Latest Updates
-
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார் -
மின்விசிறியை விட AC ஏன் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகிறது? 1 மணி நேரம் AC ஓடினால் எவ்வளவு கரண்ட் செல்வாகும்?
தைராய்டு பிரச்சனை இருக்கா? அப்ப இந்த பானங்களை அடிக்கடி குடிங்க...
தைராய்டு பிரச்சனைகளைக் கொண்டவர்கள் அத்துடன் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கும் போது, இப்பிரச்சனை சிக்கலானதாகிவிடும்.தைராய்டு பிரச்சனைகளை சமாளிக்கவும், தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மேம்படுத்தவும் ஒருசில பானங்கள் உதவும்.
இன்று ஏராளமானோர் தைராய்டு பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார்கள். தைராய்டு என்பது கழுத்துப் பகுதியி அமைந்திருக்கும் பட்டாம்பூச்சி போன்ற வடிவிலான சுரப்பியாகும். இந்த தைராய்டு சுரப்பியில் சுரக்கும் ஹார்மோன் நமது உடலின் பல்வேறு முக்கிய செயல்பாடுகளான உடல் வெப்பநிலை, செரிமான செயல்பாடு மற்றும் தசை சுருக்கம் போன்றவற்றை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கின்றன.

இந்த தைராய்டு சுரப்பியின் எந்த ஒரு பிரச்சனை ஏற்பட்டாலும், அது தைராய்டு பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். தைராய்டு சுரப்பியில் இரு வகையான பிரச்சனைகள் ஏற்படும். அவை ஹைப்போ தைராய்டு மற்றும் ஹைப்பர் தைராய்டு. இந்த தைராய்டு பிரச்சனைகளைக் கொண்டவர்கள் அத்துடன் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கும் போது, இந்த தைராய்டு பிரச்சனை சிக்கலானதாக மாறிவிடும்.
எனவே இப்பிரச்சனை இருப்பவர்கள் ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கு சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியது முக்கியம். இப்போது தைராய்டு பிரச்சனைகளை சமாளிக்கவும், தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவும் சில பானங்கள் குறித்து காண்போம். இந்த பானங்களை அடிக்கடி குடித்து வந்தால், தைராய்டு பிரச்சனை இருந்தாலும், தைராய்டு சுரப்பியின் செயல்பாடு சிறப்பாக இருக்கும்.

வெள்ளரிக்காய் ஜூஸ்
வெள்ளரிக்காயில் 70% நீர்ச்சத்து உள்ளது. வெள்ளரிக்காயை தினமும் உட்கொள்வது கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும், பார்வையை மேம்படுத்தவும், புற்றுநோய் செல்களை எதிர்க்கவும் உதவுவதாக கூறப்படுகிறது. வெள்ளரிக்காய் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுவதால், தைராய்டு செயல்பாட்டை மேம்படுத்துவதில் இது மிகவும் உதவியாக இருக்கும். மேலும் இது சிறுநீரகம் மற்றும் பிற உறுப்புகளுக்கு ஊட்டமளிப்பதோடு, நச்சுக்களை வெளியேற்றும் திறனை மேம்படுத்துகிறது.

வெள்ளரிக்காய் ஜூஸ் தயாரிப்பது எப்படி?
வெள்ளரிக்காயின் தோலை நீக்கிவிட்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் அதை பிளெண்டரில் போட்டு, அதில் சிறிது நீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதை வடிகட்டி, அந்த சாற்றினைக் குடிக்க வேண்டும்.

காய்கறி ஜூஸ்
கேரட், ஆப்பிள், இஞ்சி, கொத்தமல்லி, எலுமிச்சை, லெட்யூஸ் போன்ற பல்வேறு காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸ்களில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருப்பதோடு, அவை உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் பண்புகளையும் கொண்டிருக்கும். நீங்கள் உங்கள் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை அதிகரிக்க நினைத்தால், இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வாருங்கள். இந்த காய்கறிகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்களான ஏ மற்றும் சி போன்றவை அதிகமாக இருப்பதால், வயது தொடர்பான மாகுலர் சிதைவைத் தடுக்கவும் இது பயன்படுகிறது.

