ஆண்களுக்கே தெரியாத ஆண்குறியைத் தாக்கும் சில மோசமான பிரச்சனைகள்!

Posted By:
Subscribe to Boldsky

ஆண்கள் பலருக்கும் தங்களது ஆண்குறியில் எம்மாதிரியான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று தெரியாது. ஒருவேளை அப்படியே ஆண்குறியில் ஏற்படும் மோசமான பிரச்சனை என்றால் அது விறைப்புத்தன்மை பிரச்சனையாக மட்டும் தான் இருக்கும் என்று நினைத்துவிட வேண்டும்.

இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள ஆண்குறியில் ஏற்பட வாய்ப்புள்ள சில மோசமான பிரச்சனைகளைப் படித்தால், நீங்களே அதிர்ச்சி அடைவீர்கள். சரி, இப்போது அந்த பிரச்சனைகள் என்னவென்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆண்குறி முறிவு

ஆண்குறி முறிவு

ஆண்குறியில் எலும்புகள் ஏதும் இல்லை. ஆகவே ஆண்குறி முறிவு ஏற்படும் என்பது வெறும் கட்டுக்கதை என்று நினைக்க வேண்டாம். ஆண்குறியில் உள்ள உருளை வடிவ குழாய்களில் இரத்தம் முழுமையாக நிரப்பப்படும் போது, ஆண்குறியில் விறைப்பு ஏற்படுகிறது. அந்நேரத்தில் மிகவும் தீவிரமான உடலுறவில் ஈடுபட்டால், அது அக்குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்தி வீக்கம் மற்றும் முறிவை ஏற்படுத்தக்கூடும்.

ஆண்குறி வளைவு பிரச்சனை

ஆண்குறி வளைவு பிரச்சனை

ஆண்குறியில் பைரோனி என்னும் நோய் ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்நோய் தாக்கினால், ஆண்குறியில் ப்ளேக் உருவாகி, ஆண்குறி வளைவதோடு, வலியுடன் கூடிய விறைப்பு ஏற்படும் மற்றும் உடலுறவு கொள்வதே கடினமாக இருக்கும்.

சாக்சாபோன் ஆண்குறி

சாக்சாபோன் ஆண்குறி

இது மிகவும் அரிய நிலை. ஆண்குறியில் பாக்டீரிய தொற்றுக்கள் ஏற்படும் போது, ஆண்குறி சாக்சாபோன் போல் வளைந்தும், வீங்கியும் இருக்கும். மருந்துகள் இந்த வீக்கத்தைக் குறைக்க உதவினாலும், உடலுறவில் ஈடுபடுவது என்பது இயலாத ஒன்றாக இருக்கும்.

சிக்கிய ஆண்குறி தண்டு

சிக்கிய ஆண்குறி தண்டு

சிலருக்கு ஆண்குறி தண்டு தோலுடன் இணைந்து, விதைப்பையுடன் இணைக்கப்பட்டு உள்ளே வளரும். அதாவது ஆண்குறி இனப்பெருக்க உறுப்பில் உள்ள கொழுப்பு படலத்தால் புதைக்கப்பட்டிருக்கும். ஓர் நல்ல செய்தி என்னவெனில், இப்பிரச்சனையை அறுவை சிகிச்சையின் மூலம் சரிசெய்யலாம்.

ஃபிஸ்துலா

ஃபிஸ்துலா

மிகவும் அரிதாக புரோஸ்டேட் புற்றுநோய் சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு ஃபிஸ்துலா நிலையை சந்திக்க வாய்ப்புள்ளது. அதாவது இது சிறுநீர் கால்வாயை மலக்குடலுடன் இணைக்கும் ஒரு திசுப் பிளவு. இந்நிலையால் சிறுநீரானது, மலம் வெளியேற்றும் ஆசன வாயின் வழியே வெளியேறக்கூடும். இந்த நிலையில் இருந்து மீள முடியும். இருப்பினும் இது குணமடைய சில காலம் ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Worst Things That Can Happen To Your Penis

What do you think is the worst thing that can happen to your penis? If you think it is just erectile dysfunction, prepare to be shocked.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter