Latest Updates
-
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்..
உங்க உடலில் இந்த அறிகுறிகள் இருந்தா..நீங்க ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்டு இருக்கீங்களாம்...ஜாக்கிரதை!
பெரும்பலான மக்கள் குறட்டை விடுகிறார்கள். ஆனால், சிலர் அவர்கள் அருகில் உள்ளவர்களை தொந்தரவு செய்யும் அளவிற்கு கடுமையான குறட்டையை விடுகிறார்கள்.
இன்று நீங்கள் ஆரோக்கியமாக உணர்கிறீர்களா? நீங்கள் சுறுசுறுப்பாக இருக்கிறீர்களா? நீங்கள் கவலையாக அல்லது மனச்சோர்வாக உணர்கிறீர்களா? அது பெரும்பாலும் மன அழுத்தம் அல்லது அடிப்படை உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம். ஒருவருக்கு உடல், மன மற்றும் சமூக நல்வாழ்வு உணர்வும், ஆரோக்கியமாக கருதப்படுவதற்கு முழு வாழ்க்கையை வாழ்வதற்கான ஆதாரங்களும் இருக்க வேண்டும். உடல்நலக் குறைபாடு அல்லது அதிக எடையுடன் இருப்பது ஒருவரை ஆரோக்கியமற்ற நபராக மாற்றுகிறது. நீங்கள் கவனிக்கக்கூடிய நோயறிதலை வெளிப்படுத்தக்கூடிய ஆரோக்கியத்தின் பிற குறிகாட்டிகள் உள்ளன.

உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே நமது உடல் ஆரோக்கியம் குறைவதற்கான எச்சரிக்கை அறிகுறிகளை நமக்குத் தருகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, நீங்கள் ஆரோக்கியமற்றவர் மற்றும் மருத்துவரிடம் செல்ல வேண்டிய நேரம் இது என்பதற்கான சில ஆபத்தான மற்றும் நுட்பமான அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

இருண்ட சிறுநீர் கழிப்பது
தினமும் காலையில், நீங்கள் சிறுநீர் கழிக்கும்போது, அதை பரிசோதிக்க வேண்டும். நீங்கள் இருண்ட நிறத்தில் சிறுநீர் கழித்தால், உங்கள் முக்கிய உறுப்புகளில் ஏதேனும் ஒரு பிரச்சனையை சந்திக்க நேரிடலாம். நீங்கள் நீரிழப்புடன் இருப்பதையும் இது குறிக்கலாம். உங்கள் சிறுநீரின் நிறம் வெளிர், வைக்கோல் நிறமாக இருக்க வேண்டும். மேலும், உங்கள் சிறுநீரில் துர்நாற்றமும் வீசக்கூடாது.

கண் வெள்ளையாக இல்லை
உங்கள் கண்களின் நிறம் மாறுவது, உங்கள் உடலிலுள்ள பிரச்சனையை குறிக்கலாம். மஞ்சள் நிறமானது உங்கள் பித்தப்பை, கல்லீரல், கணையம் அல்லது பித்த நாளங்களில் உள்ள பிரச்சனையைக் குறிக்கலாம். சிவப்பு கண்களும் மோசமான ஆரோக்கியத்தின் அறிகுறியாகும். அவை தூக்கமின்மை, கண்களில் அதிக அழுத்தம் மற்றும் உடைந்த இரத்த நாளங்களின் அறிகுறியாகும். இந்த உடல்நலம் தொடர்பான சில பிரச்சனைகளின் மூல காரணத்தை கண்டுபிடித்து அவற்றை சரிசெய்ய முயற்சி செய்ய வேண்டும்.

போதுமான தூக்கமில்லை
தூக்கம் உங்கள் ஆரோக்கியத்தோடு சம்பந்தப்பட்டதாக உள்ளது. நீங்கள் ஆரோக்கியமாக இருக்க, தினமும் இரவு எட்டு மணி நேரம் தூங்குவது அவசியம். நீங்கள் அதிகமாக தூங்கினால், உங்கள் உடலில் ஆற்றல் இல்லாமல் போகலாம். இருப்பினும், உங்கள் உடலுக்குத் தேவையான தூக்கம் இல்லாவிட்டால், அது உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதனால், போதுமான தூக்கத்தை பெறுவதை உறுதிப்படுத்துங்கள்.

