Latest Updates
-
இன்றைய ராசிபலன் 25 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமும், அதிர்ஷ்டமும் வீட்டை தேடிவருமாம்...! -
1 வருடம் கழித்து மீன ராசிக்கு செல்லும் புதன்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கப்போகுது... -
Tamil Nadu Election 2026: தேர்தல் பிரச்சாரங்களின் போது அரசியல்வாதிகள் ஏன் நீர்மோரை விரும்புகிறார்கள்? -
1 கப் கோதுமை மாவு, 1 ஆப்பிள், 1 வாழைப்பழம் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. -
மங்களாதித்ய ராஜயோகத்தால் ஏப்ரலில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது... -
கொளுத்தும் வெயிலுக்கு இப்படி தக்காளி ரசம் வெச்சு சாப்பிடுங்க.. ருசியாவும், இதமாவும் இருக்கும்... -
April Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஏப்ரல் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
World Tuberculosis Day 2026: உங்ககிட்ட இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப காசநோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
சந்திர-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் வைபவ லட்சுமி ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு பணம் குவியும்..! -
நெல்லூர் வெங்காய கார சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. 1 வாரமானாலும் கெட்டுப்போகாது..
ஆண்களே! இதோ உங்க விறைப்புத்தன்மை குறைபாட்டை முற்றிலும் போக்கும் சில நாட்டு வைத்தியங்கள்!
இங்கு விறைப்புத்தன்மை குறைபாட்டில் இருந்து விடுவிக்கும் சில நாட்டு வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
விறைப்புத்தன்மை குறைபாடு என்பது உடலுறவின் போது ஒரு ஆணால் நீண்ட நேரம் சந்தோஷத்தை அனுபவிக்க முடியாமல் போகும் நிலையாகும். அதாவது ஆண்கள் துணையுடன் உடலுறவு கொள்ளும் போது உச்சக்கட்ட இன்பத்தை அடையும் தருணத்தில் விந்தணு வெளியேறும் தருணத்தில் வெளியேற்ற முடியாமல் போகும்.

ஆண்கள் இப்படி விறைப்புத்தன்மை குறைபாட்டினை சந்திக்க பல காரணங்கள் உள்ளன. அதில் ஆண்குறிக்கு செல்லும் இரத்த நாளங்கள் குறுகி இருப்பது, ஹார்மோன் மாற்றங்கள், மன இறுக்கம், பதற்றம், உறவுகளில் பிரச்சனை அல்லது ஏதேனும் காயங்கள் போன்றவை அடங்கும். உலகில் நிறைய ஆண்கள் இந்த விறைப்புத்தன்மை பிரச்சனையை சந்திக்கிறார்கள்.
ஆண்கள் சந்திக்கும் விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கு நம் நாட்டில் ஏராளமான நாட்டு வைத்தியங்கள் உள்ளன. இக்கட்டுரையில் ஆண்களின் விறைப்புத்தன்மை குறைப்பாட்டினைப் போக்கும் சில எளிய நாட்டு வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

முருங்கைப்பூ பால்
* ஒரு டம்ளர் பாலில் ஒரு கையளவு முருங்கைப்பூ சேர்த்து நன்கு கொதித்ததும் இறக்கி வடிகட்டி தேன் கலந்து வெதுவெதுப்பான நிலையில் குடிக்க வேண்டும்.
* இப்படி 1-2 மாதம் தொடர்ந்து குடித்து வர, விறைப்புத்தன்மை குறைபாட்டில் இருந்து முழுமையாக விடுபடலாம்.

கேரட், தேன் மற்றும் முட்டை
* ஒரு முட்டையை நன்கு வேக வைத்து இரண்டாக வெட்டி, அதன் மேல் 2 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் துருவிய ஒரு கேரட்டைத் தூவி, தினமும் சாப்பிடுங்கள்.
* இந்த கலவையை தினமும் என தொடர்ந்து 35-40 நாட்கள் சாப்பிட்டு வர, விறைப்புத்தன்மை குறைபாடு நீங்கி, பாலியல் வாழ்க்கை மேம்படும்.

இஞ்சி மற்றும் தேன்
இஞ்சியை சுத்தம் செய்து, சாறு எடுத்துக் கொள்ளுங்கள். பின் 2 டீஸ்பூன் இஞ்சி சாற்றுடன் 2 டீஸ்பூன் தேன் கலந்து, தினமும் மூன்று வேளை என 1 மாதம் உட்கொள்ளுங்கள். இதனால் விறைப்புத்தன்மை குறைபாட்டிலிருந்து விரைவில் விடுபடலாம்.

பேரிச்சம்பழம் மற்றும் நட்ஸ்
* ஒரு கையளவு பேரிச்சம் பழத்துடன், பிஸ்தா, பாதாம் போன்றவற்றை சரிசம அளவில் எடுத்துக் கொண்டு, மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு டம்ளர் பாலில் இந்த பொடியை தேவையான அளவு கலந்து குடிக்க வேண்டும். இப்படி ஆண்கள் தினமும் செய்து வந்தால், விறைப்புத்தன்மை குறைபாடு நீங்குவதோடு பாலியல் வாழ்க்கையும் சிறக்கும்.

கருப்பு நிற உலர் திராட்சை
* 300 கிராம் நல்ல தரமான கருப்பு நிற உலர் திராட்சையை வெதுவெதுப்பான நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் 200 மிலி பாலில் கழுவிய உலர் திராட்சையை போட்டு கொதிக்க வைத்து இறக்கி, பாலுடன் அந்த திராட்சையையும் சாப்பிடுங்கள்.
* இப்படி ஒரு நாளைக்கு மூன்று வேளையும் உட்கொள்ள விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கு நல்ல பலன் கிடைக்கும்.

வெண்டைக்காய் மற்றும் கற்கண்டு
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலுடன் 5 கிராம் வெண்டைக்காய் பவுடரை சேர்த்து, பின் அதோடு 2 டீஸ்பூன் கற்கண்டு சேர்த்து கலந்து தினமும் குடித்து வர, விறைப்புத்தன்மை பிரச்சனை நீங்கும்.

அஸ்பாரகஸ் வேர்
15 கிராம் உலர்ந்த அஸ்பாரகஸ் வேரை ஒரு கப் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, ஆற வைத்து பருக வேண்டும். இப்படி தயாரித்த பாலை ஒரு நாளைக்கு இரண்டு முறை பருகி வர சிறந்த பலனை கண்கூடாக பார்க்க முடியும்.

குங்குமப்பூ
* ஆண்கள் குங்குமப்பூவை உணவில் சேர்த்து கொள்வதன் மூலன் அவர்களின் பாலுணர்ச்சி அதிகரிக்கும்.
* வேண்டுமானால் குங்குமப்பூவை மசாஜ் எண்ணெயுடன் சேர்த்து உடலை மசாஜ் செய்வதன் மூலம் நரம்புகள் ரிலாக்ஸ் ஆவதுடன், பாலியல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

பூண்டு
* விறைப்புத்தன்மை குறைபாடு உள்ள ஆண்கள் தினமும் 1- 2 பல் பூண்டு சாப்பிட நல்ல தீர்வு கிடைக்கும்
* இல்லையெனில் பூண்டை பேஸ்ட் செய்து, முழு தானிய பிரட்டில் தடவி உட்கொள்வதன் மூலம் பலன் கிடைக்கும்.

வெள்ளை வெங்காயம்
* ஒரு வெள்ளை வெங்காயத்தை தோலுரித்து அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
* பின் ஒரு வாணலியில் 1 டீஸ்பூன் வெண்ணெய் ஊற்றி, அதில் அரைத்த வெங்காய பேஸ்ட்டை சேர்த்து வதக்கி இறக்கிக் கொள்ளுங்கள்.
* பின்பு அதில் 1 ஸ்பூன் தேன் கலந்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட விறைப்புத்தன்மை பிரச்சனை அகலும்.

உடற்பயிற்சி
மனநிலை ரிலாக்ஸாக இருந்தால் தான், பாலியல் வாழ்வில் சிறப்பாட ஈடுபட முடியும். அளவுக்கு அதிகமான மன பதற்றம், படுக்கையில் மோசமானவராகவே காட்டும். ஆகவே மனம் மற்றும் உடலை ரிலாக்ஸ் செய்யும் உடற்பயிற்சி மற்றும் மூச்சு பயிற்சிகளை அன்றாடம் செய்வதால், பாலியல் வாழ்க்கை பாழாவதைத் தடுக்கலாம்.

புகையைத் தவிர்க்கவும்
புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால், அதை உடனே நிறுத்துங்கள். ஒருவேளை உடனே நிறுத்த முடியாமல் இருப்பவராயின், நிக்கோட்டின் சூயிங் கம் அல்லது எலக்ட்ரிக் சிகரெட்டுக்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மது வேண்டாம்
உடலுறவில் ஈடுபடும் முன் மது அருந்தும் பழக்கத்தைக் கொள்ளாதீர்கள். ஏனெனில் இது பாலியல் இயக்கத்தைப் பலவீனப்படுத்தி, பாலியல் வாழ்க்கையை பாழாக்கும்.

சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்களில் உள்ள வைட்டமின் சி மற்றும் க்யூயர்சிடின் இதய நோய்களின் தாக்கத்தைக் குறைப்பதோடு, விறைப்புத்தன்மை குறைபாட்டையும் தடுக்கும். ஆகவே விறைப்புத்தன்மை பிரச்சனை உள்ள ஆண்கள் சிட்ரஸ் பழங்களை அன்றாட உணவில் சேர்க்க, அதன் தீவிரம் குறைந்து சரியாகும்.

கடல் சிப்பி
கடல் சிப்பியில் உள்ள ஜிங்க் சத்து, டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிக்கும். மேலும் இதனுள் உள்ள சத்துக்கள் உடலின் அனைத்து பகுதிகளிலும் இரத்த ஓட்டத்தை சீராக செல்ல வழிவகுத்து, பாலியல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்யும்.

பீட்ரூட்
ஆண்கள் பீட்ரூட்டை தங்களது டயட்டில் அடிக்கடி சேர்த்து வந்தால், உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிப்பதுடன், விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்படாமல், படுக்கையில் சிறப்பாக செயல்படலாம்.

ப்ளூபெர்ரி
ப்ளூபெர்ரியில் க்யூயர்சிடின், ரெஸ்வெட்ரால், புரோ அந்தோசையனிடின் மற்றும் வைட்டமின் சி போன்றவை ஏராளமான அளவில் உள்ளது. இச்சத்துக்கள் விறைப்பு பிரச்சனையைப் போக்கி, உடலுறவின் போது நீண்ட நேரம் சந்தோஷத்தை அனுபவிக்க உதவும்.

டார்க் சாக்லேட்
டார்க் சாக்லேட்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ப்ளேவோனாய்டுகள், எப்போது நல்ல மனநிலையுடன் வைத்திருக்கும். விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கு மோசமான மனநிலையுடன் இருப்பதும் ஓர் காரணம் என்பதால், தினமும் சிறிது டார்க் சாக்லேட் சாப்பிடுங்கள். இதனால் விறைப்புத்தன்மை பிரச்சனை வருவதையே தடுக்கலாம்.

மாதுளை
மாதுளையின் சிறப்பு என்னவென்றால் விறைப்புத்தன்மையின் வலிமை மற்றும் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிக்கும். மேலும் இதை ஒரு நேச்சுரல் வயாகரா என்றே சொல்லலாம். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஹார்மோன்களின் ஆரோக்கியம் மற்றும் இரத்த சுழற்சியை அதிகரிக்கும்.

வைட்டமின் ஏ உணவுகள்
வைட்டமின் ஏ நிறைந்த உணவுகள் பாலியல் குறைபாட்டைக் குறைக்க உதவும். எனவே ஆண்கள் அன்றாட உணவில் வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை சேர்த்து வந்தால், விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்படுவதையே தடுக்கலாம்.

நார்ச்சத்துள்ள உணவுகள்
விறைப்புத்தன்மை குறைபாடு உள்ள ஆண்கள் நீரில் கரையும் நார்ச்சத்துக்களான பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் சாப்பிட, இப்பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.



Click it and Unblock the Notifications











