Latest Updates
-
18 ஆண்டுக்கு பின் கேது துலாம் ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரம் தொடங்கப்போகுதாம் -
மும்பை ஸ்டைல் சன்னா மசாலா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
6 நெல்லிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
அக்டோபர் 17, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாள் காத்திருக்காம் -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அக்டோபர் 28-ல் சுக்கிரன் உதயமாவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும் -
பண்டிகைக் காலத்தில் சருமத்தை பளிச்சென்று புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக்குகள்! -
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பரிசாக கொடுத்தது எந்த நாடு தெரியுமா?
உங்களுக்கு தைராய்டு பிரச்சனை வராம இருக்கணுமா? அப்ப கண்டிப்பா இதெல்லாம் செய்யுங்க...
ஒருவருக்கு தைராய்டு சுரப்பியில் பிரச்சனை இருந்தால், அது உடலின் முக்கிய செயல்பாடுகளைப் பாதித்து, பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். எனவே தைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
வளர்சிதை மாற்றத்திற்கான ராஜாவாக விளங்குவது தைராய்டு சுரப்பி. ஆற்றல் வெளிப்பாடு , இதயம் மற்றும் செரிமான நலன், எலும்புகளை நிர்வகிப்பது , மூளை வளர்ச்சி மற்றும் தசை கட்டுப்பாடு போன்றவற்றை ஒழுங்குபடுத்துவது இதன் சிறப்பாகும். ஆகவே தைராய்டு ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் அவசியமாகிறது.

தற்போது பலர் தைராய்டு பிரச்சனையால் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். ஒருவருக்கு தைராய்டு சுரப்பியில் பிரச்சனை இருந்தால், அது உடலின் பல முக்கிய செயல்பாடுகளைப் பாதித்து, பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். எனவே தைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும். இப்போது தைராய்டு சுரப்பியை எப்படியெல்லாம் பராமரிக்கலாம் என்று காண்போம்.

அயோடின் சேர்க்கப்பட்ட உப்பு
தைராய்டு சுரப்பியின் சரியான செயல்பாட்டை பாதிக்கும் ஒரு நிலை தைராய்டு குறைபாடு. பல ஆண்டுகளுக்கு முன்பு உலக மக்கள் தொகையில் 30% பேர் அயோடின் குறைபாடு என்ற பாதிப்பை எதிர்கொண்டனர். அதனால் உணவு வழியாக அயோடின் உட்செலுத்துதல் நன்மை தரும் என்று உணர்ந்த அரசு, உப்பில் அயோடின் சேர்ப்பதை உறுதி செய்தது. இதனால் தைராய்டு தொடர்பான கோளாறுகளான தைராய்டு வீக்கம், மூளை வளர்ச்சி பாதிப்பு போன்றவை தடுக்கப்படுகின்றன. அடுத்த சில ஆண்டுகளில் உலகம் முழுவதும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது. எனவே உங்கள் தினசரி உணவில் சேர்க்கப்படும் உப்பில் அயோடின் சேர்க்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

குடல் ஆரோக்கியம்
தைராய்டு ஹார்மோன்களான T3 மற்றும் T4 போன்றவற்றை கட்டுப்படுத்துவதில் செரிமான மண்டலம் முக்கிய பங்கு வகிக்கிறது. தைராய்டு சுரப்பியால் சுரக்கப்படுவது T4 ஹார்மோன் என்றாலும் உடல் செயல்பாட்டிற்காக உடலில் அது T3 யாக மாற்றம் செய்யப்படுகிறது. ஆரோக்கியமான T4 ஹார்மோன் உற்பத்தி சரியான நிலையில் இருந்தாலும் குடல் பராமரிப்பு சரியான நிலையில் இல்லாத போது, இந்த மாற்றம் செய்யும் செயல்பாட்டில் சமரசம் செய்யப்படுகிறது. T4 ஹார்மோன் உற்பத்தி இருந்தாலும் முழுமையான முறையில் அது பயன்படுவதில்லை. இது குறிப்பிட்ட தைராய்டு எதிர்ப்பு நிலையை உடலில் உருவாக்கக்கூடும்

மனஅழுத்தம்
குடல் ஆரோக்கியம் போல், மனஅழுத்தமும் T3 ஹார்மோன் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்த முடியும். ஆகவே சரியான வளர்சிதை மாற்றத்திற்கு ஆழ்ந்த தூக்கமும் மனஅழுத்தம் இல்லாத நிலையும் அவசியம். உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்வதால் மனஅழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும். குறிப்பிட்ட பொழுதுபோக்கை மேற்கொள்ளுதல், மகிழ்ச்சியாக சிரிப்பது, சிறந்த தோழமை கொள்வது, அன்பு செலுத்துவது, மூச்சை ஆழமாக இழுத்து வெளியில் விடுவது போன்றவற்றைப் பின்பற்றுவதால் மனஅழுத்தத்திற்கு குட் பை சொல்லிவிடலாம்.

கணவன்-மனைவி உறவு
மகிழ்ச்சியான திருமண உறவில் மனஅழுத்தம் குறைகிறது. கணவன் மனைவியின் நெருக்கமான உறவு நிலை மற்றும் தாம்பத்தியத்தில் எண்டோபிரின் மற்றும் மனநிலையை ஊக்குவிக்கும் இதர ஹார்மோன்கள் வெளியிடப்படுகிறது. மேலும் இந்த நெருக்கம் பலவீனமான தைராய்டு வளர்சிதை மாற்றத்தில் இடையூறை உண்டாக்கும் என்பதும் உண்மை. எனவே தைராய்டு சுரப்பியில் உண்டாகும் எந்த ஒரு பாதிப்பையும் கண்டறிந்து களைவது மிகவும் அவசியம். இதனைப் புறக்கணிக்கும் போது உங்கள் உடல்நலனில் பல இடையூறுகள் உண்டாகலாம்.

தைராய்டு வீக்கக் காரணி
தைராய்டு வளர்சிதை மாற்றத்தில் குறுக்கிடும் பொருட்கள் நீங்கள் உட்கொள்ளும் உணவில் உள்ளதா? தைராய்டு சுரப்பி அயோடினை எடுத்துக் கொள்வதில் அத்தகைய உணவுகள் தலையிடுகின்றனவா? ஹைப்போ தைராய்டிசம் பாதிப்பு இருந்தால், குறுக்குவெட்டு காய்கறிகளான முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், ப்ராக்கோலி போன்ற தைராய்டு வீக்கத்தை உண்டாக்கும் கோட்ரோஜெனிக் உணவுகளைத் தவிர்க்கவும். தினை, வேர்க்கடலை, முளைகள், கீரை மற்றும் அடர் பச்சை இலை காய்கறிகளின் பயன்பாட்டை மிதப்படுத்தவும். ஆனால் சில குறுக்குவெட்டு காய்கறிகள் புளிக்க வைத்து பயன்படுத்தும் போது தைராய்டு சுரப்பிக்கு நன்மை செய்கின்றன.

புளிக்க வைத்த உணவுகள்
புளிக்க வைத்த உணவுகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதுடன், தைராய்டு சுரப்பிக்கும் நன்மை செய்கின்றன. பீட் கேவாஸ், புளித்த பழங்கள் மற்றும் காய்கறிகளும், லாக்டோ புளித்த சல்சா, கிம்ச்சி, புளிக்க வைத்த முட்டைகோசு போன்றவை சுவையான மற்றும் அற்புதமான உணவுகளாகும்.
தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். எனவே தைராய்டு.சுரப்பியை ஆரோக்கியமாக பராமரிப்பது மிகவும் அவசியம்.



Click it and Unblock the Notifications
