Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
இதை தினமும் உட்கொண்டால், 90% மார்பக புற்றுநோயில் இருந்து விடுபடலாம் என்பது தெரியுமா?
சமீபத்திய ஆய்வு ஒன்றில், புற்றுநோய்க்கும், ஒரு குறிப்பிட்ட வைட்டமினுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த வைட்டமின் குறைபாட்டால் தான் மார்பக புற்றுநோய் வருவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அமைதியாக மனிதர்களைத் தாக்கும் ஒரு கொடிய நோய் தான் புற்றுநோய். இந்த புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. அதில் பெண்களைத் தாக்குவது தான் மார்பக புற்றுநோய். தற்போது மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது. ஏனெனில் பலருக்கும் மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள் சரியாக தெரிவதில்லை.

மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சிகிச்சை மேற்கொண்டால் விரைவில் குணப்படுத்தலாம். ஆனால் சமீபத்திய ஆய்வு ஒன்றில், புற்றுநோய்க்கும், ஒரு குறிப்பிட்ட வைட்டமினுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த வைட்டமின் குறைபாட்டால் தான் மார்பக புற்றுநோய் வருவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வைட்டமின் டி
மார்பக புற்றுநோயுடன் தொடர்பு கொண்டிருப்பது வைட்டமின் டி சத்து தான். இந்த வைட்டமின் டி சத்து ஒருவரது உடலில் குறைவாக இருந்தால், புற்றுநோய் வருவதற்கான அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

வைட்டமின் டி-யின் இதர நன்மைகள்
வைட்டமின் டி சத்து உடலில் போதுமான அளவில் இருந்தால், இதய நோய், சர்க்கரை நோய் போன்ற பல்வேறு நோய்கள் தடுக்கப்படும். ஆனால் புற்றுநோய்க்கு இந்த வைட்டமின் டி சத்து தான் எதிரி. இது பல்வேறு ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

வைட்டமின் டி மார்பக புற்றுநோயை 90% தடுக்குமா?
வைட்டமின் டி சத்திற்கு மார்பக புற்றுநோயைத் தடுக்கும் சக்தி உள்ளது. புற்றுநோயில் இருந்து ஒருவர் விடுபட வேண்டுமானால், ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது, உடற்பயிற்சிகளை செய்வது, சரியான அளவு தூக்கம் போன்றவற்றுடன், மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டும் இருக்க வேண்டியது அவசியம்.

இச்சத்து மார்பக புற்றுநோய் செல்களை அழிக்குமா?
கலிபோர்னியா பல்கலைகழகத்தைச் சேர்ந்த மருந்துவர்கள், வைட்டமின் டி சத்து ஒவ்வொரு வகையான மார்பக புற்றுநோய்க்கனா எபிதீலியல் செல்களை அழிப்பதாக கூறுகின்றனர்.

வைட்டமின் டி உணவுகள்
ஏற்கனவே மார்பக புற்றுநோய் இருப்பவர்கள், இந்த வைட்டமின் டி சத்தை உட்கொண்டால், அது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைக்கும். புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தடுக்கப்பட்டால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைய ஆரம்பித்துவிடும்.
இந்த வைட்டமின் டி சத்து மீன்கள், ஆரஞ்சு ஜூஸ், சோயா கால், சீஸ், முட்டை மஞ்சள் கரு போன்றவற்றில் அதிகம் உள்ளது. மேலும் அதிகாலை சூரியக்கதிர்கள் சருமத்தின் மீது படுமாறு உடற்பயிற்சியை செய்து வந்தாலும், உடலில் வைட்டமின் டி சத்தின் அளவு அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications