பவுடர் போடும் பழக்கம் இருக்கா? அப்ப உங்களுக்கு இந்த நோய் வர வாய்ப்பிருக்கு...

Posted By:
Subscribe to Boldsky

தற்போது மேக்கப் இல்லாத பெண்களைப் பார்ப்பது என்பதே அரிது. பெண்களின் அழகை அதிகரித்துக் காட்டும் மேக்கப், அவர்களின் சரும ஆரோக்கியத்தைப் பாதித்து, நாளடைவில் முதுமைத் தோற்றத்தைப் பெற செய்யும். அதோடு மேக்கப்பை தினமும் போடும் போது, அது உடல் ஆரோக்கியத்திற்கு உலை வைத்துக் கொண்டிருக்கிறது என்று தெரியுமா?

எவ்வளவு தான் விலையுயர்ந்த மேக்கப் பொருட்களாக இருந்தாலும், அவற்றில் சேர்க்கப்படுவது கெமிக்கல் என்பதால், நிச்சயம் அதன் தாக்கத்தை சந்தித்து தான் ஆக வேண்டும். அழகு சாதனப் பொருட்களில் சேர்க்கப்படும் பல்வேறு கெமிக்கல்கள் நாளடைவில் சருமத்தினுள்ளே ஆழமாக நுழைந்து, இரத்த நாளங்களினுள் சென்று இரத்தத்துடன் கலந்து நினைத்துப் பார்க்க முடியாத அளவில் தீங்கை உண்டாக்கும் என்பது தெரியுமா?

கீழே அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதால் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆய்வு

ஆய்வு

சமீபத்திய ஆய்வு ஒன்றில், பல ஜப்பானிய குழந்தைகளின் எலும்புகளில் நச்சுமிக்க கெமிக்கல் இருப்பது தெரிய வந்தது. அதுவும் அந்த நச்சுமிக்க கெமிக்கல் கண் மையில் பயன்படுத்தப்படுபவை என்பதும் தெரிய வந்தது.

டால்க்

டால்க்

டால்க் என்னும் கனிமப் பொருள் பல்வேறு அழகு சாதனப் பொருட்களில் கார்சினோஜெனுடன் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. பல ஆய்வுகளில், டால்க் என்னும் பொருளானது கருப்பை புற்றுநோயை உண்டாக்கக்கூடியது என தெரிய வந்துள்ளது. மேலும் இந்த டால்க் பொருளானது பேபி பவுடர் மற்றும் ஃபேஸ் மாஸ்க், பவுடர் ஐ ஷேடோ, லிப்ஸ்டிக், டியோடரண்ட் போன்றவற்றில் பொதுவாக காணப்படுகிறது.

ஈயம்

ஈயம்

கடினமான இந்த பொருள் ஐ லைனர், லிப்ஸ்டிக் மற்றும் ஐ ஷேடோ போன்றவற்றில் உள்ளது. இந்த ஈயம் இரத்த நாளங்களில் நுழைந்து புற்றுநோய், மலட்டுத்தன்மை மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

பாராபீன்கள்

பாராபீன்கள்

பொதுவாக தீங்கு விளைவிக்கும் இந்த கெமிக்கல், பல அழகு சாதனப் பொருட்களில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்க சேர்க்கப்படுகிறது. பல ஆய்வுகளில் இந்த கெமிக்கல் மார்பக புற்றுநோயுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. இத்தகைய கெமிக்கல் லோசன்கள், கண்டிஷனர், ஷாம்புக்கள் மற்றும் ஷவர் ஜெல்களில் காணப்படுகின்றன.

டொலுவீன்

டொலுவீன்

இந்த கெமிக்கல் நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறு மற்றும் நரம்பு மண்டலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இத்தகைய கெமிக்கல் ஹேர் டை மற்றும் நெயில் பாலிஷ், நெயில் பாலிஷ் ரிமூவர் போன்றவற்றில் சேர்க்கப்படுகிறது.

பென்சோப்பினோன்கள்

பென்சோப்பினோன்கள்

இந்த கெமிக்கல் சரும அரிப்புக்களை ஏற்படுத்தும். இத்தகைய கெமிக்கல் பேபி சன் ஸ்க்ரீன், ஹேர் ஸ்ப்ரே, கண்டிஷனர், ஷாம்பு, நறுமண பொருட்கள், நெயில் பாலிஷ் மற்றும் லிப் பாம் போன்றவற்றில் கலக்கப்படுகிறது.

காட்மியம்

காட்மியம்

காட்மியம் என்னும் கெமிக்கல், எலும்பு நோய்கள், சிறுநீரக செயலிழப்பு மற்றும் புற்றுநோயுடன் தொடர்புடையது. இந்த காட்மியம் மிகவும் நச்சு மிக்கது. இத்தகைய கெமிக்கல் பல்வேறு விலையுயர்ந்த அழகு சாதன பொருட்களான ஐ ப்ரைமர், க்ரீம் ஐ ஷேடோக்கள் மற்றும் பவுடர் ஐ ஷேடோக்களில் உள்ளது.

குறிப்பு

குறிப்பு

ஆகவே இவ்வளவு மோசமான கெமிக்கல் நிறைந்த பொருட்களால் சரும அழகை அதிகரிப்பதற்கு பதிலாக, இயற்கை பொருட்களால் சரும அழகைப் பராமரித்து வாருங்கள். இதனால் சருமம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Happens To Your Brain, Skin and Kidneys When You Put On Too Much Makeup

Do you know what happens to your brain, skin and kidneys when you put on too much makeup? Read on to know more...
Story first published: Tuesday, December 12, 2017, 18:00 [IST]
Subscribe Newsletter