Latest Updates
-
ஆயுத பூஜை நாளில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. துர்கையின் ஆசியால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
கைகளில் சொடக்கு எடுக்கும்போது அதிலிருந்து ஏன் சத்தம் வருகிறது? இப்படி செய்வது பாதிப்பை ஏற்படுத்துமா? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், 2 தக்காளியும் இருந்தா.. காலையில் இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. -
அக்டோபர் 19, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நவம்பர் 12 வரை இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஒரே இரவில் பளிச்சென்று ஜொலிக்கணுமா? அப்ப நைட் டைம்-ல இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சூரியன் துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளதால் நவம்பர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் -
5 முட்டை இருந்தா இந்த ஆப்கானி முட்டை மசாலாவை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடற டேஸ்ட்ல இருக்கும் -
ஆயுத பூஜைக்கு இப்படி சுண்டல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப வெளிப்படையானவர்களாக இருப்பார்களாம் - இவங்க வாயில பொய் வரது ரொம்ப கஷ்டம்
டீ-யில் பிஸ்கட் தொட்டு சாப்பிடுவீங்களா? முதல்ல இத படிங்க...
டீயில் பிஸ்கட் தொட்டு சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும் என்று உடல்நல நிபுணர்கள் கூறுகின்றனர். இப்போது டீயில் பிஸ்கட் தொட்டு சாப்பிடுவதால் சந்திக்கும் பிரச்சனைகள் என்னவென்பதைக் காண்போம்.
நீங்கள் டீ பிரியரா? டீ குடிக்காமல் இருக்க முடியாதா? முக்கியமாக டீ குடிக்கும் போது பிஸ்கட் தொட்டு சாப்பிடுவீர்களா? இனிமேல் அப்படி சாப்பிடாதீர்கள். ஏனெனில் டீயில் பிஸ்கட்டை தொட்டு சாப்பிடுவதால், உடலில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

பெரும்பாலான மக்கள் காலையில் எழுந்ததும் டீ குடிக்கும் போது பிஸ்கட் தொட்டு சாப்பிடும் பழக்கத்தை வழக்கமாக கொண்டிருப்பார்கள். ஆனால் டீயில் பிஸ்கட் தொட்டு சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும் என்று உடல்நல நிபுணர்கள் கூறுகின்றனர். இப்போது டீயில் பிஸ்கட் தொட்டு சாப்பிடுவதால் சந்திக்கும் பிரச்சனைகள் என்னவென்பதைக் காண்போம்.

உடல் பருமனாகும்
பிஸ்கட்டில் ஹைட்ரோஜினேட்டட் கொழுப்பு அதிகமாக இருக்கும். பிஸ்கட்டுகள் கொழுப்பின்றி இருக்காது. ஆகவே நீங்கள் பிஸ்கட்டை நீண்ட காலமாக டீயில் தொட்டு சாப்பிடுபவராயின், அது உடல் பருமன் மற்றும் சரும பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

இரத்த சர்க்கரை அதிகரிக்கும்
சர்க்கரை நிறைந்த பிஸ்கட்டை டீயில் தொட்டு நீண்ட காலமாக சாப்பிட்டால், அது இரத்த சர்க்கரை அளவை உயர்த்தும். மேலும் இதில் சோடியமும் அதிகம் உள்ளது. எனவே சர்க்கரை நோயாளிகளும், தைராய்டு பிரச்சனை உள்ளவர்களும் பிஸ்கட்டை சாப்பிடக்கூடாது.

நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகும்
பொதுவாக சர்க்கரை நிறைந்த உணவுகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும். பிஸ்கட்டில் சர்க்கரை அதிகம் உள்ளது. எனவே பிஸ்கட்டை நீண்ட காலமாக டீயில் தொட்டு சாப்பிட்டால், அது நோயெதிர்ப்பு சக்தியைக் குறைத்து பலவீனமாக்கிவிடும். எனவே இப்பழக்கத்தை உடனே கைவிடுங்கள்.

மலச்சிக்கல் ஏற்படும்
பிஸ்கட்டுகளானது சுத்திகரிக்கப்பட்ட மாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் நார்ச்சத்து சுத்தமாக இல்லை. ஆகவே பிஸ்கட்டை டீயில் தொட்டு சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்க நேரிடும். இது தவிர, பிஸ்கட்டுகளில் BHA மற்றும் BHT எனப்படும் இரண்டு பதப்படுத்தும் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இவை உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கிறது.

பல் சொத்தை
பிஸ்கட்டில் சர்க்கரை அதிகம் உள்ளது. தினமும் பிஸ்கட்டை சாப்பிட்டால், அது பற்களின் எனாமலை சேதப்படுத்தும். இதன் விளைவாக பற்களில் துவாரங்கள் உருவாகி, பல் சொத்தையை உண்டாக்கும். எனவே நீங்கள் பல் சொத்தையாகாமல் இருக்க வேண்டுமென்று நினைத்தால், டீயில் பிஸ்கட் தொட்டு சாப்பிடுவதை உடனே நிறுத்துங்கள்.



Click it and Unblock the Notifications