மிகவும் சோர்வாக உணர்கிறீர்கள்
சோர்வு என்பது பலருக்கு இருக்கும் ஒரு நிலை. ஆனால், நீங்கள் அதற்குக் கூறும் காரணத்தை விட அதிகமான பாதிப்பு இருக்கலாம். நீரிழப்பு, குறைந்த இரும்புச் சத்து, போதிய உடற்பயிற்சியின்மை மற்றும் அதிகப்படியான சர்க்கரை நுகர்வு உள்ளிட்ட உடல்நலம் தொடர்பான பல காரணங்களால் நீங்கள் சோர்வாக உணரலாம். நீங்கள் எப்போதும் சோர்வாக இருந்தால், நீங்கள் நினைப்பது போல் ஆரோக்கியமாக இல்லாமல் இருக்கலாம். உங்கள் உணவு, உடல் செயல்பாடு மற்றும் நீரேற்றம் நிலை ஆகியவற்றைச் சரிபார்க்க வேண்டும். மேலும், உங்கள் மருத்துவரிடம் ஏதேனும் ஊட்டச்சத்து குறைபாடுகளைப் பற்றி விவாதிக்கவும்.

கடுமையான குறட்டை
பெரும்பலான மக்கள் குறட்டை விடுகிறார்கள். ஆனால், சிலர் அவர்கள் அருகில் உள்ளவர்களை தொந்தரவு செய்யும் அளவிற்கு கடுமையான குறட்டையை விடுகிறார்கள். குறட்டை என்பது எந்த வகையிலும் அலட்சியப்படுத்தக் கூடாத ஒரு பிரச்சனை. குறட்டையானது தூக்கக் கோளாறுடன் தொடர்புடையது. இது மூச்சுக்குழாய் அடைப்பு மற்றும் நுரையீரல் உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதைத் தொடர்ந்து இதய செயலிழப்புக்கு வழிவகுக்கும். ஆதலால், கவனமாக இருக்க வேண்டும்.

தோலில் சீரற்ற மாற்றங்கள்
நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது அல்லது உணவு ஒவ்வாமை காரணமாக உங்கள் தோலில் சில மாற்றங்கள் நிகழக்கூடும். முகப்பருவை அகற்ற விலையுயர்ந்த எக்ஸ்ஃபோலியண்ட்ஸ் மற்றும் க்ரீம்களில் முதலீடு செய்வதற்குப் பதிலாக, முதலில், தெளிவான சருமத்தைப் பெறுவதற்கு ஆரோக்கியம் தொடர்பான காரணத்தை அடையாளம் காண முயற்சிக்க வேண்டும். இறுதியில் இது உங்கள் ஆரோக்கியத்தையும் சருமத்தையும் மேம்படுத்தும்.

ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை
பெண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று ஒழுங்கற்ற மாதவிடாய். மாதவிடாய் ஏற்படாமல் இருப்பது கர்ப்பம், பிசிஓடி அல்லது பிசிஓஎஸ்-க்கு வழிவகுக்கும். உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களின் விளைவாகவும் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை ஏற்படலாம். நீங்கள் தொடர்ந்து ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை கொண்டிருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

இறுதிகுறிப்பு
உடல் பலவீனம் மற்றும் உங்கள் வழக்கமான செயல்பாடுகளைச் செய்வதில் சிரமம் ஆகியவை மருத்துவரை சந்திக்க வேண்டிய அவசியத்தைக் குறிக்கின்றன. உடல் எடை அதிகரிப்பு, சோர்வு, இரத்தம் தோய்ந்த மலம், மிகவும் கருமையான சிறுநீர் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்துவது, நீங்கள் ஆரோக்கியமாக இல்லை என்பதை குறிக்கிறது. உங்கள் உடலில் இந்த ஆரோக்கியமற்ற அறிகுறிகளை நீங்கள் கவனித்தால், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.



Click it and Unblock the Notifications