Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
உங்களுக்கு அடிக்கடி ஏப்பம் வருதா? அது ஏன் தெரியுமா?
ஏப்பம் வருவதற்கான காரணங்கள்
ஏப்பம் என்பது நமது உடலில் உள்ள வாயுக்கள் வாய் வழியாக வெளியேறும் நிகழ்வாகும். இது சாதாரணமானது தான் என்றாலும், அடிக்கடி ஏப்பம் உண்டாவது என்பது ஒரு பிரச்சனையாக மாறிவிடும். உங்களது வாழ்க்கை முறை, உணவுப்பழக்க வழக்கங்கள் ஆகியவை சரியாக இருக்க வேண்டியது அவசியம்.

கொழுப்பு உணவுகள்
நீங்கள் அடிக்கடி கொழுப்பு நிறந்த உணவுகளான எண்ணெய்யில் பொரித்த உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்களை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வது அடிக்கடி வரும் ஏப்பத்திற்கு காரணமாக அமைகிறது.

நேரம் தவறல்
நீங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பதால், உங்களது உடலில் உணவுக்கான இடத்தை வாயு நிரப்பிவிடுகிறது. இதனாலும் ஏப்பம் அடிக்கடி வரும்.

வாயு உணவுகள்
இரவு நேரத்தில் ப்ரோக்கோலி, காளிஃபிளவர், முளைக்கட்டிய பயிர்கள் போன்ற வாயுவை உற்பத்தி செய்யும் உணவுகளை சாப்பிடுவது ஏப்பம் வருவதற்கு காரணமாக உள்ளது.

வேகமாக சாப்பிடுதல்
நாம் சாப்பிடும் போது உணவுடன் சேர்ந்து சிறிது காற்றும் உள்ளே சென்றுவிடுகிறது. நாம் அலுவலகத்திற்கு செல்லும் போது அவசர அவசரமாக சாப்பிடுவதாலும் கூட வாயு உள்ளே சென்றுவிடுகிறது.

வயிற்றுப்புண்
அதிகப்படியான ஏப்பம் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருந்தால், வயிற்றில் புண் இருக்கிறது என்று அர்த்தமாகும். இதனால் கடுமையான வயிற்று வலியும் உண்டாகும்.

மலச்சிக்கல்
மலச்சிக்கல் பிரச்சனையானது பல பிரச்சனைகளுக்கு அடிக்கல்லாக இருக்கிறது. நீண்ட நாட்களாக ஒருவருக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் அவர்களுக்கு அடிக்கடி ஏப்பம் உண்டாகும். இவர்கள் அதிகமாக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது.

மனபிரச்சனை
நீண்ட நாட்களாக மன அழுத்தம், கஷ்டம், சோகமாகவே இருப்பது, மன இறுக்கம் போன்ற பிரச்சனைகள் இருந்தால், ஏப்பம் அடிக்கடி வரும். எனவே மனதை எப்போதும் மகிழ்ச்சியாகவே வைத்துக்கொள்வது நல்லது.

அஜீரணம்
அஜீரண கோளாறுகள் மற்றும் குடலியக்க பிரச்சனைகளால் ஒருவருக்கு அடிக்கடி ஏப்பம் உண்டாகும்.



Click it and Unblock the Notifications