காய்கறி ஜூஸ் தயாரிப்பது எப்படி?
காய்கறி ஜூஸைத் தயாரிக்க 4 கேரட்டுகள், 1 ஆப்பிள், ஒரு கையளவு லெட்யூஸ் கீரை, 1/2 இன்ச் இஞ்சி மற்றும் சிறிது கொத்தமல்லி ஆகியவற்றை நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் அனைத்தையும் பிளெண்டரில் போட்டு, சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின் அந்த ஜூஸைக் குடிக்க வேண்டும்.

செலரி ஜூஸ்
செலரியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் ஏ, சி, கே, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகம் உள்ன. அதோடு இது சோடியம் குறைவான காய்கறி என்பதோடு, இது செரிமானத்தை ஆதரிக்கும், உடல் வீக்கத்தைக் குறைக்கும் மற்றும் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை அதிகரிக்க உதவும். அதிலும் செலரியை ஜூஸ் வடிவில் உட்கொள்வது தைராய்டு சுரப்பியில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி எளிதில் சுத்தம் செய்யும். மேலும் இந்த செலரி ஜூஸ் தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்திக்க உதவுகிறது.

செலரி ஜூஸ் தயாரிப்பது எப்படி?
ஒரு கட்டு செலரியை எடுத்து, துண்டுகளாக்கி பிளெண்டரில் போட்டு, சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின் அந்த ஜூஸை தினமும் காலையில் எழுந்ததும் குடிக்க வேண்டும். இப்படி செய்தால் தைராய்டு சுரப்பியின் செயல்பாடு மேம்படும்.

மஞ்சள் நீர்
மஞ்சள் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்ட பொருள். மஞ்சளை தினமும் உட்கொண்டு வந்தால், அது உடல் ஆரோக்கியத்தில் பல மாயங்களைப் புரியும். குறிப்பாக இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, கல்லீரலை சுத்தம் செய்வது முதல் மூட்டு வலிக்கு சிகிச்சை அளிப்பது வரை மஞ்சள் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. மேலும் மஞ்சள் தைராய்டு செயல்பாட்டை அதிகரிப்பதோடு, உடல் வீக்கத்தைக் குறைக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகளையும் கொண்டுள்ளது.

மஞ்சள் நீர் தயாரிப்பது எப்படி?
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை மிளகுத் தூள் சேர்த்து கலந்து, அதை வடிகட்டி , தினமும் காலையில் எழுந்ததும் குடிக்க வேண்டும். இதனால் இந்த நீர் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தைராய்டு செயல்பாட்டை அதிகரிக்கவும் உதவும்.

எலுமிச்சை நீர்
உங்கள் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மேம்படுத்த ஒரு ஈஸியான பானத்தை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் எலுமிச்சை நீரைக் குடியுங்கள். இது தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. வைட்டமின் சி அதிகம் நிறைந்த எலுமிச்சை நீரைக் குடித்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதற்கும், நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், உடலின் pH அளவை சமநிலைப்படுத்தவும் உதவி புரியும். அதோடு எலுமிச்சை நீர் சருமத்தின் பொலிவை மேம்படுத்தவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.

எலுமிச்சை நீர் தயாரிப்பது எப்படி?
ஒரு கண்ணாடி பாட்டிலில் நீரை நிரப்பி, அதில் நற்பதமான எலுமிச்சையை துண்டுகளாக்கிப் போட்டுக் கொள்ளுங்கள். இந்த நீரை நாள் முழுவதும் சாதாரண நீர் குடிப்பதற்கு பதிலாக குடியுங்கள். இதனால் எலுமிச்சை நீரில் இருந்து அதிகபட்ச நன்மைகளைப் பெறலாம்.



Click it and Unblock the Notifications