For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...!

நமக்கே தெரியாமல் நாம் எடுத்துக்கொள்ளும் ஒரு ஊட்டச்சத்து பயோட்டின் ஆகும். நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதில் இது மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது.

|

நமது உடலின் வளர்ச்சிக்கு சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அவசியமாகும். நமக்கு தெரிந்த ஊட்டச்சத்துக்கள் எல்லாம் வைட்டமின்களும், நார்சத்துகளும்தான், ஆனால் நம் உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் பல உள்ளது. அவற்றில் பெரும்பாலானவற்றை நாம் நமக்கே தெரியாமல் சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.

Best Biotin Rich Foods

இப்படி நமக்கே தெரியாமல் நாம் எடுத்துக்கொள்ளும் ஒரு ஊட்டச்சத்துதான் பயோட்டின் ஆகும். நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதில் இது மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. நாம் சாப்பிடும் அனைத்து ஆரோக்கிய உணவுகளிலும் நுண்ணிய அளவு பயோட்டின் உள்ளது. பயோட்டின் என்பது வைட்டமின் பி7 ஆகும். நாம் சாப்பிடும் உணவை ஆற்றலாக மாற்றுவதில் இதன் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பயோட்டினின் பயன்கள்

பயோட்டினின் பயன்கள்

உங்கள் மூளை, கண்கள், தோல், முடி, நகங்கள், கல்லீரல் மற்றும் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு பயோட்டின் அவசியம். இது கர்ப்ப காலத்தில் முக்கியமானது, கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கு பி காம்ப்ளக்ஸ் வைட்டமின் மிகவும் அவசியமானதாகும். போதுமான அளவு பயோட்டின் எடுத்துக் கொள்வது உங்கள் இரத்த சர்க்கரை அளவை சீராக்குவதுடன் முடி, சருமம் மற்றும் இதய ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது. கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க இது மிகவும் அவசியமானதாகும். பயோட்டின் அதிகம் இருக்கும் உணவுகள் என்னென்னெ என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

முட்டை

முட்டை

ஒரு முட்டையில் 10 மைக்ரோ கிராம் பயோட்டின் உள்ளது. ஆரோக்கிய வாழ்விற்கு முட்டையின் முக்கியத்துவம் என்ன என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். புரதச்சத்துக்களும், அமினோ அமிலமும் முழுமையாக இருக்கும் உணவுப்பொருள் முட்டையாகும். இந்த புரோட்டின் தசைகளின் வளர்ச்சிக்கும், ஆற்றலை உற்பத்தி செய்வதற்கும் பயன்படுகிறது. இது மட்டுமின்றி முட்டையில் துத்தநாகம், அயோடின், செலினியம் மற்றும் வைட்டமின்கள் ஏ மற்றும் டி ஆகியவை உள்ளன.

சர்க்கரை வள்ளிக் கிழங்கு

சர்க்கரை வள்ளிக் கிழங்கு

அரை கப் சர்க்கரை வள்ளிக் கிழங்கில் 2.5 மைக்ரோ கிராம் பயோட்டின் உள்ளது. பயோட்டின் தவிர, சர்க்கரை வள்ளிக் கிழங்கிலும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. சக்திவாய்ந்த இந்த ஆன்டி ஆக்சிடன்ட் உங்கள் சரும தோற்றத்தை மேம்படுத்தும். சர்க்கரை வள்ளிக் கிழங்கில் காணப்படும் பீட்டா கரோட்டின் மற்றும் பிற கரோட்டினாய்டுகளும் ஆரோக்கியமான பார்வைக்கு முக்கியமானவை. இது உங்களின் பார்வைத்திறனை அதிகரிக்கும்.

MOST READ:கிருஷ்ணரே ஒருமுறை போர்க்களத்தில் இருந்து பின்வாங்கினாராம்... அந்த சுவாரஸ்யமான கதை தெரியுமா?

பாதாம்

பாதாம்

கால் கப் பாதாமில் 1.5 மைக்ரோ கிராம் பயோட்டின் உள்ளது. பொதுவாக பாதாமில் மக்னீசியம் மற்றும் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. மேலும் எடை குறைப்பிற்கு உதவும் நார்சத்துக்களும் இதில் நிறைந்துள்ளது. தினமும் ஒரு கை பாதாம் சாப்பிடுவது உங்களின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும்.

 கீரை

கீரை

அரை கப் வேகவைத்த கீரையில் 1 மைக்ரோ கிராம் பயோட்டின் உள்ளது. கீரையில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் குளோரோபில் நிறைந்துள்ளது. இது குறிப்பாக இரும்புச்சத்து நிறைந்ததாக இருக்கிறது. கீரையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், வயதாகும் செயல்முறையை மெதுவாக்கவும், நோயிலிருந்து பாதுகாக்கவும் உதவுகின்றன. கீரையில் உள்ள இரும்பு, 250-1,000 மி.கி வைட்டமின் சி உடன் எடுத்துக் கொள்ளப்பட்டால், இரும்பு சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துவதன் மூலம் இரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது.

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி

அரை கப் ப்ரோக்கோலியில் 0.4 மைக்ரோகிராம் பயோட்டின் உள்ளது. ப்ரோக்கோலியில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது என்ற காரணத்திற்காக இது சூப்பர்ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. . எலும்பு மற்றும் சரும ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் வைட்டமின் கே இதில் நிறைந்துள்ளது. இதில் இருக்கும் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் பல்வேறு வகையான புற்றுநோய்களைத் தடுக்க உதவுகின்றன.

MOST READ:உங்ககிட்ட இந்த பழக்கங்கள் இருக்கா? அப்ப உங்களுக்கு கண்டிப்பா முன்ஜென்மம் இருந்திருக்கு...!

 பால்

பால்

ஒரு கப் பாலில் 0.3 மைக்ரோகிராம் பயோட்டின் உள்ளது. ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் பற்களை உருவாக்க உதவும் கால்சியம், புரதம் மற்றும் தாதுக்களின் சிறந்த ஆதாரமாக பால் உள்ளது. இதில் உள்ள புரதம் தசை மற்றும் திசுக்களை சரிசெய்ய உதவுகிறது, மேலும் பொட்டாசியம் ஆரோக்கியமான இரத்த அழுத்த அளவை பராமரிப்பதன் மூலம் இதயத்தை பாதுகாக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Biotin Rich Foods

Biotin is essential for the health of your brain, eyes, skin, hair, nails, liver, and also the nervous system.
Story first published: Friday, August 23, 2019, 19:10 [IST]
Desktop Bottom Promotion