Latest Updates
-
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும்
ஆண்களை அதிகம் குறி வைத்து தாக்கும் 11 உயிர்கொல்லி நோய்கள்...!
கால மாற்றங்கள் எந்த அளவிற்கு அதிகம் ஆகி கொண்டே போகிறதோ, அதே அளவிற்கு அவற்றின் தீய தாக்கங்களும் பெருகி கொண்டே வருகிறது. நாம் செய்ய கூடிய சிறு செயல்கள் கூட நம்மை பெரிதும் பாதிக்க கூடிய அளவில் மாற்றம் பெற்றுள்ளது. இன்றைய நவீன காலத்தில் நோய்களின் தாக்கமும் அதிகம் ஆகி கொண்டே போகிறது. இவை பல்வேறு வகையில் அவற்றின் வீரியத்தை அதிகரித்து கொள்கிறது.

அன்றாடம் நாம் உண்ணும் உணவு முதல் செய்கின்ற செயல்கள் வரை எல்லா வகைகளிலும் நாம் பாதிக்கப்படுகின்றோம். இந்த பதிவில் ஆண்களை அதிகம் தாக்க கூடிய சில கொடிய நோய்களை பற்றி முழுமையாக அறிந்து கொள்வோம்.

ஆண்களும் நோய்களும்...!
தலைப்பே சற்று வித்தியாசமாக இருக்கிறது என்று யோசிக்கிறீர்களா..? உண்மைதாங்க, பெண்களை விட ஆண்களை அதிகம் தாக்க கூடிய ஒரு சில முக்கிய நோய்கள் உள்ளன. அவற்றின் தாக்கம் இன்றைய காலகட்டத்தில் அதிகம் ஆகி கொண்டே இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது போன்ற நோய்கள் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை எந்த உறுப்புகளில் வேண்டுமானாலும் ஏற்பட கூடுமாம்.

விரை விதை புற்றுநோய்
இது மிகவும் கொடிய வகை புற்றுநோய் என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர். சராசரியாக 260 ஆண்களில் ஒரு ஆண், இந்த விரை விதை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமெரிக்கன் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சொல்கிறது. இது எல்லா வகையான வயதினரையும் தாக்குமாம்.

சிறுநீர்ப்பை தொற்றுகள்
இன்று அதிக படியான ஆண்கள் இந்த சிறுநீர்ப்பை சார்ந்த ஏதோ ஒரு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுநீர் பாதைகளில் தொற்றுகளை உருவாக்கி உடலின் முழு செயல்பாட்டையும் சீர்குலைக்கும். அத்துடன் சிறுநீரகத்தில் கல்லையும் இவை ஏற்படுத்துமாம்.

பெயரோய்ன் நோய்
இது ஆண்களின் பிறப்புறுப்பை தாக்க கூடிய ஒரு வகை நோயாகும். பிறப்புறுப்புகளில் கிருமிகளால் ஒரு வித தொற்றுகளை ஏற்படுத்தும். பிறகு இவை ஆணுறுப்பை முற்றிலுமாக தாக்குமாம். இதனால், ஆணுறுப்பு சிறியதாகி விட கூடும். எனவே, இந்த நோய் தாம்பத்திய வாழ்வை பாதிக்க செய்யும்.

மார்பக புற்றுநோய்
பெண்களை அதிகமாக தாக்கும் மார்பக புற்றுநோய் இன்று ஆண்களையும் தாக்கி கொண்டே வருகிறது. பொதுவாக புற்றுநோய் என்றாலே அவை ஆரம்ப காலகட்டத்தில் எந்த ஒரு பெரிய அறிகுறிகளையும் தந்து விடாது. அதை போன்றுதான் இந்த மார்பக புற்றுநோயும். மார்பக பகுதியில் இந்த புற்றுநோய் செல்கள் உருவாகி பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இதய நோய்
இன்றைய நவீன உலகில் பெருகி வரும் நோய்களில் முதன்மையானதாக கருதப்படுவது இந்த இதய நோய்கள்தான். உயர் ரத்த அழுத்தம், கொலெஸ்ட்ரோல், புகை பழக்கம் போன்றவற்றால் இந்த நோயின் தாக்கம் ஏற்படுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ப்ரோஸ்டேட் புற்றுநோய்
பெரும்பாலான ஆண்கள் பாதிக்கப்படும் ஒரு வகை புற்றுநோய் இந்த ப்ரோஸ்டேட் புற்றுநோய். இது ஆண்களின் ப்ரோஸ்டேட் சுரப்பியில் புற்றுநோய் செல்களை உருவாக்கி பிறப்புறுப்புகளை பாதிக்க செய்யும். மேலும், இல்லற வாழ்வில் இவர்களால் முழுமையாக ஈடுபட முடியாதாம்.

எய்ட்ஸ்
பாதுகாப்பற்ற கலவியால் உருவாகின்ற பயங்கர நோய் கிருமிதான் இந்த HIV. இதுதான் ஒருவரின் உடலில் எய்ட்ஸ் உருவாக காரணமாக இருக்கிறது. ஆண்களில் முக்கால் வாசி பேர் இதனை பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரையே விடுகின்றனர்.

சர்க்கரை நோய்
இந்த நோயை பற்றி சொல்ல தேவையே இல்லை. ஏனெனில் இது நம்மில் பலருக்கு இருக்கிறது. இந்தியாவில் ஆண்களை தாக்கும் நோய்களில் முதலிடத்தில் இருப்பது சர்க்கரை நோய் தான் என மருத்துவ கணிப்பு சொல்கிறது. இந்த நோய் ஒருவரின் வாழ்வையே தலை கீழாக புரட்டி போடும் அளவிற்கு கொடியதாம்.

கல்லீரல் நோய்
நாம் சாப்பிட கூடிய சீரற்ற உணவுகள் தான் கல்லீரலை பாதிக்கிறது. ஜீரண மண்டலம் முற்றிலுமாக சீர்கேடு அடைந்து, கல்லீரல் பாதிப்பு ஏற்படும். குறிப்பாக புகையிலை மற்றும் குடி பழக்கம் இருப்பவருக்கு இதன் தாக்கம் அதிகம் இருக்குமென மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தைராய்டு பிரச்சினை
இந்த நோய் ஒரு வகை குறைபாடாகும். ஐயோடின் உடலில் தேவையான அளவில் இல்லாமலோ அல்லது தேவைக்கு அதிகமாக இருந்தாலோ இந்த தைராய்டு பிரச்சினை ஆண்களுக்கு வர கூடும். இது ஆண்களின் தாம்பத்திய வாழ்வை கெடுக்க கூடிய நோய்களில் ஒன்றாகும்.

மன நோய்கள்
இன்றைய இளம் தலைமுறையினர் சிறு விஷயத்தை கூட தாங்கி கொள்ள முடியாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இது தற்கொலை போன்ற தவறான எண்ணத்தை அவர்களுக்கு ஏற்படுத்தி உயிரையே மாய்த்து கொள்ள செய்கிறது. மன அழுத்தம் அதிகம் ஏற்பட்டு அதனால் மன நோயாளியாக பல ஆண்கள் மாறுகின்றனர்.
இது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.



Click it and Unblock the Notifications