சுயஇன்பத்தினால் மாரடைப்பு ஏற்படும் என்பது உண்மையா?

சுயஇன்பம் செய்தால் ஆண்மை குறையும் என்ற ஒரு கருத்தும், சுயஇன்பம் செய்தால் ஆணுறுப்பின் அளவு அதிகரிக்கும் என்ற கருத்தும் மாறி மாறி மக்களை பல காலமாக குழப்பி வருகிறது. ஆனால் இது இரண்டுமே தவறானவைதான். இந்த

சுயஇன்பம் காண்பது என்பது ஆண், பெண் இருவருக்கும் பொதுவான ஒன்றாகிவிட்டது. கிபி 1600 களில் யாரேனும் சுயஇன்பத்தில் ஈடுபட்டு மாட்டிக்கொண்டால் அவர்களுக்கு மிகக்கடுமையான தண்டனை வழங்கப்பட்டு கொண்டிருந்தது. ஆனால் இப்பொழுது ஓரின சேர்க்கையையே நமது நாடு சட்டப்பூர்வமாக அங்கீகரித்து விட்டது. அந்த அளவிற்கு மக்களும், நாகரிகமும் மாறிவிட்டது.

interesting facts about masturbation

எது மாறினாலும் இன்றும் மாறாத ஒன்று சுயஇன்பம் குறித்த சந்தேகங்களும், பயங்களும். சுயஇன்பம் செய்தால் ஆண்மை குறையும் என்ற ஒரு கருத்தும், சுயஇன்பம் செய்தால் ஆணுறுப்பின் அளவு அதிகரிக்கும் என்ற கருத்தும் மாறி மாறி மக்களை பல காலமாக குழப்பி வருகிறது. ஆனால் இது இரண்டுமே தவறானவைதான். இந்த பதிவில் சுயஇன்பம்பற்றி நீங்கள் அறியாத பல தகவல்களை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுயஇன்பம் என்பது மனிதர்களுக்கானது மட்டுமல்ல

சுயஇன்பம் என்பது மனிதர்களுக்கானது மட்டுமல்ல

மனிதர்கள் மட்டும்தான் சுயஇன்பம் காண்கிறார்கள் என நீங்கள் இதுவரை நினைத்திருந்தால் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய நேரமிது. ஏனெனில் பசி, தூக்கம் போல பாலியல் உணர்வும் அனைத்து உயிர்களுக்கும் பொதுவான ஒன்று. அதன்படி விலங்குகளும், பறவைகளும் கூட சுயஇன்பம் காண்பதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஆண்களா? பெண்களா?

ஆண்களா? பெண்களா?

சுயஇன்பம் என்பது இரு பாலினத்தாருக்கும் பொதுவான ஒன்றுதான். ஆனால் அளவு மற்றும் சூழல் பெண்களை விட ஆண்களே அதிகளவு சுயஇன்பம் காண்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் நடத்திய ஆய்வில் பெண்களை விட ஆண்கள் இருமடங்கு அதிக அளவில் சுயஇன்பம் காண்பது கண்டறியப்பட்டுளளது. பெண்கள் மாதத்திற்கு 5 முறை சுயஇன்பம் கண்டால் ஆண்கள் 12 முறை காண்கின்றனர்.

உடலுறவு வேறு சுயஇன்பம் வேறு

உடலுறவு வேறு சுயஇன்பம் வேறு

ஆண்களுக்கு இருக்கும் பொதுவான ஒரு கருத்து உடலுறவிலும் சரி சுயஇன்பத்திலும் சரி உயிரணுக்கள் தான் வெளியேறுகிறது. எனவே இரண்டும் ஒன்றுதான் என்று. ஆனால் உண்மையில் அப்படி அல்ல. சுயஇனபத்திற்கும், பாலியல் உறவில் ஈடுப்படுவதற்கும் வித்தியாசம் உள்ளது. இரண்டுமே உங்களுக்கு நன்மையை வழங்கினாலும் அவற்றின் அளவு மாறுபடும். அந்த வகையில் சுயஇன்பத்தை காட்டிலும் பாலியல் உறவில் ஈடுபடும்போது உங்கள் இரத்த அழுத்தம், இதய ஆரோக்கியம், புரோஸ்டேட் ஆரோக்கியம் போன்றவை அதிகம் அதிகரிக்கிறது.

