Latest Updates
-
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும் -
பண்டிகைக் காலத்தில் சருமத்தை பளிச்சென்று புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக்குகள்! -
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பரிசாக கொடுத்தது எந்த நாடு தெரியுமா? -
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் திருமணம் செய்ய அரசாங்கம் என்ன செய்யுது தெரியுமா? என்ன இப்படி இறங்கிட்டாங்க -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்! -
பூரி செய்யும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க - இல்லனா எண்ணெய் உறிஞ்சி முறுக்கு மாதிரி மாறிரும் -
நவராத்திரி ஸ்பெஷல் சுரைக்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
முருங்கைக்காய் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கார குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
காலையில் எழுந்ததும் இந்த பழக்கம் இருந்தா உடனே நிறுத்துங்க.. இல்ல கிட்னி டேமேஜ் ஆயிடும்! எச்சரிக்கும் டாக்டர்!
ஆண்களே! உங்க தொப்புளில் இதை செய்தால்... உங்க விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்குமாம் தெரியமா?
தொப்புள் பகுதியில் மசாஜ் செய்வது, செரிமான திறன்களை மேம்படுத்துவதற்கும் செரிமான செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது.
தொப்புள் சிகிச்சை, ஒரு பழமையான ஆயுர்வேத நடைமுறையாகும். மனித உடலில் மிகவும் உணர்திறன் வாய்ந்த பகுதிகளில் தொப்புளும் ஒன்று. 72,000 நரம்புகளின் மையப் புள்ளியாக தொப்புள் உள்ளது. உங்கள் தொப்புள் பகுதியில் எண்ணெய் ஊற்றி மசாஜ் செய்வது உங்களுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும். இந்த எண்ணெய் மசாஜ் செயல் உங்கள் நரம்புகளைத் தூண்டுகிறது, இது நோய்களைத் தடுக்கவும் உடலின் சரியான செயல்பாட்டை பராமரிக்கவும் உதவுகிறது. மணிப்பூரா சக்கரம் என்றும் அழைக்கப்படும் தொப்புளின் மையப்பகுதி மத்திய நரம்பு மண்டலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, எனவே எண்ணெய் மசாஜ் செய்வது மனதில் தெளிவை மேம்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், நம்பிக்கை, வலிமை மற்றும் இரக்கத்தை வளர்க்கவும் உதவும்.

இந்திய மருத்துவத்தின் பாரம்பரிய முறைப்படி, நாபி (தொப்புள்) என்பது உயிரின் தோற்றம் ஆகும். பிறப்பதற்கு முன்பே குழந்தையை தாயுடன் இந்த பகுதி இணைக்கிறது. தொப்புள் உடலின் முனைகளுக்கு செல்லும் பாதை என்பதால், இப்பகுதியில் எண்ணெய் மசாஜ் செய்யும்போது, எண்ணெய்களை உறிஞ்சுவது சருமத்தை புத்துணர்ச்சியடையச் செய்யும். இரவில் தூங்குவதற்கு முன்பு தொப்புள் சிகிச்சையை தினசரி பயிற்சி செய்வதன் மூலம், ஒருவர் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை அடைய முடியும். தொப்புள் சிகிச்சை உங்களுக்கு வழங்கும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
தொப்புள் பகுதியில் மசாஜ் செய்வது, செரிமான திறன்களை மேம்படுத்துவதற்கும் செரிமான செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது. இது குடலில் இருந்து கழிவுகளை ஒழுங்காக வெளியேற்றுவதை மேம்படுத்துகிறது. வாயு மற்றும் வீக்கத்துடன் தொடர்புடைய கவலை மற்றும் செரிமான பிரச்சனைகளை நீக்குகிறது. மேலும், சரியாக செயல்படும் இரைப்பை குடல் எடையை நிர்வகிக்கவும், உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் இந்த மாசாஜ் உதவுகிறது.
பயன்படுத்த வேண்டிய எண்ணெய்கள்: கடுகு எண்ணெய் அல்லது இஞ்சி எண்ணெய்

கருவுறுதலை அதிகரிக்கிறது
தொப்புளில் வெதுவெதுப்பான எண்ணெயைத் தொடர்ந்து தடவுவது ஆண்களில் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் இனப்பெருக்க அமைப்பை வலுப்படுத்துவதோடு பெண்களின் கருவுறுதலையும் அதிகரிக்கிறது. மேலும், பெண்கள் தொப்புள் சிகிச்சையின் உதவியுடன் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிடிப்புகள் மற்றும் வலியைக் குறைக்கலாம், ஏனெனில் இது கருப்பைச் சுவரைச் சுற்றியுள்ள நரம்புகளைத் தளர்த்தும்.
பயன்படுத்த வேண்டிய எண்ணெய்கள்: தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்

பார்வை திறனை மேம்படுத்துகிறது
உங்கள் தொப்புள் பகுதி கண்கள் வரை செல்லும் நரம்புகளுடன் நேரடி இணைப்பைக் கொண்டுள்ளது. தொப்புள் சிகிச்சை மூலம் அந்த நரம்புகளைத் தூண்டுவது சிறந்த பார்வைக்கு வழிவகுக்கும். கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்தைக் குறைக்கும், மேலும் நிறமியைக் குறைக்கும். தொப்புளில் எண்ணெய் தடவுவது கண்களை உயவூட்டுவதோடு, பார்வைக் குறைபாட்டிற்கு காரணமான அதிகப்படியான வறட்சியைத் தடுக்கும்.
பயன்படுத்த வேண்டிய எண்ணெய்கள்: பாதாம் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய்

தோல் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது
அத்தியாவசிய எண்ணெய்களுடன் தொப்புள் பகுதியை மசாஜ் செய்வது சருமத்திற்கு வியக்க வைக்கும் நன்மைகளை ஏற்படுத்தும். நீங்கள் நிறமியைக் குறைக்கவும், அதிகப்படியான வறட்சியைத் தடுக்கவும், சருமத்தின் அமைப்பை அதிகரிக்கவும், நீரேற்றத்தைப் பராமரிக்கவும், சருமத்தில் இயற்கையான பளபளப்பைப் பெறவும் விரும்பினால், தொப்புள் சிகிச்சையின் எளிய தந்திரத்தைச் செய்யுங்கள். ஹார்மோன் பிரச்சனைகளால் முகப்பருக்கள் ஏற்படுவதைத் தடுக்கவும், உடலில் உள்ள கறைகளை நீக்கவும் எண்ணெய் இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது.
பயன்படுத்த வேண்டிய எண்ணெய்கள்: வேப்ப எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய், கடுகு எண்ணெய், தேயிலை மர எண்ணெய், எலுமிச்சை அத்தியாவசிய எண்ணெய் அல்லது ரோஸ்ஷிப் எண்ணெய்

மூட்டு வலியைப் போக்கும்
தவறான உடல் தோரணை, மருத்துவ நிலை அல்லது தசை பதற்றம் காரணமாக உடல் வலியால் அவதிப்படுபவர்கள் வலி நிவாரணம், வீக்கத்தைக் குறைத்தல் மற்றும் தசை தளர்வு ஆகியவற்றைக் கண்டறிய தொப்புள் சிகிச்சையைத் தேர்வு செய்யலாம்.
பயன்படுத்த வேண்டிய எண்ணெய்கள்: எள் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் அல்லது ரோஸ்மேரி எண்ணெய்.



Click it and Unblock the Notifications
