Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இந்திய ஆண்களுக்கு விந்தணு தரம் மற்றும் எண்ணிக்கை குறைய இந்த 5 விஷயங்கள்தான் முக்கிய காரணமாம்...!
இந்தியாவில் ஆண்டுதோறும் கருவுறாமை பிரச்சினையால் பாதிக்கப்படும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்தியாவில் ஆண்டுதோறும் கருவுறாமை பிரச்சினையால் பாதிக்கப்படும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இதற்கு பெண்கள் மீதே எப்போதும் குற்றம் சாட்டப்படுகிறது. ஆண்களும் கருவுறாமைக்கு காரணமாக இருக்கலாம் என்பதை பெரும்பாலானோர் ஒப்புக்கொள்வதில்லை.

சமீப வருடங்களில், ஆண்களும் பெண்களும் குழந்தையின்மையை மருத்துவப் பிரச்சினையாக ஏற்றுக்கொண்டு அதற்கான தீர்வைத் தேடுவதைக் காண முயலாகிறார்கள், இது ஒரு ஆரோக்கியமான முன்னேற்றமாகும். உண்மையில், கடந்த சில தசாப்தங்களாக, ஆண்களின் கருவுறாமை பிரச்சினை பல ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது, ஏனெனில் கருவுறாமைக்கு ஆண்களும் சம அளவில் காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். ஆண்களின் விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கை குறைவதற்கான சில காரணங்களை நிபுணர்கள் விளக்கியுள்ளனர்.

சிகரெட், மது மற்றும் போதைப்பொருள்
நீங்கள் புகைபிடிப்பவராக இருந்தால் முடிந்தவரை விரைவில் அதனை நிறுத்தவும். மோசமான விந்தணு இயக்கம் மற்றும் பலவீனமான அல்லது தரமற்ற விந்தணுக்களுக்கு புகையிலை முதன்மைக் காரணமாகும், மேலும் குரோமோசோம்களுக்கு மரபணு சேதத்திற்கும் காரணமாகும். கூடுதலாக, அதிக ஆல்கஹால் டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைக்கலாம் மற்றும் பாலியல் செயல்திறனில் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், போதைமருந்துகளை உபயோகிப்பது விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதோடு தொடர்புடையது.

அதிகமான உடற்பயிற்சி
அதிகப்படியான உடற்பயிற்சி டெஸ்டோஸ்டிரோன் அளவையும் விந்தணு தரத்தையும் குறைக்கும். உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமானதாக இருந்தாலும், அது மிதமானதாக இருக்க வேண்டும் மற்றும் உங்கள் விந்தணு அல்லது டெஸ்டோஸ்டிரோன் அளவுகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத அளவில் இருக்க வேண்டும். அளவிற்கு மீறினால் அமிர்தம் மட்டுமல்ல உடற்பயிற்சியும் நஞ்சுதான்.

வெப்பம்
சூடான பாத் டப்கள், நீராவி அறைகள் அல்லது நீண்ட நேர வெந்நீர் குளியல் ஆகியவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை உடலின் வெப்பநிலையை தற்காலிகமாக அதிகரிக்கக்கூடும், இது விந்தணுக்களின் அளவு மற்றும் தரத்தை பாதிக்கலாம். கூடுதலாக, மடிக்கணினியை மடியில் வைத்திருப்பதை தவிர்க்கவும்.

இறுக்கமான உள்ளாடைகளை அணிவது
இறுக்கமான உள்ளாடைகள் அல்லது ஒல்லியான ஜீன்ஸ் அல்லது பேன்ட் அணிவது டெஸ்டிகுலர் வெப்பநிலையை அதிகரிக்கும், இது விந்தணு உற்பத்தியை எதிர்மறையாக பாதிக்கும். இந்திய இளைஞர்கள் பலரும் இந்த தவறை செய்கின்றனர்.

மனஅழுத்தம்
மனஅழுத்தம் உங்கள் மனஆரோக்கியத்தில் மட்டுமே தலையிடுவதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் இது விந்தணுவின் உற்பத்திக்குத் தேவையான சில ஹார்மோன்களில் தலையிடலாம். கருத்தரிப்பதில் உள்ள சிக்கல்கள் உட்பட, தொடர்ச்சியான அல்லது கடுமையான மன அழுத்தத்தால் உங்கள் விந்தணு எண்ணிக்கை பாதிக்கப்படலாம்.



Click it and Unblock the Notifications