Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
உங்களுக்கு பைல்ஸ் இருக்கா? வலி தாங்க முடியலையா? இந்த எண்ணெயை தினமும் வையுங்க...
இயற்கை வழிகளை முயற்சித்தால் எவ்வித பக்கவிளைவும் இல்லாமல் பைல்ஸ் தீவிரமாவதை தடுத்து குறைக்கலாம். அதில் சில எண்ணெய்கள் பைல்ஸ் மூலம் ஏற்படும் வலியைக் குறைத்து, தீவிரமாவதைத் தடுக்கும்.
மூல நோய் அல்லது பைல்ஸ் என்பது ஆசனவாய் மற்றும் கீழ் மலக்குடலில் உள்ள நரம்புகள் வீங்கி இருப்பதாகும். நரம்பு வீக்கம் உள்ள பகுதியைப் பொறுத்து, அவை உள் அல்லது வெளி மூலமாக இருக்கலாம். ஒருவருக்கு பைல்ஸ் பல காரணங்களால் வரலாம். அதில் கர்ப்பம், உடல் பருமன், தோரணை குறைபாடுகள், மலச்சிக்கல் போன்றவை அடங்கும். ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சரியான காரணம் தெரிவதில்லை.

ஆசன வாய் பகுதியில் உள்ள வீங்கிய நரம்புகள் மிகவும் வலிமிகுந்த இரத்த உறைவு உருவாவதற்கு வழிவகுக்கலாம். சில சமயங்களில் இந்த மூல நோய்க்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். ஆனால் ஆரம்பத்திலேயே மூல நோயை சரிசெய்ய முயற்சித்தால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
அதுவும் இயற்கை வழிகளை முயற்சித்தால் எவ்வித பக்கவிளைவும் இல்லாமல் பைல்ஸ் தீவிரமாவதை தடுத்து குறைக்கலாம். அதில் சில எண்ணெய்கள் பைல்ஸ் மூலம் ஏற்படும் வலியைக் குறைத்து, தீவிரமாவதைத் தடுக்கும். இப்போது அந்த எண்ணெய்கள் என்னவென்பதையும், எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் காண்போம்.

கிராம்பு எண்ணெய்
பைல்ஸ் பிரச்சனையில் இருந்து விடுபட கிராம்பு எண்ணெய் பெரிதும் உதவி புரியும். அதற்கு கிராம்பு எண்ணெய் சில துளிகளை பாதிக்கப்பட்ட பகுதியில் தினமும் தடவ வேண்டும். இப்படி செய்து வந்தால், பைல்ஸ் வலியில் இருந்து விடுபடலாம்.

புதினா எண்ணெய்
பைல்ஸ் வலியால் தினமும் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் புதினா எண்ணெயை அதற்கு நல்ல நிவாரணத்தை அளிக்கும். அதற்கு சில துளிகள் புதினா எண்ணெயை பைல்ஸ் உள்ள பகுதியில் தடவ வேண்டும். இப்படி செய்தால் பைல்ஸ நீங்குவதோடு மட்டுமின்றி, வீக்கமும் குறையும்.

டீ-ட்ரீ ஆயில்
டீ-ட்ரீ எண்ணெயை பயன்படுத்துவதால் பைல்ஸ் பிரச்சனையை சமாளிக்கலாம். அதற்கு டீ-ட்ரீ எண்ணெயை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவ வேண்டும். அதுவும் டீ-ட்ரீ எண்ணெயை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து பயன்படுத்துங்கள். இப்படி செய்வதன் மூலம் பைல்ஸ் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

லாவெண்டர் ஆயில்
நல்ல நறுமணம் கொண்ட லாவெண்டர் ஆயில் கூட பைல்ஸ் பிரச்சனையை குணமாக்கும். அதற்கு லாவெண்டர் எண்ணெயை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, பஞ்சுருண்டை அல்லது மென்மையான துணியில் நனைத்து ஆசன வாய் பகுதியில் தடவ வேண்டும். இப்படி தினமும் 2-3 முறை செய்து வந்தால், பைல்ஸ் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

சீமைச்சாமந்தி எண்ணெய்
சீமைச்சாமந்தி எண்ணெயில் ஆன்டிசெப்டிப், அழற்சி எதிர்ப்பு, ஆண்டிஸ்பாஸ்மோடிக் மற்றும் சுடோரிஃபிக் விளைவுகள் உள்ளன. இது காயங்கள், தோல் புண்கள், கொப்புளங்கள் மற்றும் மூல நோய் ஆகியவற்றை குணப்படுத்தக்கூடியது. அதுவும் பைல்ஸ் உள்ளவர்கள் 2-3 துளிகள் சீமைச்சாமந்தி எண்ணெயுடன் விளக்கெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, ஆசன வாய் பகுதியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் 2-3 முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

சந்தன எண்ணெய்
சந்தன எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், வலி நிவாரண பண்புகள், ஆன்டிபிரைடிக் நடவடிக்கைகள் மற்றும் குளிர்ச்சி பண்புகள் உள்ளதால், இதை மூல நோய் உள்ள பகுதியில் தடவி வந்தால், கடுமையான பைல்ஸ் வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். அதற்கு 4-5 துளிகள் சந்தன எண்ணெயை தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில் அல்லது விளக்கெண்ணெயுடன் சேர்த்து கலந்து பைல்ஸ் உள்ள பகுதியில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.



Click it and Unblock the Notifications
