Latest Updates
-
மனிதத் தன்மையற்ற வரலாற்றின் டாப் 10 கொடூரமான அரசர்கள் - முதலிடத்தில் எந்த அரசர் இருக்கிறார் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா?
உங்க குடல் படுமோசமான நிலையில் உள்ளது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்!
குடல் ஆரோக்கியம் என்பது மிகவும் இன்றியமையாதது. ஆரோக்கியமற்ற உணவுமுறை குடல் ஆரோக்கியத்தைப் பாதிப்பதோடு, சில விரும்பத்தகாத அறிகுறிகளுக்கு வழிவகுக்கும்.
மனித உடலின் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கும் குடல் முக்கிய பங்காற்றுகிறது. எனவே குடல் ஆரோக்கியம் என்பது மிகவும் இன்றியமையாதது. ஆரோக்கியமற்ற உணவுமுறை குடல் ஆரோக்கியத்தைப் பாதிப்பதோடு, சில விரும்பத்தகாத அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். மேலும் பிற வாழ்க்கைமுறை காரணிகளான அதிகப்படியான மன அழுத்த அளவு, போதுமான தூக்கமின்மை அல்லது உடலுழைப்பு இல்லாமை போன்றவையும் குடல் ஆரோக்கியத்தை மோசமாக்குகின்றன.

எப்போது ஒருவரது குடல் சரியாக செயல்படாமல் இருக்கிறதோ, அப்போது ஒருசில அறிகுறிகளை நமது உடல் நமக்கு வெளிக்காட்டும். சமீபத்தில் ஊட்டச்சத்து நிபுணரான லவ்னீத் பாத்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "குடல் என்பது இரைப்பை குடல் அமைப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த குடல் உடலின் அனைத்து அமைப்புகளும், செயல்பாடுகளும் திறம்பட செயல்பட மிகவும் அவசியம்" என்று கூறினார். கீழே ஒருவர் கவனிக்க வேண்டிய ஆரோக்கியமற்ற குடலின் சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

வயிறு கோளாறு
வாய்வுத் தொல்லை, வயிற்று உப்புசம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற அனைத்துமே ஆரோக்கியமற்ற குடலின் அறிகுறிகள். எனவே நீங்கள் இந்த அறிகுறிகளை அனுபவித்தால், அதைப் புறக்கணிக்காமல் உடலை அதை சரிசெய்ய முயல வேண்டும்.

வாய் துர்நாற்றம்
குடலில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டால், அது இரைப்பை குடல் பாதையில் சில வகையான எச்.பைலோரி பாக்டீரியாக்களை தக்க வைக்கிறது. இந்த பாக்டீரியாக்கள் தான் பல வயிற்றுப் புண்கள் மற்றும் வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளுக்கு மூல காரணம். எனவே உங்கள் வாய் துர்நாற்றம் அதிகமாக இருந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

பரு வெடிப்பு மற்றும் சரும எரிச்சல்
ஒருவரது குடல் ஆரோக்கியமற்ற நிலையில் இருந்தால், அதை சருமத்தின் மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஒரு சமநிலையற்ற நுண்ணுயிர் சருமத்தின் உணர்திறனை அதிகரித்து, எக்சிமா, டெர்மாடிடிஸ், முகப்பரு மற்றும் சொரியாசிஸ் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தூங்குவதில் சிரமம்
ஆரோக்கியமற்ற குடல் ஒருவரது தூக்க சுழற்சியில் இடையூறை ஏற்படுத்தலாம். இதன் விளைவாக தூக்கமின்மை போன்ற தூக்க பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். குடலில் உற்பத்தியாகும் செரடோனின் என்னும் ஹார்மோன் அதிகளவு உற்பத்தியாகும் போது அது மனநிலையையும், தூக்கத்தையும் பாதிக்கிறது. ஒருவருக்கு தூக்கம் சரியான அளவில் கிடைக்காவிட்டால், அது நாள்பட்ட உடல் சோர்வுக்கு வழிவகுக்கும். இதனால் தினசரி நடவடிக்கைகளை செய்ய முடியாமல் போகும். மேலும் மோசமான தூக்கமானது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும்.

உணவு சகிப்புத்தன்மை
உடலுக்கு பொருந்தாக சில உணவுகளை ஜீரணிக்க சிரமப்படுவதன் விளைவாக ஏற்படுவதே உணவு சகிப்புத்தன்மை. சில உணவு சகிப்புத்தன்மையானது குடலில் உள்ள பாக்டீரியாக்களின் தரம் மோசமாவதன் விளைவாகும். எனவே ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ண பழகுங்கள்.

ஆட்டோஇம்யூன் நிலைமைகள்
ஆரோக்கியமற்ற குடல் நாள்பட்ட உடல் வீக்கத்தை அதிகரிக்கும் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மாற்றி, பல்வேறு ஆட்டோஇம்யூன் நிலைமைகளை உண்டாக்கும். சொல்லப்போனால் ஒருவரது குடல் ஆரோக்கியமற்ற நிலையில் நீண்ட காலமாக இருந்தால், அது சர்க்கரை நோய், இரத்த அழுத்த பிரச்சனைகள் போன்றவற்றை உண்டாக்கும்.
இப்போது குடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும் சில டிப்ஸ்களைக் காண்போம்.

டிப்ஸ் 1
குடலில் உள்ள பல்வேறு நுண்ணுயிரிகளின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய நல்ல சீரான உணவுகளை உண்ண வேண்டும். குறிப்பாக போதுமான நார்ச்சத்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ண வேண்டும். ஏனெனில் நார்ச்சத்து குடலில் உள்ள குடல் பாக்டீரியாக்களுக்கு உணவாகிறது.

டிப்ஸ் 2
ப்ரீ பயோடிக் மற்றும் புரோ பயோடிக் உணவுகளை போதுமான அளவு உண்ண வேண்டும். பூண்டு, ஆப்பிள், வாழைப்பழம் மற்றும் பெர்ரி போன்றவை சில ப்ரீ பயோடிக் உணவுகள். தயிர், கிமிச்சி மற்றும் சார்க்ராட் போன்றவை புரோபயோடிக் உணவுகள்.

டிப்ஸ் 3
மன அழுத்தம் கூட குடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். எனவே யோகா, தியானம் போன்ற மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் செயல்பாடுகளில் தினமும் தவறாமல் ஈடுபட்டு, மனதை அமைதியாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.

டிப்ஸ் 4
உடலில் நீர்ச்சத்து போதுமான அளவு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடல் வறட்சி அடையாமல், குடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

டிப்ஸ் 5
முக்கியமாக நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறுவது என்பது ஆரோக்கியமான குடலைப் பெற உதவும் மற்றொரு எளிய வழியாகும். எனவே இரவு நேரத்தில் நல்ல தூக்கத்தைப் பெற தேவையான நடவடிக்கைகளை எடுங்கள்.



Click it and Unblock the Notifications