For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிசுவை அழிக்கும் பாராசிட்டமால்...! இதனை பற்றிய பல மருத்துவ ரீதியான உண்மைகள் உள்ளே..!

நாம் காய்ச்சல் என்றவுடனேயே கண்ணை மூடிக்கொண்டு சொல்லும் மாத்திரை இந்த பாராசிட்டமால்தான். ஆனால் இதில் இருக்கும் பலவித ஆபாயங்களை பற்றி தெரியாமலேயே நாம் சாப்பிடுகிறோம். இந்த பதிவில் பாராசிட்டமால் மாத்திரை

|

இன்று நம்மில் பலர் பல வித நோய்களுக்கு ஆளாகின்றோம். இதற்கு காரணங்களை சொல்லி கொண்டே போகலாம். பொதுவாக நோய்கள் ஏற்பட்டாலே வீட்டில் இருந்தே அதனை சரி செய்ய ஏதேனும் வழி இருக்கிறதா..? என்பதையே நாம் முதன்முதலில் யோசிப்போம். இது சில சமயங்களில் நோய்களை சரி செய்து விடும். சில சமயங்களில் நோய்களை சரி செய்யாமல் தீவிர நிலைக்கும் கொண்டு செல்லும். குறிப்பாக பாமர மக்கள் வீட்டு வைத்தியத்தை வைத்தே இதனை சரி செய்ய முயலுவார்கள். மேலும் மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் மருந்தகங்களில் இருந்து தேவையற்ற மருந்துகளை வாங்கியும் சாப்பிடுவார்கள்.

paracetamol tablet uses

இது காலங்காலமாக நடந்து வருகின்ற ஒரு மோசமான நிகழ்வாகவே கருதப்படுகிறது. இதனால் பல்வேறு உயிர் இழப்புகள் இன்றளவும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக நாம் காய்ச்சல் என்றவுடனேயே கண்ணை மூடிக்கொண்டு சொல்லும் மாத்திரை இந்த பாராசிட்டமால்தான். ஆனால் இதில் இருக்கும் பலவித ஆபாயங்களை பற்றி தெரியாமலேயே நாம் சாப்பிடுகிறோம். இந்த பதிவில் பாராசிட்டமால் மாத்திரையை பற்றிய முழு மருத்துவ ரீதியான உண்மை தகவல்களை தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாராசிட்டமால் :-

பாராசிட்டமால் :-

பொதுவாக வலி நிவாரணியாகவும், காய்ச்சலை குறைக்கவும் இதனை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். குறிப்பாக, தலைவலி, உடல் வலி, தசை வலி, முது வலி, போன்றவற்றிற்கும் இதனை பயன்படுத்தலாம் என்றே மருத்துவர்கள் கூறுவார்கள். அதுவும் அந்தந்த வலியின் தன்மையை பொருத்தே இதன் அளவு வேறுபடும். சிலர் தேவையற்ற பல நோய்களுக்கும் இதனை பயன்படுத்துகின்ற்னர். அவ்வாறு செய்வது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும். சில சமயங்களில் உயிருக்கே கூட ஆபத்தை தரலாம்.

எவ்வளவு அளவு..?

எவ்வளவு அளவு..?

அதிக மருந்துகளை எடுத்து கொண்டால் விரைவாகவே நோய்கள் சரி ஆகிவிடும் என்ற மனப்பாங்கை முதலில் தூக்கி எறியுங்கள். எந்த நோயாக இருந்தாலும் தேவையான அளவே மருந்துகளை எடுத்து கொள்ள வேண்டும். அதே போன்றுதான் பாராசிட்டமாலையும் குறிப்பிட்ட அளவே பயன்படுத்த வேண்டும். பெரியவர்கள் ஒரு டோஸிற்கு 1 gram (1000 mg) மற்றும் ஒரு நாளைக்கு 4 gram (4000 mg) அளவும் எடுத்து கொள்ளலாம். 2 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு மருத்துவரின் ஆலோசனை பெற்றே வழங்க வேண்டும்.

பக்க விளைவுகள் :-

பக்க விளைவுகள் :-

பாராசிட்டமாலை அதிகம் எடுத்தால், பின்வரும் பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.

- வாந்தி

- மயக்கம்

- அதிக காய்ச்சல்

- வாய் புண்

- அல்சர்

- குடல் பாதிப்பு

- ரத்த சோகை

- பசியின்மை

- உதடுகள் வெந்து போகுதல்

இத்தகைய கொடுமையான விளைவுகளால் பாதிக்கப்படுவீர்கள்.

தாய்மார்கள் :-

தாய்மார்கள் :-

மிகவும் குறிப்பாக, கர்ப்பம் அடைந்த பெண்கள் இந்த பாராசிட்டமலை சாப்பிடவே கூடாது. மீறி சாப்பிட்டால் கருவில் உள்ள குழந்தைக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம். கர்ப்பிணிகளுக்கு காய்ச்சல் வந்தால் மருத்துவரின் ஆலோசனை பெற்றே செயல்பட வேண்டும். மேலும் தாய்ப்பால் கொடுக்கும் சமயங்களில் இதனை எடுத்து கொள்ளலாமா என மருத்துவரை கேட்டு கொண்டே, அதன்படி செய்தால் தாயும் சேயும் நலமாக இருக்கலாம்.

முன்னெச்சரிக்கை...!

முன்னெச்சரிக்கை...!

காய்ச்சல் இருந்தாலும் சில முக்கிய பாதிப்புகள் உடம்பில் ஏற்பட்டுள்ள போது இதனை கட்டாயம் தவிர்க்க வேண்டும். குறிப்பாக உடலில் ஏதேனும் அலர்ஜி, அரிப்புகள் ஏற்பட்டிருந்தால் உபோயோகிக்க கூடாது. அத்துடன் கிட்னி மற்றும் கல்லீரல் சம்பந்தமான பிரச்சினை உள்ளவர்கள் பாராசிட்டமாலை பயன்படுத்த கூடாது. நீரிழிவு நோயாளிகள் இதனை மருத்துவரின் ஆலோசனையோடு உண்பது மிக நல்லது.

எப்போது நிறுத்த வேண்டும் :-

எப்போது நிறுத்த வேண்டும் :-

- பாராசிட்டமால் சாப்பிட்ட 3 நாட்களுக்கு பிறகும் காய்ச்சல் தொடர்ந்தால் இதனை சாப்பிடுவதை நிறுத்தவும்.

- பெரியவர்களுக்கு 7 நாட்களுக்கு மேலும், குழந்தைகளுக்கு 5 நாட்களுக்கும் வலி ஏதேனும் இருந்தால் மருத்துவரை கட்டாயம் அணுகவும்.

- உடலில் திடீர் வீக்கமோ, ஒவ்வாமையோ ஏற்பட்டால் பாராசிட்டமால் எடுத்து கொள்வதை நிறுத்தி கொள்ள வேண்டும்.

வினா - விடை :-

வினா - விடை :-

#1 மது அருந்தி இருபவர்கள் இதனை சாப்பிட்டால் என்ன ஆகும் ?

விடை :- மது அருந்தி விட்டு பாராசிட்டமாலை சாப்பிட்டால் குடல் பகுதியில் பல உபாதைகளை தரும். அத்துடன் ரத்த போக்கு, மயக்கம், வாந்தி, மஞ்சள் காமாலை போன்றவையும் ஏற்பட பல வாய்ப்புகள் உள்ளது.

#2 புகை பழக்கம் உள்ளவர்கள் பாராசிட்டமாலை எடுத்து கொள்ளலாமா..?

விடை :- மாத்திரை எடுத்து கொள்ளும் நேரத்தில் புகைப்பதை தவிர்த்தல் மிக நன்று. இல்லையேல் புற்றுநோய் வர கூட வாய்ப்புகள் நிறைய உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Paracetamol - Uses,Side Effects, Dosage & more

Paracetamol is generally safe at recommended doses.Serious skin rashes may rarely occur, and too high a dose can result in liver failure. It appears to be safe during pregnancy and when breastfeeding.
Desktop Bottom Promotion