ஆபத்தில்லாமல் இல்லை

ஆபத்தில்லாமல் இல்லை

இதில் ஆபத்துக்கள் மிகவும் குறைவு என்றாலும் ஆபத்து இல்லாமல் இல்லை. சுயஇன்பம் மூலம் பாலியல் தொற்றுநோய்கள், கர்ப்பம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும், அடிக்கடி சுயஇன்பம் காணும்போது தோல் எரிச்சல் மற்றும் காயங்கள் ஏற்படலாம். கடினமாக சுயஇன்பம் காணும்போது ஆணுறுப்பில் முறிவு அல்லது இரத்தப்போக்கு ஏற்படலாம்.

பாலியல் கோளாறுகளை தடுத்தல்

பாலியல் கோளாறுகளை தடுத்தல்

சுயஇன்பம் காண்பது ஆண்களுக்கு இருக்கும் பாலியல் பிரச்சினைகளை தீர்க்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. சுயஇன்பம் காண்பது ஆண்களின் பாலியல் சக்தியை கிகாரிக்கும், இதற்கு காரணம் இது ஆண்களிடையே ஏற்படுத்தும் தன்னம்பிக்கைதான். இதனால் ஆண்கள் நீண்ட நேரம் படுக்கையில் சிறப்பாக செயல்பட முடியும்.

இதய பாதுகாப்பு

இதய பாதுகாப்பு

ஆண்களிடையே நிலவும் ஒரு பரவலான பயம் சுயஇன்பம் காண்பது இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பது. ஆனால் இது உண்மையல்ல. ஆண்கள் அடிக்கடி உச்சக்கட்டம் காண்பது அவர்களுக்கு ஏற்படும் இதய பாதிப்புகளை குறைக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது. சுயஇன்பம் ஆண்கள் மனதில் ஒரு ஆரோக்கியமான எண்ணத்தை உருவாக்குகிறது. அதற்காக அளவிற்கதிகமாக சுயஇன்பம் காண்பது என்பது நிச்சயம் ஆபத்தானதுதான்.

எத்தனை முறை சுயஇன்பம் காணலாம்?

எத்தனை முறை சுயஇன்பம் காணலாம்?

அறிவியல்ரீதியாக இதற்கு இதுவரை பதில் கண்டுபிடிக்க இயலவில்லை. ஏனெனில் சுயஇன்பம் என்பது அவரவர் நோயெதிர்ப்பு மற்றும் பாலியல் இச்சைகளை பொறுத்தது. இதற்கு சரியான எண்ணிக்கை அறிவிக்கப்படவில்லை என்றாலும் வாரத்திற்கு 5 முறை வரை சுயஇன்பம் காண்பது ஆரோக்கியமான பழக்கமாக மருத்துவர்களால் கருதப்படுகிறது.

ஆணுறுப்பை வலிமையாக்கும்

ஆணுறுப்பை வலிமையாக்கும்

சுயஇன்பம் காண்பது ஆணுறுப்பின் நீளத்தை அதிகரிக்கும் என்னும் தவறான கருத்து உள்ளது. ஆனால் இது பொய்யான கருத்தாகும். சுயஇன்பம் ஆணுறுப்பின் நீளத்தை அதிகரிக்கா விட்டாலும் ஆணுறுப்பை வலிமையாக்க கூடியது. இது ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து அதன் விறைப்புத்தன்மையை அதிகரிக்கும்.

எப்போது சுயஇன்பம் காணக்கூடாது?

எப்போது சுயஇன்பம் காணக்கூடாது?

சுயஇன்பத்தினால் உங்களுக்கு எராளமான நன்மைகள் கிடைக்கிறது. ஆனால் அவை அனைத்தும் ஒரு அளவிற்குள் இருக்கும்வரை மட்டும்தான். ஏனெனில் சிகரெட், மது போல சுயஇன்பமும் உங்களை அடிமையாக்க கூடிய ஒரு பழக்கம்தான். அதற்கு அடிமையாகிவிட்டால் உங்கள் எண்ணம் முழுவதும் அதனை பற்றியே இருக்கும், வேலையில் கவனம் செலுத்த முடியாது, நியாபகமரத்தி ஏற்படும், பாலியல் ஆசைகள் அதிகரிக்கும். இதுபோன்ற சூழ்நிலைகளில் மருத்துவர்களின் உதவியை நாடுவது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion