Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
விந்தணு குறைபாடு மற்றும் விறைப்பு தன்மை ஏற்படுத்த கூடிய அன்றாட உணவுகள்...!
இன்று பெரும்பாலான ஆண்கள் மற்றும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் முதன்மையானதாக கருதப்படுவது குழந்தையின்மையே. பெண்களுக்கு சில வகையான உடல் சார்ந்த கோளாறுகள் இருப்பது போலவே ஆண்களுக்கும் சில முக்கிய பிரச்சினைகள் இருக்கிறது. அவற்றில் குறிப்பாக கருதப்படுவது விந்தணு குறைபாடு. இன்றைய நவீன உலக வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களும் நம் உடல் நலத்தை பாதிப்பதாக இருக்கிறது.

அந்த வகையில் ஆண்களின் பிரச்சினைக்கு காரணமாக இருப்பது அவர்கள் எடுத்து கொள்ளும் உணவும், அன்றாட பழக்க வழங்கங்களும் தான். இந்த பதிவில் விந்தணு குறைபாடு மற்றும் தம்பத்திய உறவை கெடுக்கும் சில உணவு வகைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

முதன்மையான பிரச்சினை..!
பல ஆண்களுக்கு பெரிய பிரச்சினையாக கருதப்படுவது இந்த ஆண்மை குறைவு தான். வீட்டு கஷ்டத்தை காட்டிலும் இவை முதன்மையானதாக கருதப்படுகிறது. ஹார்மோன்கள் உற்பத்தி தட்டுப்பாடு, உடல் கோளாறுகள், மன கசப்புகள் இப்படி பல்வேறு காரணிகள் ஆண்களின் குறையை இன்னும் அதிகரிக்க செய்கிறது. குறிப்பாக டெஸ்ட்ரோஸ்டெரோன் உற்பத்தி பல ஆண்களுக்கு நின்றே போய்விடுகிறது.

விஷத்தன்மை மிக்கது..!
தினமும் உண்ணும் உணவுதான் ஒருவரின் உடல் நலத்தை முற்றிலுமாக நிர்ணயிக்கிறது. உணவு ஒருவரை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம். ஃபாஸ்ட் ஃபூட்ஸ் சாப்பிடும் ஒவ்வொரு ஆணுக்கும் எண்ணற்ற உடல் நோய்கள் இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றது. ஏனெனில் இவை அனைத்தும் கிட்டத்தட்ட விஷத்திற்கு சமமானதாம்.

இனிப்பு வைக்கும் ஆப்பு...!
இன்று நாம் சாப்பிடும் எல்லா வகையான கடை பொருட்களிலும் செயற்கை சர்க்கரை சேர்க்கப்படுகிறது. இவை தசைகளின் ஆற்றலை குறைத்து ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனை அதிகரிக்க செய்கிறது. இதனால் விறைப்பு தன்மை ஏற்பட்டு குழந்தையின்மை பிரச்சினை உருவாகிறது.

புதினாவின் தாக்கம்..!
ஆண்கள் தங்களின் உணவில் அதிக அளவில் புதினாவை சேர்த்து கொண்டால் எண்ணற்ற பக்க விளைவுகளை சந்திக்க நேரடிடலாம். அதாவது, புதினா உண்மையில் நல்ல வாசனை மூட்டிதான். என்றாலும், இவை டெஸ்டோஸ்டெரோனின் அளவை குறைத்து விட கூடும். எனவே, இவற்றின் அளவு மிக முக்கியம்.

அடைப்பட்ட உணவுகள்..!
பொதுவாக எந்த ஒரு உணவும் அதிக காலம் ஒரு பாக்கெட்டிலோ அல்லது கேனிலோ அடைபட்டால் அது கிட்டத்தட்ட விஷத்திற்கு ஈடாகும். ஆனால், நம்மில் 90 % பேர் இது போன்ற உணவுகளையே அதிகம் உண்பதாக உணவு வல்லுநர்கள் சொல்கின்றனர். இவை ரத்த ஓட்டத்தை முற்றிலுமாக பாதித்து, மலட்டு தன்மை ஏற்படுத்துமாம்.

