பெண்களின் பிறப்பு உறுப்புகளில் உண்டாகும் விசித்திர மாற்றங்கள்!

Written By:
Subscribe to Boldsky

நமது ஒவ்வொரு உடலுறப்பும் வயதாக வயதாக மாற்றமடைந்து கொண்டே தான் இருக்கிறது. பெண்களின் அந்தரங்கப்பகுதியானது அவர்களின் வயதையும், வளர்ச்சியையும் வெளிக்காட்டுவதாக உள்ளது. மாதவிடாய், குழந்தை பிறப்பு, மெனோபாஸ் என அனைத்தையும் வெளிப்படுத்த இது உதவியாக இருக்கிறது. பெண்கள் தங்களது பெண்ணுறுப்பில் 50 வயதில் ஏற்படும் மாற்றங்களை பற்றி வெளியில் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். ஆனால் உண்மையில் அவர்களது 50 வயதின் போது அவர்களது பெண்ணுறுப்பில் என்னென்ன மாற்றங்கள் உண்டாகிறது என்று தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முடி குறையும்

முடி குறையும்

இந்த வயதில் பெண்களுக்கு அந்தரங்கப் பகுதியில் உள்ள முடிகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். பல பெண்கள் தங்களது அந்தரங்கப் பகுதிகளில் உள்ள அனைத்து முடிகளையும் இழந்து விடுவார்கள். மெனோபாஸ் நேரத்தை நெருங்கிய பின்னர் பெண்களுக்கு உடலின் தேவையற்ற பகுதிகளில் உள்ள முடிகள் உதிர்ந்து விடும்.

சுருக்கம்

சுருக்கம்

பெண்ணுறுப்பு பகுதியில் இந்த சமயத்தில் சுருக்கம் ஏற்படும். உட்பகுதியில் அதன் பிடிப்பு தன்மையானது போகும். ஈரப்பதம் குறைந்து விடும். இதனால் பெண்களுக்கு உடலுறவின் போது அசௌகரியம் உண்டாகும். மேலும் வலியை ஏற்படுத்துவதாகவும் இருக்கும்.

சிறுநீரக பாதை

சிறுநீரக பாதை

ஈஸ்ட்ரோஜன் குறைபாடு காரணமாக, இவர்களுக்கு இந்த வயதில் சிறுநீரக பாதையில் பிரச்சனைகள் உண்டாகலாம். இவர்களுக்கு சில நேரங்களில் பாலியல் சம்பந்தப்பட்ட நோய்களும் தாக்க வாய்ப்புகள் உள்ளது.

அரிப்பு

அரிப்பு

பெண்ணுறுப்பில் ஈரப்பதம் குறைந்து காணப்படுவதால் அவர்களுக்கு அரிப்புகள் உண்டாகலாம். உடலுறவில் அடிக்கடி ஈடுபடுபவர்களுக்கு ஈரப்பதம் சரியான அளவு இருக்கும்.

நிறம் மாறும்

நிறம் மாறும்

மெனோபாஸ் காலத்தை எட்டியுள்ள பெண்களுக்கு பெண்ணுறுப்பை சுற்றியுள்ள பகுதிகளில் இரத்த ஓட்டம் குறைதலின் காரணமாக நிறம் மாறக் கூடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

vagina changes after fifty

vagina changes after fifty