Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
கொழுப்பு உணவுகள் ஆபத்து என்று யார் சொன்னது? இந்த கொழுப்பு உணவுகள் உங்கள் ஆயுளை அதிகரிக்கும் தெரியுமா
ஒற்றைநிறைவுற்ற கொழுப்புகள் என்பது ஒருவகை கொழுப்பு அமிலம் ஆகும். இதனை மிதமான அளவில் எடுத்துக்கொள்ளும்போது அது உங்களுக்கு பாதுகாப்பானதாகும்.
கொழுப்பு உணவுகள் மீது எப்பொழுதும் நமக்கு ஒரு பயமும், சந்தேகமும் இருக்கும். ஆனால் உண்மையில் கொழுப்பு உணவுகள் நம் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானவை. நாம் எந்த வகையான கொழுப்பை எடுத்துக்கொள்கிறோம் என்பதை பொறுத்துதான் அதன் விளைவுகள் இருக்கிறது. ஒற்றைநிறைவற்ற கொழுப்பு உணவுகளை சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சிறந்த வழியாகும்.

கொழுப்பு உணவுகளை எப்பொழுதும் மிதமான அளவில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். ஒற்றைநிறைவுற்ற கொழுப்பு உணவுகள் உங்களை பல ஆபத்தான நோய்களில் இருந்து பாதுகாக்கும். இந்த பதிவில் இந்த கொழுப்புகள் எந்த உணவில் அதிகம் இருக்கிறது அதன் பலன்கள் என்னே என்று பார்க்கலாம்.

ஒற்றைநிறைவுற்ற கொழுப்புகள்
ஒற்றைநிறைவுற்ற கொழுப்புகள் என்பது ஒருவகை கொழுப்பு அமிலம் ஆகும். இதனை மிதமான அளவில் எடுத்துக்கொள்ளும்போது அது உங்களுக்கு பாதுகாப்பானதாகும். இந்த கொழுப்பு அமிலத்தில் ஒரு இரட்டை பிணைக்கப்பட்ட கார்பனும், ஒரு ஒற்றை பிணைக்கப்பட்ட கார்பனும் உள்ளது. இந்த கொழுப்பின் இரண்டு பொதுவான வடிவங்கள் ள் ஒலிக் அமிலம் மற்றும் பாலிடோலிக் அமிலம் ஆகும். நமது உடல் இந்த அமிலங்களை சரியாக பயன்படுத்தி கொள்ளும் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உணவுகள்
இந்த ஆரோக்கியமான கொழுப்பை பல உணவுகளில் இருந்து நீங்கள் எளிதில் பெறலாம். ஆனால் இதனை மிதமான அளவில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மறந்து விடாதீர்கள். ஏனெனில் இதனை அதிகமாக சேர்த்து கொள்வது வீக்கங்களுக்கு வழிவகுக்கும். இந்த கொழுப்பு உணவுகள் ஆலிவ் எண்ணெய், பாதாம், முந்திரி, முட்டை, பூசணிக்காய் விதை, அவகேடா, சீஸ், சூரிய காந்தி விதைகள் போன்றவையாகும். இது கொழுப்பு அமிலம் உங்களை எந்தெந்த நோய்களில் இருந்து பாதுகாக்கும் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

மார்பக புற்றுநோய்
நிறைவுறாஒற்றை கொழுப்புகளுக்கும், மார்பக புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பை பல ஆய்வுகள் கூறுகிறது. இந்த அமிலம் இருக்கும் உணவுகள் புற்றுநோய்களுக்கு எதிராக போராடும் என்று ஆய்வுகள் கூறுகிறது. இது மார்பக புற்றுநோய் மற்றும் குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆலிவ் எண்ணெயை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

சர்க்கரை நோய்
உடலில் இன்சுலின் உணர்திறன் குறைபாடு குறைவாக இருப்பது சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான முக்கியமான காரணமாகும். இந்த கொழுப்பு இருக்கு உணவுகள் உங்கள் உடலில் இருக்கும் குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.

மனநிலை மாற்றங்கள்
நீங்கள் அதிகளவு நிறைவுறா மற்றும் டிரான்ஸ் கொழுப்புகளை உணவில் சேர்த்து கொள்ளும்போது அது உங்கள் மூளையில் டோபமைன் உற்பத்தியாகுவதை தடுக்கலாம். இதனால் மனஅழுத்தம் மற்றும் மனநிலை மாற்றங்கள் ஏற்படலாம். இந்த சூழ்நிலையில் ஒற்றைநிறைவுற்ற கொழுப்புகளை உணவில் சேர்த்து கொள்வது இந்த பிரச்சினைகளை குணப்படுத்தி உங்கள் உடலில் ஹார்மோன்கள் உற்பத்தியை சமநிலையில் வைத்திருக்கும்.

இதய பாதுகாப்பு
ஒற்றைநிறைவுற்ற கொழுப்புகள் LDL வகையை சேர்ந்த நல்ல கொழுப்புகளாகும். இது உங்களின் இதயம் மற்றும் தமனிகளில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கும். இந்த கொழுப்பு உங்கள் உடலில் அதிகம் இருக்கும்போது மாரடைப்பு, ஆர்த்ரோஸ்கெலரோசிஸ் போன்ற பாதிப்புகளில் இருந்து உங்களை பாதுகாக்கும்.

சிறப்பான கொழுப்புகள்
இந்த கொழுப்பின் மீது நடத்தப்பட்ட ஆய்வில் இந்த வகையான கொழுப்புகள் நமது உடலில் தேக்கி வைக்கப்படாமல் பெரும்பாலும் நமது உடலுறுப்புகளால் பயன்படுத்தபடுகிறது. இதனால் உங்கள் உடலில் தேவையில்லாத கொழுப்புகள் சேகரிக்கப்படுவது தடுக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications