Latest Updates
-
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்
ஆண்களே! உங்க பாலியல் ஆர்வமின்மைக்கும் மலட்டுத்தன்மைக்கும் 'இது' கூட காரணமா இருக்குமாம்... ஜாக்கிரதை!
அதிகரித்து வரும் மாசுபாடால், பெரும்பாலான தம்பதிகள் கருவுறாமை பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள். இதில், தம்பதியர் கருத்தரிக்க முடியாமல் போவதற்கு ஆண் மலட்டுத்தன்மையே முதன்மை காரணமாகக் கருதப்படுகிறது
வளர்ந்து வரும் நவீன உலகில் காற்று மாசுபாடு அதிகமாக உள்ளது. இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் முற்றிலுமாக பாதிக்கும். டெல்லியில், காற்று மாசு அதிகரித்து வருகிறது. மாசுபட்ட காற்று இப்போது, நுரையீரல், கண்கள் மற்றும் இதயம் ஆகியவற்றில் மட்டுமல்ல, ஆண்களின் லிபிடோ இழப்பையும் ஏற்படுத்தும் ஒரு தீவிரமான கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. நகரத்தின் மோசமான காற்றின் தரம் மக்களின் பாலியல் செயல்பாடு மற்றும் இயக்கத்தை மோசமாக பாதிக்கிறது. நகரைச் சூழ்ந்திருக்கும் அடர்ந்த புகை மூட்டம் பார்வையை சீர்குலைப்பது மட்டுமின்றி உடல் நலத்துக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.

அதிக வயதுடைய பல நோயாளிகள் கடுமையான சுவாச பிரச்சனைகளை சைனசிடிஸ், நெரிசல், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். அதே சமயம் கருத்தரிக்க முயற்சிக்கும் பலர் தங்கள் பாலியல் ஆர்வத்தில் வீழ்ச்சியைக் காண்கிறார்கள். இக்கட்டுரையில், காற்று மாசுபாடு ஆண்களிடையே மலட்டுத்தன்மையை எவ்வாறு ஏற்படுத்துகிறது என்பதை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

யாருக்கு மலட்டுத்தன்மை விகிதம் அதிகமாக உள்ளது?
அதிகரித்து வரும் மாசுபாடால், பெரும்பாலான தம்பதிகள் கருவுறாமை பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள். இதில், தம்பதியர் கருத்தரிக்க முடியாமல் போவதற்கு ஆண் மலட்டுத்தன்மையே முதன்மை காரணமாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு 3 ஆண்களில் 1 பேர் குழந்தையின்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். நகரத்தில் கருவுறுதல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் பெண்களை விட 15% அதிகமாக உள்ளனர். இது ஆண்களிடையே கருவுறாமை மற்றும் கருச்சிதைவுகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

ஆண் மலட்டுத்தன்மைக்கு மாசு எவ்வாறு பங்களிக்கும்?
மாசடைந்த நச்சுக் காற்றை சுவாசிப்பதால் விந்தணுக்கள் பாதிக்கப்படுகிறது. கருத்தரிப்பதற்கு முக்கிய காரணமான விந்தணுக்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைவதால் பிரச்சினை எழுகிறது. குறைந்த எண்ணிக்கை, இயக்கம் மற்றும் செறிவு ஆகியவற்றுடன், விந்தணுக்கள் ஃபலோபியன் குழாயின் உள்ளே செல்ல முடியாமல், எண்ணற்ற முயற்சிகள் செய்த போதிலும் பங்குதாரர் கருத்தரிக்க முடியாமல் போகிறது. மேலும், உடலுறவில் ஆர்வமின்மை ஆண் மலட்டுத்தன்மையின் வெளிப்பாட்டைக் குறிக்கும் முதல் அறிகுறிகளில் ஒன்றாகும்.

மாசுபாடு உங்கள் பாலியல் ஹார்மோன்களை பாதிக்கலாம்
எண்டோகிரைன் சீர்குலைக்கும் செயல்பாடு (ஹார்மோன் ஏற்றத்தாழ்வு) என்பது விந்தணுக்கள் குறைந்து இறக்கும் செயல்முறையாகும். நாம் உள்ளிழுக்கும் காற்றில் தாமிரம், துத்தநாகம், ஈயம் போன்றவற்றால் ஆன துகள்கள் (இது மனித முடியை விட 30 மடங்கு நுண்ணியமானது) கொண்டது. இவை ஈஸ்ட்ரோஜெனிக் மற்றும் ஆன்டிஆண்ட்ரோஜெனிக் ஆகும். அவை டெஸ்டோஸ்டிரோன் மற்றும் விந்தணுக்களின் உற்பத்தியை நீண்ட காலம் தடுக்கலாம்.

விந்தணுவின் வாழ்க்கைச் சுழற்சி என்ன?
விந்தணுக்களின் வாழ்க்கைச் சுழற்சி 72 நாட்கள் ஆகும். மேலும் 90 நாட்களுக்குப் பிறகுதான் விந்தணுவில் ஏற்படும் மாசுபாட்டின் பாதகமான விளைவுகள் தெரியும். சல்பர் டை ஆக்சைடு ஒவ்வொரு 10 μg அதிகரிப்பிலும், விந்தணுக்களின் செறிவு 8% குறைகிறது, விந்தணு எண்ணிக்கை 12% குறைகிறது மற்றும் இயக்கம் 14% குறைகிறது. விந்தணுவின் வடிவம் மற்றும் இயக்கத்தை பாதிப்பதன் மூலம், ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் டிஎன்ஏ சேதத்தை தூண்டுவதன் மூலம் ஆண் கருவுறுதல் பாதிக்கப்படுகிறது.

மாசுபாடு உங்கள் பாலியல் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது?
டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைப்பது உடலுறவுக்கான ஆர்வத்தை இழக்க வைக்கிறது. இது உங்கள் பாலியல் வாழ்க்கையைத் தடுக்கிறது. டீசல் வெளியேற்றம் மற்றும் ஓசோன், சல்பர் டை ஆக்சைடு மற்றும் காற்றில் கலந்த துகள்கள் ஆகியவற்றின் அளவு அதிகரிப்பதால் இரத்தத்தில் ரசாயன எதிர்வினைகள் ஏற்படுகின்றன. இது ஃப்ரீ ரேடிக்கல்களின் செறிவை அதிகரிக்கிறது. இது கருவுற்ற ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை மறைமுகமாக பாதிக்கிறது.

இறுதி குறிப்பு
குறைந்த பிறப்பு எடை கொண்ட குழந்தை, வளர்ச்சி குறைபாடு, முன்கூட்டிய பிரசவங்கள் மற்றும் பிறந்த குழந்தை இறப்பு ஆகியவற்றுடன் சுற்றுப்புற அளவிலான காற்று மாசுபாட்டின் அதிகப்படியான வெளிப்பாடு தொடர்புடையது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது மோசமான விந்தணு தரத்தின் மறைமுக விளைவாகும்.



Click it and Unblock the Notifications