்கள் உடலுக்குத் தேவையான நார்சத்துக்களால் நிரப்பப்பட்டுள்ளது. மேலும் இது உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. இது நாள்முழுவதும் உங்கள் பசியை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும், இதன்மூலம் உங்கள் வயிறை சுற்றியிருக்கும் கொழுப்பின் அளவு குறைக்கப்படும்.

முட்டை
தினமும் காலையில் வேகவைத்த முட்டைகளை காலை உணவாக சாப்பிடுவது உங்களை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்க உதவும். முட்டைகள் ஆரோக்கியமான புரோட்டின்களின் பிறப்பிடம் என நாம் நன்கு அறிவோம், அதுமட்டுமின்றி இதில் ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளது. இது திசுக்களை வடிவமைக்கவும், தசைகளை சரிசெய்யவும் உதவுகிறது.

நட்ஸ் மற்றும் விதைகள்
தினமும் நட்ஸ் மற்றும் விதைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியமான பழக்கமாகும். இதன் அதிகபட்ச நன்மைகளை பெற தினமும் ஒரு கையளவு நட்ஸ் சாப்பிடுவதை வழக்கமாகக் கொள்ளுங்கள். சூரியகாந்தி விதைகள், ஆளி விதைகள், தர்பூசணி விதைகள், சியா விதைகள் போன்றவற்றில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. மேலும் பாதாம், வால்நட் போன்றவற்றில் புரதம், நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள் போன்றவை உள்ளது. உங்களின் ஆரோக்கியமற்ற நொறுக்குதீனிகளுக்கு பதில் இவற்றை சாப்பிடுவதை பழக்கமாக்கி கொள்ளுங்கள்.

பருப்பு வகைகள்
பருப்பு வகைகளில் புரோட்டின் மற்றும் கொழுப்புகள் இரண்டுமே உள்ளது. எடையை குறைக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு இது மிகவும் சிறந்த தேர்வாகும். தினமும் பருப்பு வகைகள் இருப்பது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல் உங்கள் வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications