For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த வயதில் தாம்பத்தியம் வைத்து கொண்டால் உங்கள் உயிருக்கே ஆபத்தாம்..! #அதிர்ச்சி தகவல்

|

"குழந்தை திருமணம்" என்கிற வழக்கம் இருந்த காலத்தில் தான் தாம்பத்திய உறவு பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. மிக சிறிய வயதிலே இருவரும் உறவில் ஈடுபடுவார்கள். ஆனால், இப்படிப்பட்ட மோசமான சடங்குங்கள் மாறிய பின்னரும் இதே நிலை நீடிக்கிறது என்றால் அது தான் மனித இனத்திற்கே பாதிப்பை தர கூடும். நமக்கு பிடித்த இணையுடன் உறவு வைத்து கொள்ள, ஒரு குறிப்பிட்ட வயதும் வரம்பும் நிச்சயம் உண்டு.

இது விஞ்ஞான பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. சிறு வயதிலே நாம் ஒருவருடன் உறவில் ஈடுபடும் போது நமது உடலில் பலவித பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. இது கொஞ்சம் கொஞ்சமாக நம்மை சிதைக்க கூடிய நிலைக்கு கொண்டு வந்து விடும். தாம்பத்திய வாழ்வில் மிக குறைந்த வயதிலே நாம் ஈடுபட்டால் பல்வேறு அபாயங்கள் நம்மை வந்து சேரும்.

இந்த பதிவில், எதனால் நாம் இத்தகைய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றோம், குறைந்த வயதில் தாம்பத்திய எண்ணங்கள் இருந்தால் எப்படிப்பட்ட விளைவுகள் நமக்கு உண்டாகும், இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக எத்தகைய தாக்கத்தை உடலில் ஏற்படுத்தும் போன்ற பல விடையங்களை இனி தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அன்று..!

அன்று..!

பல ஆயிரம் வருடத்திற்கு முன்னர் தாம்பத்திய உறவை பற்றிய விழிப்புணர்வு மிக குறைந்த அளவிலே இருந்தது. இயற்கையான இந்த விஷயத்தை பலரும் அபத்தமான ஒன்றாகவே பார்த்தனர்.

குழந்தைகளுக்கு கூட இதை பற்றிய விழிப்புணர்வை பல பெற்றோர்கள் தர மறுத்தனர். இது மோசமான நிலைக்கே அவர்களையும் அவர்களின் எதிர்கால சந்ததியினரையும் தள்ளியது.

இன்று..!

இன்று..!

ஆய்வின் படி கடந்த காலத்தில் இருந்ததை விட இப்போதெல்லாம் கலவியை பற்றிய விழிப்புணர்வும் பேச்சும் சற்று அதிகமாகவே உள்ளது என்றே சொல்லலாம்.

இருந்தும் இதில் பாதி-க்கும் மேற்பட்டோர் தவறான புரிதலுடனே உள்ளனர். ஆபாச படங்களை சிறு வயதிலே பார்ப்பதால் மன ரீதியான பல பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர்.

கலவும் பருவம்..!

கலவும் பருவம்..!

தாம்பத்திய வாழ்வில் ஈடுபட வேண்டிய வயது வரம்பு என்பது மிக முக்கியமானது. குறைந்த வயதிலே நாம் உறவில் ஈடுபடுவதால் உடல் ரீதியாகவும், மனம் ரீதியாகவும் ஆண்களும் பெண்களும் பாதிக்கப்படுகின்றனர். கலவு பருவம் பிறகு இன்னல்கள் நிறைந்த பருவமாக மாறி விடுகிறது.

காரணம் என்ன..?

காரணம் என்ன..?

இப்போதெல்லாம் நமக்கு மிக குறைந்த வயதிலே கலவியின் மீது அதிக விருப்பமும் ஈடுபாடும் வருவதற்கு ஒரு சில முக்கிய காரணிகள் தான் நம்மை தூண்டி விடுகின்றன. அவற்றில் சில...

- பாலியல் கல்வி இல்லாமை

- சிறு வயதிலே ஆபாச படங்களை பார்த்தல்

- பார்த்ததை செய்து பார்க்க வேண்டும் என நினைத்தல்

- வலைதளங்களின் சீர்கேடு

- தகுதியற்ற வலைதளங்களை வெளியிடுதல்

MOST READ: ஒரே மாசத்துல தொப்பையை குறைக்க, வெல்லத்த இதோட சேர்த்து சாப்பிடுங்க...!

ஆண்களுக்கான பிரச்சினை..!

ஆண்களுக்கான பிரச்சினை..!

ஆண்கள் குறைந்த வயதிலே கலவி வைத்து கொண்டால் பாலியல் ரீதியான தொற்று நோய்கள் எளிதில் உடலில் உண்டாக கூடும்.

பெண்களை போலவே அதிக அளவில் மன உளைச்சலுக்கு இவர்கள் ஆளாகுவார்கள். அத்துடன் சிலருக்கு ஹார்மோன் சார்ந்த பிரச்சினைகளும் உண்டாக கூடும்.

பாதிப்பு உங்களுக்கே..!

பாதிப்பு உங்களுக்கே..!

என்னதான் இருவரும் கலவியில் ஈடுபட்டாலும் ஆண்களை விட பெண்கள் தான் உடல் அளவில் பல பாதிப்புகளை சந்திக்கின்றனர்.

இளம் வயதில் உறவு வைத்து கொள்வதால் கருத்தரித்து தனது வாழ்வையே இழக்கும் அளவிற்கு பெண்கள் தள்ளப்படுவர்.

சுய இன்பம்..!

சுய இன்பம்..!

பொதுவாக சிறு வயதில் சுய இன்பம் கொண்டாலே அது பல வித பாதிப்பை மனதளவில் ஏற்படுத்தும். ஏதோ ஒரு குற்ற உணர்வுடனே பல இளம் வயதினர் இதை கையாளுவார்கள்.

எதிர்மறையான எண்ணங்கள் பல உண்டாகும். இது நாளடைவில் அவர்களின் தாம்பத்திய வாழ்விற்கே வெறுப்பை தரும்.

புற்றுநோய் அபாயம்..!

புற்றுநோய் அபாயம்..!

இளம் வயதில் உறவு வைத்து கொண்டால் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் வர கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மேலும், பெண்களுக்கு பாலியல் ரீதியான தொற்று நோய்களும் உருவாக அதிக வாய்ப்புள்ளதாம்.

MOST READ: 8 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் உங்களுக்கு ஏற்படும் அபாயங்கள் என்னென்ன..?

ஆபாச படங்கள்..!

ஆபாச படங்கள்..!

முந்தைய காலத்தை விட இன்று பலரும் ஆபாச படங்களை அதிகம் விரும்பி பார்க்கின்றனர். குறிப்பாக 10 வயது முதலே ஆண் குழந்தைகள் ஆபாச படங்களை பார்க்கும் வாய்ப்பு ஏற்படுகிறது என ஆய்வுகள் சொல்கின்றன.

பெண் குழந்தைகளை காட்டிலும் ஆண் குழந்தைகளே அதிகம் இதனை பார்ப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

எது சரியான வயது..?

எது சரியான வயது..?

தாம்பத்திய உறவில் ஈடுபட சரியான வயது உள்ளது. ஆணும் பெண்ணும் 20 வயதை நெருக்கும் போது உறவில் ஈடுபடுவது பிரச்சினைகளை உண்டாக்காது. எதுவாக இருந்தாலும் புரிதல் கொண்ட உறவே சிறப்பானதாக அமைய கூடும்.

கல்வியும் இணையமும்..!

கல்வியும் இணையமும்..!

பெரும்பாலும் இன்றைய கல்வியானது, பாலியல் கல்வியை ஒதுக்கிய படியே செல்கிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் பாலியல் கல்வி மிக இன்றியமையாததாகும்.

எது சரியான தொடதல், எது தவறான தொடுதல் என்கிற சின்ன சின்ன விஷயங்கள் கூட இன்றைய குழந்தைகள் பலருக்கும் தெரிவதில்லை. இணையத்தில் பார்க்கும் அத்தனையும் சரி" என்றே பல குழந்தைகள் அதை செய்து பார்க்கும் போது தவறான பாதைக்கு செல்கின்றனர்.

ஜாக்கிரதை..!

ஜாக்கிரதை..!

எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தை என்ன செய்கிறது, எப்படிப்பட்ட நட்பு வட்டாரம் உள்ளது, எங்கே செல்கிறார்கள் என்பதை அதிக கவனத்துடன் பார்க்க வேண்டும்.

குழந்தைகளை சரியான பாதையில் அழைத்து செல்வது ஒவ்வொரு பெற்றோர்களின் கையில் தான் உள்ளது.

MOST READ: இரவு தூங்கும் போது இதையெல்லாம் செய்து விட்டு தூங்குங்க... அப்புறம் பாருங்க என்ன நடக்குதுன்னு..!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Are the Risks of Having Sex at Young Age?

This article talks about What are the risks of having sex at a young age.