பாலாடைக்கட்டி
இப்போதெல்லாம் நாம் சாப்பிடும் உணவு வகைகளில் பல்வேறு பிரிவுகள் வந்துவிட்டது. அவற்றில் ஒன்றுதான் இந்த "சீஸ்" என்னும் பாலைக்கட்டி. சீஸ் பிரட், சீஸ் பீட்சா போன்றவை இவற்றில் அடங்கும். இவை பாலில் இருந்து எடுக்கப்பட்டாலும், இவற்றை பதப்படுத்தப்பட்டே தயாரிக்கின்றனர். எனவே இவை விந்து உற்பத்தியை தடை செய்ய கூடும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்
அதிக நாள் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் உயிருக்கே ஆபத்தாகி விடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். எடுத்துக்காட்டாக கோதுமை மாவில் தயாரித்த உணவு பொருட்களில், அவற்றில் உள்ள ஜின்க் மூன்றில் ஒரு பகுதி குறைந்து விடுமாம். இந்த ஜின்க் தான் ஆண்களின் குழந்தை பேறுக்கு உதவ கூடியது.

இறால் தரும் வேதனை..!
அசைவம் என்றதுமே ஆண்கள் ஒரு பிடி பிடிக்க ஆரம்பித்துவிடுவர். இது அவற்றின் ருசிக்காக கிடைத்த ரசிகர் கூட்டமே. ஆனால், இதனால் வரக்கூடிய பக்க விளைவுகளையும் தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே. கடல் இறாலில் எண்ணற்ற வேதி தன்மை கலந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றது. இவை விந்து தட்டுப்பாட்டிற்கு வழி வகுக்கும்.

டயட் சோடாக்கள்
சில உணவுகள் விஷத்தன்மை வாய்ந்தது என்று தெரிந்தும் நாம் அதனை சாப்பிட்டு வருகின்றோம். அவற்றில் ஒன்றுதான் இந்த டயட் சோடாக்களும். தாம்பத்திய உறவில் இன்பத்தை தர கூடிய Serotonin என்ற முக்கிய ஹார்மோனை இவை தடை செய்கிறது. அத்துடன் ஆண்மை குறைபாடையும் ஏற்படுத்துகிறதாம்.

சோயா
சோயாவை அதிகம் உணவில் சேர்த்து கொண்டால் இவை ஹார்மோன்களில் சீர்குலைவை ஏற்படுத்துமாம். ஏனெனில் சோயாவானது, phytoestrogen களை உற்பத்தி செய்ய கூடியது. இவை பெண்களுக்கு அதிகம் தேவைப்பட கூடிய ஹார்மோன்களில் ஒன்றாகும். ஆனால், இவை ஆணின் உடலில் அதிகம் சேர்ந்தால் ஹார்மோன்களின் சமநிலை மாறி விடும்.

அதிமதுரம்
நாம் பல வகையான நாட்டு மருந்துகளை சாப்பிட்டு வந்திருப்போம். அவற்றில் ஒரு சில, பக்க விளைவுகளை தர கூடும். அந்த வகையில் அதிமதுரமும் சேர்க்கப்படுகிறது. அதிமதுரத்தை தினமும் 3 g சாப்பிட்டு வருகிற ஆண்களின் டெஸ்டோஸ்டெரோன் அளவு 35 சதவீதம் குறைந்து விடும் என ஆராய்ச்சிகள் கூறுகிறது. எனவே, எந்த வகையான மூலிகைகளை எடுத்து கொள்ளும் முன் மருத்துவரை அணுகுவது சிறந்தது.

மைக்ரோவேவ் பாப்கார்ன்
பாப்கார்ன் எல்லோருக்கும் பிடித்தமான உணவுதான், என்றாலும் இதிலும் ஆப்பு இருக்கிறது. மைக்ரோவேவ் மூலம் தயாரித்த பாப்கார்ன், அதிக வேதி தன்மை நிறைந்ததாக ஆராய்ச்சிகள் சொல்கிறது. இவை விந்துவின் நீந்து தன்மையை முற்றிலுமாக தடை செய்து விடுமாம்.

ஆளி விதைகள்
ஆளி விதைகள் தாம்பத்திய உறவை கெடுக்க கூடியதாகும். அதாவது, இவற்றை சாப்பிட்டு வந்தால் ஆண்களின் ஹார்மோன்கள் குறைபாடு பெரும். அதோடு சேர்த்து விந்து பிரச்சினை ஏற்பட்டு, ஆண்களுக்கு மலட்டு தன்மை ஏற்பட கூடும்.

மது உறவுக்கு கேடு..!
மது அருந்துவதால் எண்ணற்ற தீமைகள் உருவாகிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. பெண்களை விட ஆண்களே மது பழக்கத்திற்கு அதிகம் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மது பழக்கம் உடலுக்கு பல வித ஆபத்துகளை தருவதோடு, விறைப்பு தன்மையை அதிகம் ஏற்படுத்தும்.
எனவே, மேற் சொன்ன உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான வாழ்வை வாழுங்கள் நண்பர்களே...! மேலும், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.



Click it and Unblock the Notifications











