Latest Updates
-
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க..
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் கல்லீரல் அபாயகரமான நிலையில் உள்ளது என அர்த்தம்...!
சிறிய காய்ச்சல் இப்போதெல்லாம் வந்தாலே அது எந்த புது விதமான நோயிற்கான அறிகுறியாக இருக்கும் என்பதை நாம் யோசித்து கொண்டே இருப்போம். அந்த அளவிற்கு நோய்களின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. நோய்கள் ஒரு புறம் அதி பயங்கர சக்தி பெற்றால், மறுபுறம் நமது ஆரோக்கியம் குறைந்து கொண்டே வருகிறது.

இதனால் நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் பாதிப்பை சந்திக்கிறது. அந்த வகையில் நமது உடலின் மிக பெரிய உறுப்பாக இருக்க கூடிய கல்லீரலும் அடங்கும். இதனை பற்றி நாம் கண்டுகொள்வதே இல்லை. ஒரு சில சாதாரண அறிகுறிகள் கூட உங்களின் கல்லீரலை பாதித்து உயிருக்கே ஆபத்தை தரும். அவை என்னென்ன என்பதை இனி அறிந்து கொள்வோம்.

கல்லீரல் என்ன செய்யும்..?
கல்லீரல் மூன்று முதன்மையான செயல்பாட்டை செய்கிறது. அழுக்குகளை நீக்குவதும், பித்த நீரை உற்பத்தி செய்வதும், ஊட்டசத்துக்களை சேகரித்து வைப்பதும் என இந்த முக்கிய செயல்திறனை செய்வதே கல்லீரல் தான். இதில் ஏதாவது கோளாறு நடந்தால் மற்ற உறுப்புகளும் படிப்படியாக அபாய நிலைக்கு வந்து விடும்.

தோல் எரிச்சல்
நீண்ட நாட்களாக உங்களின் தோலில் அரிப்பு ஏற்பட்டால் அதனை சாதரணமாக விட்டு விடாதீர்கள். இவை மிக பெரிய ஆபத்தை கூட உங்களுக்கு தரும். குறிப்பாக கல்லீரல் மோசமான நிலையில் இருந்தால் உடலில் நீண்ட நாட்கள் அரிப்பு ஏற்படும். அத்துடன் சருமமும் வறண்டு போகும்.

மூளை அவ்வளவுதான்..!
கல்லீரல் பிரச்சினை உள்ளவர்களுக்கு மூளையின் நரம்புகள் செயலிழக்க கூடும். குறிப்பாக நமது ஞாபக சக்தி மெல்ல மெல்ல குறைய தொடக்கி விடும். ஏனெனில், ரத்தத்தில் உள்ள நச்சு தன்மையை கல்லீரல் நீக்க விட்டால் இந்த நிலை கட்டாயம் ஏற்பட கூடும்.

ஆண் மார்பகம் என்னவாகும்..?
நீங்கள் ஆணாக இருந்தால் உங்களின் கல்லீரல் ஆபத்தான நிலையில் உள்ளது என்பதை நாம் எளிதில் அறிந்து கொள்ளலாம். அதாவது, ஆண்களின் மார்பகங்கள் பெரியதாகினால் கல்லீரல் கோளாறாக உள்ளது என்று அர்த்தமாம். அத்துடன் ஹார்மோன்கள் பிரச்சினையும் இதனால் ஏற்படுமாம்.

கையிலும், கால்களிலும்...
உங்கள் கல்லீரல் அபாயகரத்தை தொட்டுள்ளது என்பதை இந்த அறிகுறிதான் உறுதி செய்கிறது. கை மற்றும் கால்களின் பாதங்களில் சிவப்பாக இருந்தால் கல்லீரலில் ஏதேனும் நோய் வந்துள்ளது என்று அர்த்தம். எனவே, கைகளும், பாதங்களும் சிவப்பாக இருந்தால் கண்டு கொள்ளாமல் இருந்து விடாதீர்கள்.

மஞ்சள் காமாலை
கல்லீரல் பாதிப்புகளை உங்களின் நிறமே காட்டி கொடுத்து விடும். கண்களோ அல்லது தோலோ மஞ்சளாக இருந்தால் அது கல்லீரல் பிரச்சினைக்கான அறிகுறியாகும். இதே நிலை நீடித்தால் மரணம் கூட சம்பவிக்கலாம்.

அதிக சோர்வு
எந்த ஒரு வேலையும் செய்யாமல் நீங்கள் சோர்வடைந்தால் அதற்கு பல வித காரணிகள் இருக்கலாம். ஆனால், இது கல்லீரல் கோளாறாக உள்ளது என்பதையும் உணர்த்துகிறதாம். மூளைக்கு அனுப்ப கூடிய ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படுவதால் இத்தகைய நிலை ஏற்படுகிறது.

அடர்ந்த சிறுநீர்
சிறுநீரக பிரச்சினை இருந்தாலே நமது உடல் மோசமான நிலையை நோக்கி செல்கிறது என்று அர்த்தம். சிறுநீர் அடர்ந்து காணப்பட்டால் அவை கல்லீரல் நோயிற்கான அறிகுறியாக இருக்கும். எனவே, இவ்வாறு இருந்தால் மருத்துவரை உடனே அணுகுங்கள்.

உடல் பருமன்
திடீரென்று உங்களின் உடல் எடை கூடினால் அது பல வகையான ஆபத்துகளுக்கான அறிகுறியும். அதில் முதன்மையானது இந்த கல்லீரல் பிரச்சினை. திடீரென்று உடல் எடை கூடுபவர்களுக்கு ரத்தத்தின் ஓட்டம் தடை செய்யப்பட கூடும். மேலும், சில சமயங்களில் இது தலைகீழாக நடக்கலாம்.

கண் பாதிப்பு
கண்கள் அதிக வறட்சியாகவோ அல்லது வாய் வறட்சியாகவோ இருந்தால் அவை பல பாதிப்புகளை நமக்கு தருகின்றது. கண்ணில் இது போன்ற பாதிப்புகள் இருந்தால் அதற்கு கல்லீரல் பிரச்சினையும் ஒரு முக்கிய காரணமாகும். இதுவே நீண்ட நாட்கள் இருந்தால் அதிக பாதிப்பு உள்ளது என அர்த்தம்.

ஒல்லி பெல்லி..!
உங்கள் உடலில் அசாதாரணமாக ஏற்பட கூடிய எந்த வித மாற்றமும் ஆபத்தை ஏற்படுத்த கூடும். உதாரணத்துக்கு உடலின் எடை திடீரென்று குறைந்தால் அதுவும் ஆபத்திற்கான எச்சரிக்கை மணியாகும். எனவே, உடல் எடை உடனே குறைவு ஏற்பட்டாலும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட கூடும்.
மேற்சொன்ன அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் மருத்துவரை அணுகுங்கள். மேலும், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.



Click it and Unblock the Notifications











